இந்த காரை எல்லாம் இந்தியர்களால் எங்க பாக்கவே முடியாம போய்டுமோ நினைச்சோம்! இந்தியாவில் சியோமி இ-காரின் தரிசனம்

பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான சியோமி (Xiaomi), இந்தியாவில் அதன் எலெக்ட்ரிக் கார் மாடலை காட்சிப்படுத்தி இருக்கின்றது. நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாடும் விதமாகவே அந்த நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடலை இந்தியாவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. எஸ்யூ7 (SU7) எலெக்ட்ரிக் கார் மாடலையே அது நாட்டில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. நிறுவனம் மின்சார கார் உற்பத்தியில் தொடங்கி தயாரிக்கப்பட்ட முதல் கார் மாடலே இதுவாகும்.

இது ஓர் செடான் ரக கார் மாடல் ஆகும். போர்ஷே மற்றும் டெஸ்லா கார்களைப் போல அதிக கவர்ச்சியான மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களைப் போன்ற தோற்றம் கொண்ட கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த காரையே தற்போது இந்தியாவில் சியோமி காட்சிப்படுத்தி இருக்கின்றது. இது அதிநவீன தொழில்நுட்ப வசதிக் கொண்ட காரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Xiaomi su7 ecar showcased

இதேபோல் உருவத்திற்கு ஏற்ப அதிக திறனை வெளிப்படுத்தக் கூடிய கார் மாடலகவும் சியோமி எஸ்யூ7 காட்சியளிக்கின்றது. தற்போது இந்தியாவில் தரிசனம் வழங்கி இருக்கும் சியோமி எஸ்யூ7 எலெக்ட்ரிக் அதிகபட்சமாக 673 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டார்க் திறன் 838 ஆகும்.

மேலும், இதில் ஓர் முழு சார்ஜில் 800 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த காரால் மணிக்கு 265 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். அதுதவிர, வெறும் 2.78 செகண்டுகளிலேயே இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். இத்தகைய அதீத திறனை வெளியேற்றக் கூடியாகவே இந்தியாவில் தன்னுடைய எலெக்ட்ரிக் காரை சியோமி காட்சிப்படுத்தி இருக்கின்றது.

Xiaomi su7 ecar

இது அதீத வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட கார் மாடல் மட்டுமில்லைங்க, மிக சிறந்த பிரேக்கிங் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடலும் கூட. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும். மணிக்கு 100 கிமீ வேகத்தில் இந்த கார் சென்றுக் கொண்டிருந்தாலும், வெறும் 33.3 மீட்டர் இடைவெளியே அதற்கு போதுமானதாகும்.

இந்த இடைவெளியிலேயே அது பூஜ்ஜியம் வேகத்திற்கு வந்துவிடும். இத்தகைய மிக கை தேர்ந்த பிரைக்கிங் சிஸ்டத்தையே இந்த கார் கொண்டிருக்கின்றது. இத்துடன், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த காரின் கூடை எஃகு-அலுமினியம் அலாயால் கொண்டு உருவாக்கி இருக்கின்றது. இதுதவிர, 360 டிகிரி பாதுகாப்பை வழங்கும் விதமாக 16 மிக முக்கிய பாதுகாப்பு அம்சங்களையும் இந்த காரில் வழங்கி இருக்கின்றது.

மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஏழு ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் லிடார் (LiDAR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் அமைப்பு (ADAS) ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த டிரைவர் அசிஸ்டன்ஸ் அம்சத்தின் வாயிலாக அவசர கால தானியங்கி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் ஹை பீம் ஆகிய வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். பாதுகாப்பு தருவது, அதிக திறனை வெளியேற்றுவதில் மட்டுமல்ல, சொகுசு அம்சங்களைத் தாங்கி இருப்பதிலும் இந்த கார் மிக மிக சிறந்ததாக உள்ளது.

ஸ்டியரிங் வீல் மற்றும் இருக்கை என அனைத்தும் சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கும் விதமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, தன்னுடைய செல்போன்களைப் போலவே இந்த எலெக்ட்ரிக் காரையும் அதிகம் தொழில்நுட்ப அம்சங்களை தாங்கியதாகவே தயார் செய்திருக்கின்றது. 16.1 அங்குல 3கே அல்ட்ரா கிளியர் சென்ட்ரல் கன்ட்ரோல் திரை, 56 அங்குல ஹெட்-அப் திரை, திருப்பும் திறன் கொண்ட டேஷ்போர்டு (காருக்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் இது பயணிகளை வரவேற்கும்) ஆகியவற்றை இந்த காரில் வழங்கி இருக்கின்றது.

இதுதவிர, கூடுதலாக ஐந்து டேப்லட் வகை ஸ்கிரீன்களையும் இந்த காரில் சியோமி வழங்கி இருக்கின்றது. இவை பயணிகளுக்கு ஓர் பொழுதுபோக்கியாக செயல்படும். உலக சந்தையில் இந்த எலெக்ட்ரிக் கார் மூன்று விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 73.6kWh, 94.3kWh மற்றும் 101kWh ஆகியவையே அவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதைய நிலவரப்படி இந்த கார் காட்சிப்படுத்தல் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இது விற்பனைக்குக் கொண்டு வரப்படவில்லை. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் சியோமி இந்த பணிகளையும் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் சியோமி செல்போன்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதைப்போலவே அது எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்குக் கொண்டு வரும் எனில், அதற்கும் அமோகமான வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 9, 2024, 15:51 [IST]
English summary
10th anniversary in india xiaomi showcased su7 ev luxury sports sedan
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+