2023ல் ஹூண்டாய் சைலெண்டா இந்த சாதனைய பண்ணிட்டாங்க! டாடா இதை நினைச்சுகூட பார்க்க முடியாது!
ஹூண்டாய் நிறுவனம் கடந்து 2023-ம் ஆண்டு இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்து 2023-ம் ஆண்டு மட்டும் 7,65,786 வாகனங்களை விற்பனை செய்து 9 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் கடந்த டிசம்பர் மாத விற்பனை விபரம் மற்றும் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த மொத்த விற்பனை விபரம் குறித்த தகவல்களை காணலாம் வாருங்கள்.
2024-ம் ஆண்டு புத்தாண்டு பிறந்த நிலையில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்களில் எல்லாம் கடந்த டிசம்பர் மாதம் மற்றும் 2023-ம் ஆண்டின் ஒட்டுமொத்த விற்பனை விபரங்களை எல்லாம் தற்போது வரிசையாக வெளியிட்டு வருகின்றன. அதன்படி தற்போது ஹூண்டாய் நிறுவனமும் சார்ந்து விற்பனை விபரங்களை எல்லாம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஒரே ஆண்டில் 9 சதவீதம் வளர்ச்சியை சந்தித்துள்ளது.

2023-ம் ஆண்டில் 6 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதைப்பற்றி நாம் தெரிந்து கொள்ளும் முன்னர் கடந்த டிசம்பர் மாத விற்பனை விவரங்களை பற்றி தெளிவாக பார்ப்போம். கடந்து டிசம்பர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் மொத்தமாக 42,750 வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது.
இதுவே கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனையை பார்க்கும் போது அப்பொழுது வெறும் 38,831 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகி இருந்தன. அதன்படி பார்த்தால் தற்போது 3919 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. அதாவது 10.09 சதவீதம் அளவிற்கு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

அடுத்ததாக கடந்த நவம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது கடந்த நவம்பர் மாதம் 49,451 வாகனங்கள் விற்பனையாக இருந்தது. அதிலிருந்து டிசம்பர் மாதத்தில் 6,701 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது இது 13.55 சதவீத விற்பனை வீழ்ச்சியாகும். ஏற்றுமதி விஷயத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 13700 கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகி இருந்தன. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1921 வாகனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாகி இருந்தன. இந்த ஆண்டு 5321 வாகனங்கள் குறைவாக ஏற்றுமதி ஆகியுள்ளது. இது 27.97% விற்பனை வீழ்ச்சியாகும்.

ஒட்டு மொத்தமாக பார்த்தால் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் ஹூண்டாய் நிறுவனம் 56,450 கார்களை தயாரித்துள்ளது. இதுவே கடந்தாண்டு டிசம்பர் மாதம் 57,852 கார்களை தயாரித்து இருந்தது. தற்போது 1402 கார்கள் விற்பனை குறைவாக பதிவாகியுள்ளது. இது 2.42 சதவீதம் விற்பனை வீழ்ச்சியை காட்டுகிறது.
அடுத்த கடந்த 2023-ம் ஆண்டு மொத்த காலண்டர் ஆண்டின் விற்பனை விபரங்களை பற்றி பார்க்கும் போது ஹுண்டாய் நிறுவனம் மொத்தமாக 6,02,111 வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது அதேபோல 1,63,675 வாகனங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் 7,65,786 வாகனங்களை அந்நிறுவனம் தயாரித்துள்ளது.

இதுவே கடந்த 2022-ம் ஆண்டு விபரங்களை பார்க்கும்போது அந்த ஆண்டு உள்நாட்டு விற்பனையில் வெறும் 5,52,511 வாகனங்களை விற்பனை செய்துள்ளனர். ஏற்றுமதியில் 1,48,300 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது. ஒட்டுமொத்தமாக 7,00,811 வாகனங்கள் விற்பனையாகி இருந்தன. அதை ஒப்பிடும்போது 2023 ஆம் ஆண்டு 9% வளர்ச்சியாக இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் இந்த 2023 ஆம் ஆண்டில் 6 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை உள்நாட்டில் உற்பத்தி விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்துள்ளது. தொடர்ந்து அந்நிறுவனம் தனது விற்பனையை அதிகரித்துக் கொண்டே செல்ல அதிகமான வாய்ப்புகள் தென்படுகிறது.

ஹூண்டாய் நிறுவனம் பாதுகாப்பான கார்களை தயாரிப்பதில் அதிக முனைப்பை காட்டி வருகிறது. இந்நிறுவனம் தனது அனைத்து கார்களுக்கும் ஆறு ஏர்பேக்குகளை கட்டாயமாக மாற்றியுள்ளது. மத்திய அரசு சொன்ன இந்த அறிவிப்புக்கு பிறகு ஹூண்டாய் நிறுவனம் இதை செய்துள்ளது. ஹூண்டாய் வெர்னா கார் குளோபல் என்கேப் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் நல்ல புக்கிங் பெற்று விற்பனையை பெற்று வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்யும் இரண்டாவது நிறுவனமாக மாறி உள்ளது. அந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் இந்நிறுவனம் தொடர்ந்து சிறப்பான தயாரிப்புகளை வெளியிட்டு தனது விற்பனையை வளர்த்துக் கொள்ள இது ஒரு நல்ல காலமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









