4 கோடி ரூபா செகப்பு நிற காரை அடுத்து இன்னொரு 3கோடி ரூபா காரை வாங்கிய பிரபலம்... ஒரே ஒரு ஆப்தான் பணம் கொட்டுது!
விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி ஒரு சில நாட்களே ஆகின்ற நிலையில் மற்றுமொரு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஓர் பிரபல தொழிலதிபர் வாங்கி இருக்கின்றார். அவர் யார்?, என்ன காரை அவர் வாங்கினார் என்பது பற்றிய முழு விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
வெளிய போய் வாங்கிட்டு வரவும் முடியாது, உடனே சமச்சு சாப்பிடவும் முடியாது, இந்த மாதிரியான நேரங்களில் பெரும் உதவியாக இருக்கக் கூடிய செயலியே சொமேட்டோ. இது வீடு தேடி உணவை வரவழைக்க உதவுகின்றது. அதேவேளையில் சொமேட்டோவிற்கு சொந்தமாக ஒரு ரெஸ்டாரண்ட்கூட இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இருப்பினும் உணவு டெலிவரி சேவையில் நம்பர் 1 நிறுவனமாக அது விளங்கிக் கொண்டிருக்கின்றது. வீடுகளை விட்டு வெளியேறி வெளி ஊர்களில் தங்கி வேலை பார்க்கும் இளைஞர்கள் மற்றும் சமையல் என்றால் என்ன?, என்று கேட்போருக்கும் இந்த நிறுவனம் வரபிரசாதமாக இருக்கின்றது. மேலும், நாட்டில் ஆர்டர் செய்து உணவை சாப்பிடும் கலாச்சாரம் அதிகரித்து வருவதனால் ஜொமோட்டே செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
இப்போதைய நிலவரப்படி 7 மில்லியனுக்கும் அதிகமானோர் சொமேட்டோ ஆப்பினை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிக்கும் நாம் பார்க்க இருக்கின்ற பதிவிற்கும் என்ன சம்பந்தம்?, என்கிற சந்தேகம் உங்களுக்கு தோன்றியிருக்கலாம். இதற்கு காரணம் இருக்கின்றது. ஆம், நீங்கள் சந்தேதித்தது சரிதான். இந்த நிறுவனத்தின் சிஇஓ-வும், நிறுவனருமான தீபிந்தர் கோயலே சொகுசு காரை வாங்கியவர் ஆவார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னரே இவர் ஃபெராரி ரோமா (Ferrari Roma SuperCar) எனும் மிக மிக விலையுயர்ந்த ஆடம்பர ரக காரை அவர் வாங்கி இருந்தார். அந்த காரில் தீபிந்தர் சாலையில் வலம் வந்த காட்சிகள் மிக சமீபத்திலேயே வெளியாகின.
இந்த நிலையிலேயே மற்றுமொரு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை தீபிந்தர் கோயல் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போர்ஷே 911 டர்போ எஸ் (Porsche 911 Turbo S) லக்சூரி காரையே அவர் வாங்கி இருக்கின்றார். இதன் விலை ரூ. 3.2 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

ஆன்-ரோடில் இதன் விலை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. முன்னதாக வாங்கப்பட்ட ஃபெராரி ரோமா இந்த காரை காட்டிலும் பல மடங்கு அதிக விலைக் கொண்டது ஆகும். சிவப்பு நிறம் கொண்ட ஃபெராரி ரோமா சூப்பர் காரை அவர் ரூ. 4.30 கோடிக்கும் அதிகமான விலையைக் கொடுத்தே வாங்கி இருக்கின்றார்.
இது வாங்கப்பட்ட சில தினங்களிலேயே இப்போது புதிதாக போர்ஷே 911 டர்போ எஸ் வாங்கப்பட்டு இருக்கின்றது. உலகில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக சிறந்த சூப்பர் கார் இது ஆகும். மேலும், தீபிந்தர் கோயலின் கராஜில் இணைக்கப்பட்ட நான்காவது சூப்பர் கார் இது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காரில் மிக அதிக பவரை வெளியேற்றக் கூடிய மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அது அதிகபட்சமாக 560 பிஎஸ் பவர் வரை வெளியேற்றும். 750 என்எம் டார்க்கையும் இது வெளியேற்றும். 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் பிடிகே டிரான்ஸ்மிஷன் வாயிலாக இந்த சூப்பரான பவரை அது வெளியேற்றும்.
போர்ஷே 911 டர்போ எஸ் சூப்பர் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 318 கிமீ ஆகும். மேலும், இது வெறும் 3.1 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இத்தகைய அதீத வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட சூப்பர் காரையே தீபிந்தர் கோயல் தற்போது வாங்கி இருக்கின்றார்.
இந்த காரில் 4 வீல் ஸ்டியரிங் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. இது மிக மிக குறைவான வேகத்தில்கூட மிக சிறந்த திருப்பத்தற்கு உதவியாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க தீபிந்தர் கோயல் இடத்தில் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரும் பயன்பாட்டிலும் இருக்கின்றது.
உலகின் அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட எஸ்யூவி-யாக லம்போர்கினி உருஸ் எஸ்யூவி இருக்கின்றது. இந்த திறன் காரணமாகவும், அதிக லக்சூரி அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்திற்காகவும் உலகின் தலை சிறந்த லக்சூரி எஸ்யூவி காராக இது மாறி இருக்கின்றது. உலகளவில் டிமாண்ட் மிக மிக அதிகம். இந்தியாவில் மட்டும் 200 க்கும் அதிகமானோர் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். இதன் விலை ரூ. 3 கோடிக்கும் அதிகம் ஆகும்.


Click it and Unblock the Notifications
