பென்ஸ், ஆடியை எல்லாம் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த பிஎம்டபிள்யூ!
பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு மொத்தம் 25,55,341 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டு நடந்த விற்பனையுடன் ஒப்பிடும்போது 6.5% அதிகமாகும் ஒட்டுமொத்த சொகுசு கார் மார்க்கெட்டில் பென்ஸ் ஆடி எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு பிஎம்டபிள்யூ நிறுவனம் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் நம்பர் ஒன் நிறுவனமாக பிஎம்டபிள்யூ தான் இருக்கிறது. வெகு சில கார் நிறுவனங்களை உலகம் முழுவதும் சொகுசு காரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். நமக்குத் தெரிந்து பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஆடி ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சொகுசு கார்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. இந்நிறுவனத்திடம் குறைந்த விலை கார்கள் என்று எதுவுமே கிடையாது.

இந்நிலையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த ஒட்டுமொத்த விற்பனை குறித்த விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு மொத்தம் 25,55,341 வாகனங்களை தயார் செய்துள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டு நடந்த விற்பனையுடன் ஒப்பிடும்போது 6.5 சதவீதம் அதிகமாகும். பிஎம்டபிள்யூ இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை கடந்த ஆண்டு விற்பனை செய்துள்ளது.
இந்நிலையில் இரண்டாவது இடத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 20,43,800 வாகனங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டும் கிட்டத்தட்ட இதே அளவிலான வாகனங்களையே அந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்திருந்தது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தில் புதிய கார்களின் வருகை மற்றும் சில செக்மென்ட்களில் வருகை இல்லாத காரணமாக செக்மென்ட் வாரியிலான விற்பனை மாறுதல் ஏற்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் மாசு ஏற்படுத்தாத வாகன விற்பனையிலும் சாதனை படைத்துள்ளன. இந்நிறுவனங்கள் சேர்ந்து 2,22,600 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு நடந்த விற்பனையை விட 73 சதவீதம் அதிகமாகும். இந்த இரு நிறுவனங்களும் பல்வேறு விலைகளில் எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்கி உள்ளன.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஆடி நிறுவனம் தான் இருக்கிறது இந்நிறுவனம் மொத்தம் 18,95,240 வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இது கடந்தாண்டு விற்பனையை விட 18 சதவீதம் அதிகமாகும். நான்காவது இடத்தில் தான் டெஸ்லா நிறுவனம் இருக்கிறது இந்நிறுவனம் 18,08,589 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு விற்பனையை விட 38 சதவீதம் அதிகமாகும்.

லெக்சஸ் மற்றும் வால்வோ ஆகிய நிறுவனங்கள் இதுவரை தங்கள் விற்பனை விபரங்களை வெளியிடவில்லை. அந்நிறுவனங்கள் தான் 5 மற்றும் 6வது இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறது. தற்போது நிறுவனத்திடம் ஐ7 மற்றும் எக்ஸ்எம் லேபிள் கொண்ட ரெட் ஹைபிரிட் கார் விற்பனையில் உள்ளது. ஒட்டுமொத்த விற்பனையில் எலெக்ட்ரிக் கார்கள் மட்டும் இந்நிறுவனத்தில் 14 சதவீத விற்பனையை பெற்றுள்ளது.
மினி மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் ஆகிய நிறுவனங்கள் பிஎம்டபிள்யூவின் துணை நிறுவனங்கள் என்பதால் அந்நிறுவனங்களின் விற்பனையும் பிஎம்டபிள்யூ பிராண்டின் விற்பனைக்கு கீழே வருகிறது. அந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து 3,01,156 வாகனங்களை விற்பனை செய்துள்ளன இது எல்லாம் சேர்த்து தான் 25,55,349 கார்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த 2023 விற்பனை செய்துள்ளது.
எலெக்ட்ரிக் வாகன பிரிவில் டெஸ்ட்ல நிறுவனம் தான் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்துள்ளன. அது தொடர்ந்து சீன நிறுவனத்தின் நிறுவனமும் சிறப்பான எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்து வளர்ந்து வரும் நிறுவனமாக இருக்கிறது. எது எப்படியோ சொகுசு காரர்கள் எல்லாம் பணக்காரர்கள் வாங்கும் கார்களாக இருக்கின்றன. விலை குறைந்த சொகுசு கார்கள் என்பது மார்க்கெட்டில் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சொகுசு காரர்கள் விற்பனை ஒரு நாட்டில் அதிகமாகிறது என்றால் அந்நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை பெற்று வருகிறது என்று அர்த்தம். மக்கள் மற்ற தேவைகளை எல்லாம் முடித்துவிட்டு கடைசி தேவையான சொகுசு காரை வாங்குவதை வைத்திருப்பார்கள். அப்படியும் சொகுசு கார் விற்பனையால் மக்களுக்கு சிறப்பாக இருக்கிறார்கள் என அர்த்தம் இந்தியாவில் சிறப்பான பொருளாதாரம் இருக்கிற.து


Click it and Unblock the Notifications









