மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?

எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது என்றாலும், இந்தியாவில் எப்போதுமே ஹேட்ச்பேக் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்திய மார்க்கெட்டில் கடந்த 2024 மார்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்சமயம் குறைந்த விலையில் மொத்தம் 16 ஹேட்ச்பேக் ரக கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2024 மார்ச் மாதத்தில் மட்டும் மொத்தம் 95,251 ஹேட்ச்பேக் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்திருந்தது.

top-10 hatchback cars march 2024

இந்த வகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 8,508 ஹேட்ச்பேக் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் காராக முதலிடத்தில் மாருதி சுஸுகியின் வேகன்ஆர் உள்ளது. முதலிடத்தில் மட்டுமில்லாமல், இந்த லிஸ்ட்டில் முதல் 4 இடங்களையும் மாருதி சுஸுகியின் ஹேட்ச்பேக் கார்கள் பிடித்துள்ளன.

முதலிடத்தில் உள்ள வேகன்ஆர் கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 16,368 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே, 2023ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 17,305 வேகன்ஆர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 937 வேகன்ஆர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. வேகன்ஆருக்கு அடுத்து 2வது இடத்தில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் உள்ளது.

top-10 hatchback cars march 2024

மொத்தம் 15,728 ஸ்விஃப்ட் கார்கள் கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 மார்ச் மாதத்தில் இதனை காட்டிலும் 1,831 கார்கள் அதிகமாக 17,559 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 3வது இடத்தை பிடித்துள்ள ஹேட்ச்பேக் கார் மாருதி சுஸுகி பலேனோ ஆகும். கடந்த மாதத்தில் 15,588 பலேனோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் கார்களை போன்று பலேனோ கார்களும் கடந்த 2023ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2023 மார்ச்சில் விற்பனை செய்யப்பட்ட பலேனோ கார்களின் எண்ணிக்கை 16,168 ஆகும். 4வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் கார், ஆல்டோ ஆகும். நடந்து முடிந்த 2024 மார்ச்சில் 9,332 ஆல்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

top-10 hatchback cars march 2024

ஆல்டோவிற்கு அடுத்து 5வது மற்றும் 6வது இடங்களில் டாடா மோட்டார்ஸின் ஹேட்ச்பேக் கார்களான டியாகோ மற்றும் அல்ட்ராஸ் உள்ளன. இதில், டியாகோ கார்கள் 6,381 யூனிட்களும், அல்ட்ராஸ் கார்கள் 5,985 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், எலக்ட்ரிக் வெர்சனிலும் விற்பனையாகும் டாடா டியாகோ கார்களின் விற்பனை 2023 மார்ச் உடன் ஒப்பிடுகையில் 2024 மார்ச்சில் கிட்டத்தட்ட ஆயிரம் யூனிட்கள் குறைந்துள்ளது.

ஆனால், டாடா அல்ட்ராஸ் கார்கள் 2,123 யூனிட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. 7வது மற்றும் 8வது இடங்களில் ஹூண்டாயின் ஹேட்ச்பேக் கார்களான ஐ20 மற்றும் ஐ10 நியோஸ் உள்ளன. இவை கடந்த மார்ச் மாதத்தில் முறையே 5,155 மற்றும் 5,034 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 9வது இடத்தில் டொயோட்டா கிளான்ஸா (4,319) மற்றும் 10வது இடத்தில் மாருதி சுஸுகி செலேரியோ (3,478) உள்ளன.

top-10 hatchback cars march 2024

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டாக விளங்கும் மாருதி சுஸுகியின் மிக பெரிய நம்பிக்கையே அதன் ஹேட்ச்பேக் கார்களாகும். அது ஏன் என்பது, இந்த லிஸ்ட்டை பார்த்தால் உங்களுக்கு தெரியும். இந்தியாவின் விலை குறைவான கார்கள் பெரும்பாலானவை ஹேட்ச்பேக் உடலமைப்பில் தான் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லிஸ்ட்டில் மாருதி சுஸுகிக்கு அடுத்து டாடா மோட்டார்ஸ் இருப்பது கொஞ்சம் சர்ப்பிரைஸாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 16, 2024, 22:26 [IST]
English summary
10 hatchback cars which sold most in march 2024 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X