சர்வர் பெண்ணுக்கு விலை உயர்ந்த காரை டிப்ஸாக வழங்கிய யுட்யூபர்... காரோட விலையை கேட்டா ஸ்டண் ஆயிருவீங்க!
டிப்ஸாக 100-200 ரூபா கொடுத்து கேள்விப் பட்டிருப்பீங்க, ஏன், ஆயிரக் கணக்கான ரூபாயைகூட டிப்ஸாக வழங்கியது பற்றி அறிந்திருப்பீர்கள். காரை டிப்ஸாக வழங்கியது பற்றி இதற்கு முன்னாடி கேள்விப்பட்டிருக்கீங்களா? அப்படியான ஓர் சம்பவே தற்போது அரங்கேறி இருக்கின்றது. யுட்யூபர் ஒருவர் தான் சாப்பிட சென்ற ஹோட்டலில், உணவு பரிமாறும் இளம் பெண் ஒருவருக்கு தன்னுடைய விலையுயர்ந்த டொயோட்டா காரை டிப்ஸாக வழங்கி ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார்.
இந்த வீடியோவே தற்போது இணையத்தில் காட்டு தீயைபோல் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. சினிமா நடிகர்களுக்கு இணையான சொகுசு வாழ்க்கையை வாழக் கூடியவர்களாக யுட்யூபர் வலம் வரத் தொடங்கி இருக்கின்றனர். இதற்கு யுட்யூப் தளமே சான்றாக இருக்கின்றது. லட்சம் தொடங்கி கோடிக் கணக்கான ரூபாயை மாத வருமானமாக யுட்யூப் வாயிலாக யுட்யூபர்கள் ஈட்டு வருகின்றனர்.

இந்த வருமானத்தை மேலும் இரட்டிப்பாக்கும் விதமாக, அதாவது, தங்களுடைய பார்வையாளர்கள் மற்றும் ஃபாலோவர்களின் எண்ணிக்கையைக் கூட்டும் விதமாக சற்று வித்தியாசமான செயல்களை யுட்யூபர்கள் செய்வது உண்டு. அந்தவகையிலேயே மிஸ்டர் பீஸ்ட் எனும் யுட்யூப் சேனலைச் சேர்ந்த ஜிம்மி டொனால்ட்சன் காரை டிப்ஸாக வழங்கி அனைவரையும் ஆச்சரியமடையச் செய்திருக்கின்றார்.
அவர் அண்மையில் ஓர் உணவகத்திற்கு சாப்பிட சென்றிருக்கின்றார். அங்கு தனக்கு உணவு பரிமாற வந்த பணி பெண்ணிடம், இதுவரை நீங்கள் வாங்கிய உச்சபட்ச டிப்ஸ் தொகையின் மதிப்பு எவ்வளவு என கேட்டிருக்கின்றார். அதற்கு அந்த பெண் 50 டாலர்கள் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, "யாராவது உங்களுக்கு காரை டிப்பாக தந்திருக்கின்றார்களா?, இந்தாங்க நான் தருகிறேன்", என கூறி தன்னுடைய விலை உயர்ந்த ஆடம்பர காரின் சாவியை இளம் பெண்ணிடம் வழங்கினார்.

இதை சற்றும் எதிர்பார்த்திராத அந்த பெண், சில நிமிடங்கள் அப்படியே அசையாமல் நிற்பதையும், ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்வதையும் நம்மால் காண முடிகின்றது. இதுகுறித்த வீடியோவை தனது டிக் டாக் கணக்கு வாயிலாகவும் ஜிம்மி டொனால்ட்சன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவே தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது.
யுட்யூபரின் இந்த செயல் வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே செய்யப்பட்டு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். காரின் முன் பக்க பான்னெட் மற்றும் இரு பக்கவாட்டு பகுதிகளிலும் தன்னுடைய நிறுவனத்தின் லோகோக்களை யுட்யூபர் பயன்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.

யுட்யூபர் ஃபீஸ்டபிள்ஸ் எனும் புதிய சாக்லெட் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இந்த சாக்லெட் நிறுவனத்திற்கு விளம்பரம் செய்யும் விதமாகவே காரில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. அண்மையில் ஓர் யுட்யூபர் தன்னுடைய புதிய எனெர்ஜி ட்ரிங் நிறுவனத்தை விளம்பரம் செய்யும் விதமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் காரை அழிக்கும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.
ஓர் டேங்க் முழுவதும் எனெர்ஜி ட்ரிங்கை நிரப்பி அந்த டேங்கை சொகுசு கார் மீது விழ செய்து நொறுக்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே சாக்லெட் நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் விதமாக மற்றுமொரு யுட்யூபர் கார் சார்ந்து விநோத செயலை செய்திருக்கின்றார். என்னதான் இருந்தாலும் இந்த கார் பரிசளிப்பிற்கு பலரிடையே நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கின்றது.
I love MrBeast but he gave her a car with an ad on it ahahahahahhaahahahshsh pic.twitter.com/slcifjgO9i
— The BKH 💫Create More (@thebkh) March 27, 2023
வீடியோவில் யுட்யூபர் இது தனது புத்தம் புதிய கார் என கூறுவதை நம்மால் கேட்க முடிகின்றது. இதனை பரிசாக வழங்குவதற்கும் தனி மனசு வேண்டும் என்பதே பலரின் கருத்தாக இருக்கின்றது. டொயோட்டா கொரோலா காரே இளம் பெண்ணிற்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
அதன் மதிப்பு 21 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் அதன் விலை ரூ. 17.26 லட்சம் ஆகும். இத்தகைய விலை உயர்ந்த புதிய கொரோலா காரையே யுட்யூபர் டிப்ஸாக வழங்கி இருக்கின்றார், டொனால்ட்சன். இவர் பிறருக்கு பணத்தையும், பரிசு பொருளையும் வாரி வழங்குவதில் பெயர்போனவராக இருக்கின்றார். இந்த செயலுக்காகவே இவருக்கு யுட்யூபில் அதிப்படியானோரை ஃபாலோவர்களாக ஆக்கி இருக்கின்றது.
மனிதர்களுக்கு மட்டுமல்ல வாயில்லா ஜீவன்களுக்கும் இவர் பரந்த உதவியை வழங்கி வருவதாக கூறப்படுகின்றது. அண்மையில் நாய்கள் சிலவற்றை அவர் தத்தெடுத்ததாக கூறப்படுகின்றது. இவருக்கு யுட்யூபில் மட்டும் 139 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர். ஆகையால், உலகின் மிகவும் பிரபலமான யுட்யூபராக ஜிம்மி காட்சியளிக்கின்றார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவை விசிட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
காரை பிறருக்கு தானாக வழங்குவது இந்த உலகிற்கு புதிது அல்ல. ஆனால் ஹோட்டலில் பணியாற்றும் இளம் பெண்ணுக்கு டிப்ஸாக கார் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனால்தான் இந்த நிகழ்வு தற்போது உலகளவில் மிக பெரிய பேசு பொருளாகவும், ஹாட் டாபிக்காகவும் மாறி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








