இவ்வளவு காசு கொடுத்து வாங்கும் மஹிந்திரா காரில் இந்த வசதி எல்லாம் கிடைக்காது!! ஹூண்டாய் தாராளமாக வழங்குது!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் எஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த காருக்கு விற்பனையில் போட்டியாக ஹூண்டாயின் வென்யூ உள்ளது. புதிய காராக இருப்பினும், வென்யூவில் வழங்கப்படும் சில அம்சங்கள் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரில் கிடைப்பதில்லை. அவை என்னென்ன என்பதை இனி பார்க்கலாம்.
1. கார்னர் லைட்கள்: ஹூண்டாய் வென்யூ காரில் எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட்கள், ஹலோஜன் பல்புகளை கொண்ட கார்னர் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. வளைவுகளில் காரை திருப்பும்போது கார்னர் விளக்குகள் மிகவும் உதவிக்கரமாக இருக்கும். இந்த விளக்குகள் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரில் இல்லை.

2. பயன்படுத்தக்கூடிய ரூஃப் ரெயில்: மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரிலும் ரூஃப் ரெயில்ஸ் கொடுக்கப்படுகிறது. ஆனால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆனால், ஹூண்டாய் வென்யூவில், ரூஃப் ரெயில்ஸ் கம்பிகளின் உதவியுடன் காரின் மேற்கூரையில் பொருட்களை கட்டி எடுத்து செல்ல முடியும். அதேபோல், எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரில் வழக்கமான ஆண்டென்னா தான் கொடுக்கப்படுகிறது. ஆனால், வென்யூவில் சுறா துடுப்பு வடிவில் ஆண்டென்னா கொடுக்கப்படுகிறது.
3. காற்று சுத்திகரிப்பான்: கார்களில் காற்று சுத்திகரிப்பானை வழங்கும் மிகவும் சில கார் நிறுவனங்களுள் ஹூண்டாயும் ஒன்றாகும். வென்யூவில் காற்று சுத்திகரிப்பான் ஆனது முன் இருக்கைகளுக்கு மத்தியில் ஆர்ம்ரெஸ்ட் உடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. காற்று சுத்திகரிப்பானை டச் டிஸ்பிளே மூலமாக கண்ட்ரோல் செய்யலாம்.

4. எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவரின் இருக்கை: மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரில் ஏகப்பட்ட புதிய தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கையை இந்த மஹிந்திரா காரில் பெற முடியாது. இந்த டிரைவர் இருக்கையை ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா சொனெட் என்கிற 2 சப்-4 மீட்டர் எஸ்யூவி காரில் மட்டுமே பெற முடிகிறது.
5. விசாலமான பூட் ஸ்பேஸ் & ஸ்பேர் சக்கரம்: மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரில் 295 லிட்டர்கள் கொள்ளளவில் பூட் ஸ்பேஸ் வழங்கப்படுகிறது. முன்பு, எக்ஸ்யூவி300 காரில் 257 லிட்டர் கொள்ளளவில் மட்டுமே பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டு வந்தது. இந்த கூடுதல் இடவசதிக்கு ஸ்பேர் சக்கரத்தின் அளவு குறைக்கப்பட்டு இருப்பது முக்கிய காரணமாகும். ஹூண்டாய் வென்யூவில் 350 லிட்டர் கொள்ளளவில் பூட் ஸ்பேஸ் கொடுக்கப்படுகிறது.

6. டேஷ்போர்டு கேமரா: கார்களில் டேஸ்போர்டின் கேமரா அத்தியாவசியமானதாக மாறி வருகிறது. ஆனால், இது சற்று விலைமிக்க கார்களில் மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால், இதனை ஹூண்டாய் வென்யூ காரில் மட்டுமே பெற முடிகிறது. எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரில் கிடைப்பதில்லை. வென்யூவில் ட்யூயல்-சேனல் டேஸ்கேம் கொடுக்கப்படுகிறது.
7. பெடில் ஷிஃப்டர்கள் & குயிக்-ஷிஃப்ட்டிங் டிசிடி கியர்பாக்ஸ்: புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் ஆனது செயல்திறன்மிக்க கார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும், பெடில் ஷிஃப்டர்கள் இந்த காரில் கொடுக்கப்படவில்லை. ஹூண்டாய் வென்யூவில் பெடில் ஷிஃப்டர்கள் ஸ்டேரிங் சக்கரத்துக்கு பின்னால் கொடுக்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் கார்கள் பொதுவாகவே சற்று விலைமிக்கவை ஆக விளங்குகின்றன. ஆனால், அதற்கேற்ப ஹூண்டாய் கார்களில் அதிகளவில் தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா அதன் கார்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்யும் முயற்சியாக தொழிற்நுட்ப அம்சங்களை கொஞ்சம் குறைவாக வழங்குகிறது.


Click it and Unblock the Notifications









