இன்ஸ்சூரன்ஸ் பணத்தை அதிகமா பெற செம்ம ட்ரிக் இருக்கு!! இந்த ஆட்-ஆனை வாங்கி போடுங்க!
இந்தியாவில் கார் வாங்குபவர்களில் 95 சதவீதத்தினர் பூஜ்ஜிய தேய்மான கவரேஜை இன்ஸ்சூரன்ஸ் திட்டத்துடன் வாங்குகின்றனர் என கூறும் புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கிட்டத்தட்ட அனைத்து இந்திய கார் உரிமையாளர்களும் இந்த ஆட்-ஆனை தங்களது கார் இன்ஸ்சூரன்ஸில் சேர்க்கின்றனர். இந்த இன்ஸ்சூரன்ஸ் கவரேஜில் அப்படி என்ன உள்ளது? வாருங்கள் பார்க்கலாம்.
தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியாவின் 95 சதவீத கார் உரிமையாளர்கள் இன்ஸ்சூரன்ஸை எடுக்கும்போது இந்த ஆட்-ஆனை ஸ்டாண்டர்டாக எடுக்கின்றனர். கார் வாங்குபவர்கள் இந்தியாவில் ஏதேனும் ஒரு இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தை கட்டாயம் எடுத்தாக வேண்டும். ஆனால், ஆட்-ஆன் ஆனது உரிமையாளரின் விருப்பமே. இன்ஸ்சூரன்ஸ் திட்டத்துடன், கூடுதலாக ஒரு கவரேஜை சேர்த்தால் அதுதான் ஆட்-ஆன்.

இந்த ஆட்-ஆன்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்றுதான், பூஜ்ஜிய தேய்மானம். இந்த கவரேஜின் முக்கிய அம்சம் என்னவென்றால், காப்பீட்டு தொகையை காரின் சேதாரங்களுக்கான மதிப்பீட்டினால் குறையாமல் பெறுவதற்கு உதவுவதே பூஜ்ஜிய தேய்மான ஆட்-ஆன் ஆகும். பொதுவாக, ஆட்-ஆன்கள் உரிமையாளர் டூ உரிமையாளர் வேறுப்படும். குறிப்பிட்ட பகுதிகளில் வசிப்போர் குறிப்பாக ஒரு ஆட்-ஆனை அதிகளவில் தேர்வு செய்வர்.
அதேபோல், ஒரு சில ஆட்-ஆன்கள் கார் வாங்கும் புதியதில் மட்டுமே உரிமையாளர்களால் தேர்வு செய்யப்படும். ஆனால் அதன்பின், இன்ஸ்சூரன்ஸ் காலவதியானதால் புதுப்பிக்கும்போது அதனை சீண்ட மாட்டார்கள். ஆனால், பூஜ்ஜிய தேய்மான கவரேஜை காரை முதல்முறையாக வாங்கியதில் இருந்து பல வருடங்களுக்கு கார் உரிமையாளர்கள் இன்ஸ்சூரன்ஸ் திட்டத்துடன் வாங்குகின்றனர்.

எத்தனை வருடங்களுக்கு என்றால், சுமார் 85% வாடிக்கையாளர்கள் 3ஆம் ஆண்டு இன்ஸ்சூரன்ஸ் புதுப்பித்தல் வரையில் இந்த கவரேஜை தேர்வு செய்கின்றனர். அதாவது, வெறும் 10% கார் உரிமையாளர்கள் மட்டுமே 1, 2 வருடங்களில் இந்த ஆட்-ஆனை தேர்வு செய்வதை நிறுத்துக்கின்றனர். பூஜ்ஜிய தேய்மான ஆட்-ஆனை தேர்வு செய்யாதவர்கள் நிச்சயம் இப்படியொரு ஆட்-ஆன் இருப்பதை கேள்விப்படாதவர்களாகவே இருப்பர்.
பூஜ்ஜிய தேய்மானத்தை இந்த அளவுக்கு பலர் பரவலாக தேர்வு செய்வதற்கு காரணம், கார் உரிமையாளர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் இன்ஸ்சூரன்ஸ் தொகைகளின் சராசரியை விட, பூஜ்ஜிய தேய்மானத்தை கொண்ட கார் உரிமையாளர்களுக்கு கொடுக்கப்படும் இன்ஸ்சூரன்ஸ் தொகைகளின் சராசரி எப்போதும் அதிகமாக இருப்பதே ஆகும். இதுவே பலரை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது.

எந்த அளவிற்கு என்றால், உதாரணத்திற்கு, பூஜ்ஜிய தேய்மான கவரேஜை கொண்டில்லாத இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தில் ரூ.13,000இல் இருந்து ரூ.14,000 வரை காப்பீட்டு தொகையாக பெறுகிறோம் எனில், பூஜ்ஜிய தேய்மான ஆட்-ஆனை கொண்ட திட்டத்தில் ரூ.22,000 வரையில் காப்பீட்டு தொகையை பெற முடிகிறது. காரை வாங்கி 5 வருடங்கள் வரையில் பூஜ்ஜிய தேய்மான ஆட்-ஆனை தேர்வு செய்யலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த உலகில் எந்தவொரு பொருளும் காலப்போக்கில் தேய்மானம் அடையக்கூடியவை. இதில் கார்கள் மட்டும் என்ன விதிவிலக்கா... இதனை புரிந்துக் கொண்ட காரணத்தினால் தான் கார் உரிமையாளர்கள் பலர் பூஜ்ஜிய தேய்மானம் கவரேஜை இன்ஸ்சூரன்ஸ் திட்டத்துடன் வாங்குகின்றனர். எதிர்காலத்தில் 95% என்பது 100 சதவீதமாக முழுமை அடையும் தூரம் இல்லை.


Click it and Unblock the Notifications









