இந்த பழய கார தோற்கடிக்க இன்னும் ஒரு காருகூடவா வரல! ரோல்ஸ் ராய்ஸாலையே முடியலையா! இத்தன கோடி ரூபாவா அதோட மதிப்பு

நீங்கள் படத்தில் பார்க்கும் இந்த காரே உலகத்திலேயே இதுவரை மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட கார் மாடல் ஆகும். இது புத்தம் புதிய கார் மாடல் அல்ல. அது ஓர் விண்டேஜ் வகை வாகனம் ஆகும். ஏலத்தின் வாயிலாகவே இந்த வாகனம் அதிக விலைக்கு விற்கப்பட்டு இருக்கின்றது. பொம்ம படத்துக்கான காரை போல தோற்றத்தைக் கொண்டிருக்கும் அந்த கார் கடந்த 1955 ஆம் ஆண்டில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 300 எஸ்எல்ஆர் அன்லென்ஹாட் கூபே (1955 Mercedes-Benz 300 SLR Uhlenhaut Coupe) வகை கார் மாடல் ஆகும்.

இந்த காரையே கடந்த 2022 ஆம் ஆண்டில் ஏலத்தின் வாயிலாக விற்பனைச் செய்திருக்கின்றனர். ஜெர்மனியில் உள்ள ஸ்டட்குவார்டு மெர்சிடிஸ் பென்ஸ் அருங்காட்சியகத்தின் வாயிலாகவே இது ஏலத்தில் விற்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரை வாங்க விண்டேஜ் வாகன காதலர்கள் மத்தியில் மிகப் பெரிய போட்டி நிலவியநிலையில், 142 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கே அதன் விற்பனை முடிக்கப்பட்டது.

Worlds most valuable car ever sold

இது இந்திய ரூபாய் மதிப்பில் 1,100 கோடிக்கும் அதிகம் ஆகும். இந்த அதிகபட்ச விலை விற்பனை காரணமாக அது கின்னஸ் உலக சாதனையிலும் இடம் பிடித்தது. உலகிலேயே மிக மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட வாகனம் என்கிற சாதனைக்காகவே அது கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது.

மேலும், முந்தைய உலக சாதனையான ஃபெர்ராரி 250 ஜிடிஓ (1963 Ferrari 250 GTO)-வையும் இது ஓரங்கட்டியது. ஆமாங்க, இதை விட மிக அதிக தொகைக்கே இந்த கார் ஏலம் போயிருக்கின்றது. 70 மில்லியனுக்கே இந்த கார் ஏலத்தில் விற்கப்பட்டது. மேலும், இந்த ஃபெர்ராரி கார் 1963 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Mercedes 300 slr uhlenaut coupe rear

Image Courtesy: RM Sotheby's கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் நம்முடைய டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் உலகின் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தோம். அந்த பட்டியலில் முதல் இடத்தை ரோல்ஸ் ராய்ஸ் லா ரோஸ் நோய்ரே டிராப்டெயில் (Rolls-Royce La Rose Noire Droptail) எனும் கார் மாடல் பிடித்திருந்தது.

இதுவே உலகின் மிக மிக விலை உயர்ந்த காரும் மாடலும்கூட. இதன் மதிப்பு 30 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகம் ஆகும். அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 252 கோடிக்கும் அதிகமான விலையிலேயே அந்த கார் மாடலின் ஒரு யூனிட் விற்கப்படுகின்றது.

இதைவிட நான்கு மடங்குக்கும் அதிகமான விலையிலேயே 1955 மெர்சிடிஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் விற்கப்பட்டு இருக்கின்றது. இந்த ஏல விற்பனை அரங்கேறி இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. இதற்கு பின்னர் இப்போது வரை இதை முறியடிக்கும் விதமாக வேறு எந்த வாகனத்தின் விற்பனையும் அரங்கேறவில்லை என்பதே இப்போது தெரிய வந்திருக்கின்றது.

இந்த ஏல விற்பனையை முறியடிக்கக் கூடிய ஓர் விற்பனை நிகழ்வு அரங்கேற இன்னும் பல ஆண்டுகள்கூட ஆகலாம் என வாகனத்துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். அந்த அளவிற்கே மிக மிக அதிக தொகைக்கு 1955 மெர்சிடிஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் அன்லென்ஹாட் கூபே-வின் ஏலமானது அரங்கேறி இருக்கின்றது.

இன்றைய நவீன கால கார்களில் அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த விண்டேஜ் காரில் இப்போதும் ஸ்போக் வீலே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அந்த கார் பழைமை மனம் மாறாமல் அப்படியே இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. இந்த உலக புகழ்பெற்ற கார் மாடலை வடிவமைத்தது ருடால்ஃப் அன்லென்ஹாட் எனும் பொறியியாளர் ஆவார்.

3.0 லிட்டர் ஸ்ட்ரெயிட் 8 வகை எஞ்சினே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 290 கிமீ ஆகும். இது விற்பனைக்கு வந்தபோது இதுவே உலகின் அதிக வேக கார் மாடல் ஆகும். ஸ்ட்ரீட்-லீகர் வெர்ஷனாகவே இது தயார் செய்யப்பட்டது. அதேவேளையில், மிகவும் தனித்துவமான லுக் கொண்ட வாகனமாகவும் இதனை மெர்சிடிஸ் பென்ஸ் தயாரித்தது. இதனால்தான் இப்போதும் மார்க்கெட் அதற்கு பலமடங்காக அதிகரித்துக் காட்சியளிக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல தசாப்தங்கள் பழைய காருக்கு இவ்வளவு மிகப் பெரிய வரவேற்புக் கிடைத்திருப்பதன் வாயிலாக, விண்டேஜ் வாகனங்களை அதன் பிரியர்கள் எந்த அளவு தொகையைக் கொடுத்தும் வாங்க தயாராக இருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது. எனவே விண்டேஜ் வாகனம் ஏதாச்சும் இருந்தால் அதை வீணானது நினைத்து தூக்கி போட்றாதீங்க. அதற்கான காலம் வரும் என நம்புங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 19, 2024, 22:11 [IST]
English summary
1955 mercedes benz 300 slr uhlenhaut coupe worlds most valuable car ever sold more details
மேலும்... #luxury cars #mercedes benz
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+