நல்லா ஓட கூடிய பல கோடி ரூபா காரை வேணும்னே நொறுக்கிய இளைஞர்... காரணத்தை கேட்டு கொதிக்கும் கார் லவ்வர்கள்!
லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்தின் உலக புகழ்பெற்ற கார் மாடல்களில் உருஸ் (Urus SUV)-ம் ஒன்று. இந்த காரின் விலை பல கோடிகள் ஆகும். இந்தியாவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 3 கோடிக்கும் அதிகமாக உள்ளது. ஆன்-ரோடில் இதன் விலை நான்கு கோடியைத் தாண்டும்.
இத்தகைய விலை உயர்ந்த காரையே இளைஞர் ஒருவர் அசால்டாக சுக்கு நூறாக நொறுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ பார்ப்போரை பதைபதைக்க செய்யும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, சொகுசு கார் பிரியர்களை இந்த வீடியோ பெருத்த அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கின்றது என்றே கூறலாம்.

அப்படியான சம்பவத்தையே இளைஞர் ஒருவர் செய்திருக்கின்றார். விபத்தின் காரணமாக சொகுசு கார் நொறுங்கியது என நினைத்துக் கொள்ள வேண்டும். அது, வேண்டும் என்றே நொறுக்கப்பட்டு உள்ளது. காரை நொறுக்கிய அந்த இளைஞர் ரஷ்யாவைச் சேர்ந்த மிக்கைல் லிட்வின் ஆவார். இவர் ஓர் யுட்யூப் சேனலை நடத்தி வருகின்றார்.
இந்த நிலையிலேயே உருஸ் காரை அவர் ஓர் காலியான மைதானத்தில் வைத்து நொறுக்கி இருக்கின்றார். சொகுசு கார் ஓடாது அல்லது பழுதற்றதாக இருக்கும், எனவேதான் அது நொறுக்கப்பட்டு இருக்கின்றது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதுதான் கிடையாது. அந்த கார் நல்ல இயக்க நிலையில் இருக்கக் கூடிய ஓர் சொகுசு வாகனம் ஆகும்.

மேலும், அதனை யுட்யூபர் இயக்குவதையும் நம்மால் வீடியோவில் பார்க்க முடிகின்றது. இதன் பின்னரே அந்த வெள்ளை நிற கார் நொறுக்கப்பட்டு இருக்கின்றது. அந்தரத்தில் தொங்க விடப்பட்டிருந்த கருப்பு நிற டேங்கை விழ செய்தே இளைஞர் காரை நொறுக்கி இருக்கின்றார். டேங்க் முழுவதும் எனர்ஜி ட்ரிங்க் நிரப்பப்பட்டிருந்து குறிப்பிடத்தகுந்தது.
இந்த எனெர்ஜி ட்ரிங்க் நிறுவனமும் மிக்கைல் லிட்வின் சொந்தமானதே. இதை புரமோட் செய்யவே அவர் டேங்க் முழுவதும் எனர்ஜி ட்ரிங்கை நிரப்பி, அதை அந்தரத்தில் இருந்து உருஸ் கார் மீது விழச் செய்து வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கின்றார். லிட் எனெர்ஜி ட்ரிங்கே அவருடைய தயாரிப்பாகும்.

தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் பொருட்களை புரமோட் செய்ய வெவ்வேறு வழிகளில் பணத்தை கோடி கோடியாக கொட்டி வருகின்றநிலையில், முற்றிலும் மாறுபட்ட வழியை மிக்கைல் லிட்வின் தேர்வு செய்திருக்கின்றார். ஆனால், இணைய வாசிகளின் மைண்ட் வாய்ஸோ, உங்க விளம்பரத்துக்கு இந்த கார்தான் கிடைச்சுதா என புலம்ப செய்திருக்கின்றது.
நம் நாட்டில் உள்ள பல செலிபிரிட்டிகள் இந்த சொகுசு காரையே பயன்படுத்தி வருகின்றனர். ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடங்கி இன்னும் பல நடிகர்கள், குறிப்பாக, இந்தி திரை நட்சத்திரங்கள் பலர் லம்போர்கினி உருஸ் காரை பயன்படுத்தி வருகின்றனர். ஃபகத் ஃபாஸில், பிரித்விராஜ்னு இன்னும் பல பிரபலங்களிடத்திலும் இந்த கார் பயன்பாட்டில் இருக்கின்றது.

மேலும், பலரின் கனவு வாகனமாகவும் லம்போர்கினி உருஸ் இருக்கின்றது. இத்தகைய தரமான காரையே யுட்யூபர் தனது புரமோஷன் வீடியோவிற்காக நொறுக்கி இருக்கின்றார். இந்த வீடியோ தற்போது இணைத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. லம்போர்கினி உருஸ் ஓர் அதிக பவர்ஃபுல்லான எஸ்யூவி ரக காராகும்.
இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 650 பிஎஸ் பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும். 8 ஸ்பீடு இசட்எஃப் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த மோட்டாருடன் வழங்கப்பட்டு உள்ளது.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 305 கிமீ ஆகும். அதேவேளையில் வெறும் 3.6 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை உருஸ் எட்டிவிடும். இதனால்தான் இதனை உலகின் அதிக வேகத்தில் பயணிக்கும் எஸ்யூவி கார் என குறிப்பிடுகின்றனர். இந்த திறனே உலகின் பிரபலமான வாகனமகாவும் உருஸை மாற்றி இருக்கின்றது.
இந்த காருக்கு இந்தியா தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளில் பலமடங்கு அதிக டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதில் சொகுசு வசதிகளும் பாரிய அளவில் வழங்கப்பட்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமாதிரியான ஓர் வாகனத்தையே யுட்யூபர் துளியும் தயக்கம் இன்றி நொறுக்கி இருக்கின்றார். இந்த வீடியோவால் பலர் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டனர். மேலும், பலர் யுட்யூபரை வசைபாடி கமெண்ட் செய்த வண்ணம் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
