மாருதி கார்களை மக்கள் கண்மூடித்தனமா நம்புறாங்க!! ஒவ்வொரு நாளும் அசால்ட்டா 5000 கார் விற்பனையாகுது!

இந்தியாவில் கார்களை வாங்குவதற்கு என்றே பெரிய கூட்டம் உள்ளதை மறுப்பதற்கு இல்லை. ஏனெனில், உலகின் மிக பெரிய கார் சந்தைகளுள் ஒன்று இந்தியா ஆகும். இதன் காரணமாகவே, பல்வேறு வெளிநாட்டு கார் நிறுவனங்கள் இந்தியாவில் கார்களை விற்பனை செய்ய விருப்பப்படுகின்றன. சமீப ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு கார் நிறுவனங்கள் புதியதாக நுழைந்துள்ளன. அவற்றுடன் சேர்த்து, கடந்த 2024 மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த டாப்-10 நிறுவனங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் கார்கள் விற்பனையில் எப்போதும் முன்னிலையில் இருக்கும் நிறுவனம் மாருதி சுஸுகி ஆகும். கடந்த மே மாதத்தில் மட்டும் மாருதி சுஸுகியில் இருந்து மொத்தம் 1 லட்சத்து 44,002 கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 மே மாதத்தில் 1 லட்சத்து 43,708 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இரண்டிற்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை.

10 car brands of india

வெறும் 294 கார்களை மட்டுமே கடந்த ஆண்டு மே மாதத்தில் மாருதி சுஸுகி குறைவாக விற்பனை செய்திருந்தது. இந்தியாவில் தற்சமயம் மொத்தம் 14 கார் நிறுவனங்களில் இருந்து கார்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. மொத்தமாக கடந்த மே மாதத்தில் 3 லட்சத்து 49,054 கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் மாருதி சுஸுகியின் பங்கு மட்டும் 41.25% ஆகும்.

அதாவது, இந்தியாவில் காரை வாங்கும் 3இல் ஒருவர் நிச்சயமாக மாருதி சுஸுகி காரை வாங்குகிறார். மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தில் ஹூண்டாய் உள்ளது. ஆனால், ஹூண்டாய் நிறுவனத்திற்கும், மாருதி சுஸுகி நிறுவனத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. எந்த அளவிற்கு என்றால், 2வது இடத்தில் உள்ள ஹூண்டாயில் இருந்து கடந்த மே மாதத்தில் மொத்தமாகவே 49,151 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

10 car brands of india

2023 மே மாதத்தில் 48,601 ஹூண்டாய் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், 550 ஹூண்டாய் கார்கள் இந்த ஆண்டு மே மாதத்தில் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹூண்டாய்க்கு அடுத்து 3வது இடத்தில் டாடா மோட்டார்ஸ் 46,697 கார்களின் விற்பனை எண்ணிக்கை உடன் உள்ளது. 2023 மே மாதத்தில் 45,878 டாடா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இதன்படி பார்க்கும்போது, 2023 மே மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு மே மாதத்தில் 819 டாடா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. 4வது இடத்தில் மஹிந்திரா நிறுவனம் 43,218 கார்களின் விற்பனை எண்ணிக்கை உடன் உள்ளது. ஆனால், 2023 மே மாதத்தில் வெறும் 32,886 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.

10 car brands of india

இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தில் டொயோட்டா 23,959 கார்களின் விற்பனை எண்ணிக்கை உடன் உள்ளது. 2023 மே மாதத்தில் 20,410 கார்களை மட்டுமே டொயோட்டா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது கடந்த மாதத்தில் 3,549 கார்களை டொயோட்டா அதிகமாக விற்பனை செய்துள்ளது. டொயோட்டாவை நெருக்கமாக பின்தொடர்ந்தவாறு 6வது இடத்தில் கியா உள்ளது.

தென்கொரிய கார் நிறுவனமான கியாவில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 19,500 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 மே மாதத்தில் 18,766 கார்களை மட்டுமே கியா விற்பனை செய்திருந்தது. இதற்கடுத்து 7வது மற்றும் 8வது இடங்களில் முறையே ஹோண்டா மற்றும் எம்ஜி மோட்டார் நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் கடந்த மே மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 4,822 மற்றும் 4,769 ஆகும். இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி இரு இடங்களில் ரெனால்ட் (3,709) மற்றும் ஃபோக்ஸ்வேகன் (3,273) உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகியை இப்போதைக்கு வேறெந்த நிறுவனமும் முந்தாது என்பது போன்றே உள்ளது. ஏனெனில், மாதத்திற்கு ஏறக்குறைய 1.5 லட்சம் கார்கள் விற்பனை என்பது அசாத்தியமான ஒன்றாகும். 2வது இடத்தில் உள்ள ஹூண்டாய் ஒரு மாதத்தில் விற்பனை செய்யும் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் வெறும் 10 நாட்களில் விற்பனை செய்கிறது. அதேநேரம், மஹிந்திரா கார்கள் விற்பனையும் கணிசமாக அதிகரித்து வருவதை கூறியே ஆக வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 6, 2024, 17:35 [IST]
English summary
10 car brands that sold most cars in may 2024 check all details here
மேலும்... #car sales #car sale #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X