2009இல் வாங்கிய இன்னோவா கார் மாதிரி சுத்தமா தெரியல! டொயோட்டா நிறுவனமே இதை நம்பாது!!
டொயோட்டா இன்னோவா (Toyota Innova), இந்தியாவில் மக்கள் பலர் மிகவும் விரும்பக்கூடிய டொயோட்டா கார். இப்போது இல்லை... கிட்டத்தட்ட கடந்த 20 வருடங்களாகவே குடும்பங்கள் கொண்டாடும் காராக இன்னோவா விளங்குகிறது. இன்னோவாவை வாங்க முடியாதவர்களே குறைந்த விலையில் மாருதி சுஸுகி எர்டிகாவை வாங்குவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அப்படிப்பட்ட இன்னோவா கார் ஒன்று சுமார் 15 வருடங்களாக தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. அதாவது, இப்போதும் ரன்னிங்கில் இருக்கும் அந்த இன்னோவா காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் மிகவும் சில டொயோட்டா கார்கள் மட்டுமே மக்களை கவர்ந்துள்ளன. அவற்றுள் ஒன்று, டொயோட்டா இன்னோவா ஆகும். ஆரம்பத்தில் இன்னோவா என்கிற பெயரில் மட்டுமே அழைக்கப்பட்டுவந்த இந்த கார், பின்னர் இன்னோவா கிரிஸ்ட்டா எனவும், தற்போது இன்னோவா ஹைகிராஸ் எனவும் அழைக்கப்படுகிறது.

தற்சமயம் விற்பனையில் இருக்கும் இன்னோவா கார் ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷன் உடன் விற்பனை செய்யப்படுகிறது. பழைய இன்னோவா காரை இப்போது சாலையில் காண்பதெல்லாம் அரிதாகும். ஏனெனில், அந்த சமயத்தில் இன்னோவாவை வாங்கிய நிறைய பேர் அதன்பின் இன்னோவா கிரிஸ்ட்டா மற்றும் இன்னோவா ஹைகிராஸ் கார்களுக்கு மாறிவிட்டனர்.
இருப்பினும், இங்கு ஒரு இன்னோவா கார் மட்டும் தொடர்ந்து 15 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. இந்த 15 வருட பழைய இன்னோவா காரை புதிய தோற்றத்திற்கு மெருக்கேற்றி உள்ளனர். அதாவது, ஷோரூமில் இருந்து கொண்டுவந்தது போல் இந்த இன்னோவா காரை மாற்றியுள்ளனர். இந்த இன்னோவா கார் தொடர்பாக யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், இந்த இன்னோவா காரை இவ்வாறு புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றிய மெக்கானிக் கடையை காணலாம்.

இவர்கள் இதுபோன்று பல கார்களை ஷோரூம் கண்டிஷனுக்கு மாற்றியுள்ளனர். இந்த குறிப்பிட்ட 15-வருட பழைய இன்னோவா காரின் முன்பக்கத்தில் செவ்வகம் வடிவில் புரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் பெரிய கிரில் பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க பம்பர் ஆனது பிராண்ட்-நியூ ஆகும். பம்பருக்கு கீழ்பகுதியில் கருப்பு நிறத்திலான பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. காரின் முன்பக்கத்தின் இரு முனைகளிலும் ஃபாக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
காரின் பக்கவாட்டில் 17-இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் இரு பக்கங்களிலும் படிக்கட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. வீல் ஆர்ச்சுகளிலும், ஜன்னல்களை சுற்றிலும், கதவு கைப்பிடிகளிலும் மற்றும் எரிபொருள் நிரப்பும் பகுதியிலும் க்ரோம் ஹைலைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் மேற்கூரையில் ரூஃப் ரெயில்களும், ஜன்னல்களுக்கு விஸர்ஸும் உள்ளன.

காரின் பின்பக்கத்தில் ரூஃப்-இல் ஸ்பாய்லர், கனெக்ட்டட் எல்இடி டெயில்லேம்ப்கள், பூட்லிட் பகுதியில் க்ரோம் கார்னிஷ், ஸ்போர்டியான பம்பர் மற்றும் திடமான புல் ராட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. காருக்குள் பெரியதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சவுகரியமான இருக்கைகளை தவிர்த்து, கடந்த 19 வருடங்களாக இந்த இன்னோவா காரின் உட்புறம் அப்படியே தான் உள்ளது.
2005இல் இருந்து 2011 வரையில் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா இன்னோவா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.62 லட்சத்தில் இருந்து ரூ.13.19 லட்சம் வரையில் இருந்தன. ஆனால், தற்போது இன்னோவா கிரிஸ்ட்டா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.19.99 லட்சத்தில் இருந்து ரூ.26.55 லட்சம் வரையில் உள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் இன்னோவா கிரிஸ்ட்டாவில் கொடுக்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 15 வருடங்களில் இந்த டொயோட்டா இன்னோவா காரில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இன்னோவா காருக்கே உண்டான ஸ்டைலில் இந்த காரில் எந்த வித்தியாசமும் இல்லை. பொதுவாக, ஒரு காரை 15 வருடங்களுக்கு தொடர்ந்து பராமரிப்பது கொஞ்சம் சிரமம் தான். ஆனால், இன்னோவா போன்ற கார்களில் அது சாத்தியமே.


Click it and Unblock the Notifications









