ஒரு கார் கூட விற்க முடியாமல் திணறும் நிறுவனங்கள்! ஒரே அவமானமாபோச்சு!

இந்தியாவில் வரும் ஏப் 1ம் தேதிக்கு பிறகு இரண்டாம் கட்ட பிஎஸ் 6 கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. தற்போது கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் பிப்ரவரி மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளனர். இதில் நாம் கவனிக்கத் தக்க ஒரு விஷயம் என்றால் சில கார்கள் ஒரு கார் கூட கடந்த பிப்ரவரி மாதம் விற்பனையாகவில்லை என்பது தான்.

நிஸான் கிக்ஸ், ஹோண்டா ஜாஸ், ஹோண்டா டபிள்யூ ஆர் வி மற்றும் ஹூண்டாய் கோனா ஆகிய கார்கள் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை. இதில் ஹோண்டா ஜாஸ் மற்றும் டபிள்யூஆர்வி ஆகிய கார்கள் விற்பனையாகாதது ஒரு ஆச்சரியமும் இல்லை. இந்த இரு கார்களும் நீண்ட காலமாக அப்டேட் செய்யப்படவில்லை. இதனால் ஜாஸ் கார் விற்பனை கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து தற்போது விற்பனையே இல்லை என்ற நிலை வந்துவிட்டது.

ஒரு கார் கூட விற்க முடியாமல் திணறும் நிறுவனங்கள்! ஒரே அவமானமாபோச்சு!

டபிள்யூ ஆர்வி காரை பொருத்தவரை ஹோண்டா நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தற்போது அந்த காருக்கு மாற்றாக புதிய மிட்சைஸ் எஸ்யூவியை களம் இறக்கத் தயாராகி வருகிறது. இந்த கார் அமேஸ் காரின் மேம்படுத்தப்பட்டு பிளாட்ஃபார்மில் எலெக்ட்ரிக் காராகவும், கம்பஷன் இன்ஜினில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஸ்டிராங் ஹைபிரிட் பெட்ரோல் என்ற சிட்டி காரின் இன்ஜின் உடன் வருகிறது.

ஹோண்டா நிறுவனம் தற்போது அமேஸ் மற்றும் சட்டி ஆகிய இரண்டு செடான் கார்களை மட்டுமே தயாரித்து வருகிறது. இந்த இரு காரும் சேர்ந்து மொத்தம் 6,086 கார்கள் கடந்த பிப்ரவரி மாதம் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 7,187 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது விற்பனை 15 சதவீதம் குறைந்துள்ளது.

நிஸான் நிறுவனம் தனது 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் ஆகிய இன்ஜின்களை கட்டுப்பாடு காரணமா நிறுத்துகிறது. கிக்ஸ் காரையும் மொத்தமாக விற்பனையிலிருந்தே நிறுத்துகிறது. தற்போது ரெனால்ட்-நிஸான் நிறுவனத்திடம் இருக்கும் ஒரே இன்ஜின் 1.0 லிட்டர் 3 பாட் பெட்ரோல் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் மற்றும் டர்போ காஸ் ஆகியவைதான்.

நிஸான் கிக்ஸ் கார் பி0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இதை இந்நிறுவனம் நிறுத்தப்போகிறது. இதற்குப் பதிலாக இந்நிறுவனத்தின் சிஎம்எஃப்-பி பிளாட்ஃபாரத்தை முற்றிலும் லோக்கலைஸ் செய்ய முயற்சி செய்கிறது.

ஹூண்டாய் கோனா காரை பொருத்தவரை 2022ம் ஆண்டு டிசம்பரில் சர்வதேச மார்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் இந்தியாவில் இன்னும் வெளியாகவில்லை. இதில் முக்கிய அம்சம் என்றால் முழு சார்ஜில் 500 கி.மீ ரேஞ்ச் கொடுக்கிறது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, March 10, 2023, 21:00 [IST]
English summary
Zero cars sales kicks jazz wrv kona in feb 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+