இந்த கார் இனி விற்பனையான மாதிரிதான்.. இப்படி ஒரு காரியத்தை சிட்ரோன் செய்யும்னு யாருமே எதிர்பார்க்கல!

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனமான சிட்ரோன் (Citroen), அதன் புதுப்பிக்கப்பட்ட சி3 (C3) கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது ஓர் ஹேட்ச்பேக் ரக கார் மாடல் ஆகும். புதுப்பித்தலின்கீழ் சில புதிய சிறப்பம்சங்களை இந்த காரில் சிட்ரோன் சேர்த்திருக்கின்றது. இதனால், இந்த மலிவு விலை கார் மாடலின் விலை கணிசமாக உயர்ந்திருக்கின்றது. ரூ. 30 ஆயிரம் வரை இக்காரின் விலை அதிகரித்திருக்கின்றது. இருப்பினும், இப்போதும் நிறுவனத்தின் விலை குறைவான கார் மாடலாக இதுவே காட்சியளிக்கின்றது.

புதிய விலை உயர்வால் சிட்ரோன் சி3 கார் மாடலின் ஆரம்ப விலை ரூ. 6.16 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. இந்த கார் சந்தையில் ஒட்டுமொத்தமாக 8 விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. லைப், ஃபீல், ஷைன், ஷைன் வைப் பேக், ஷைன் டூயல் டோன், ஷைன் டூயல் டோன் வைப் பேக், ஷைன் டர்போ டூயல் டோன் மற்றும் ஷைன் டர்போ டூயல் டோன் வைப் ஆகியவையே அவை ஆகும்.

Citroen c3 gets price hike

லைவ், இதுவே சி3இன் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். இதன் விலையே முன்னதாக பார்த்த 6.16 லட்சம் ஆகும். இதற்கு அடுத்த இடத்தில் ஃபீல் இருக்கின்றது. இதற்கு ரூ. 7.47 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து, மூன்றாவது ஆரம்ப நிலை வேரியண்டாக ஷைன் உள்ளது.

இதன் விலை ரூ. 8.09 லட்சம் ஆகும். இதேபோல், ஷைன் வைப் பேக் வேரியண்டின் விலை ரூ. 8.21 லட்சமாகவும், ஷைன் டூயல் டோன் வேரியண்டின் விலை ரூ. 8.24 லட்சமாகவும், ஷைன் டூயல் டோன் வைப் பேக்கின் விலை ரூ. 8.36 லட்சமாகவும் உயர்த்தப்பட்டு இருக்கின்றது.

தொடர்ந்து, ஷைன் டர்போ டூயல் டோனின் விலை ரூ. 9.29 லட்சமாகவும், ஷைன் டர்போ டூயல் டோன் வைப் பேக்-இன் விலை ரூ. 9.41 லட்சமாகவும் அதிகரித்திருக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. விலை அதிகரிப்பிற்கு சில சிறப்பம்சங்கள் சேர்ப்பே முக்கிய காரணம் என கூறப்படுகின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக புதிய சிட்ரோன் சி3 காரில் இப்போது எல்இடி (LED) புரொஜெக்டர் வகை ஹெட்லேம்ப்கள், ஆட்டோ-ஃபோல்டிங் ரியர்வியூ மிரர், லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், 7.0 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஆட்டோமேட்டிக் காலநிலை கட்டுப்பாடு வசதி ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

சிட்ரோன் நிறுவனம் இந்த காரை இந்தியாவின் மலிவு விலை கார் பிரிவை அலங்கரிக்கும் விதமாக விற்பனைக்குக் கொண்டு வந்தது. அதாவது, டாடா டியாகோ மற்றும் மாருதி சுசுகி பலேனோ போன்ற மாடல்களுக்கு போட்டியாகவே இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இவற்றிற்கு வழங்கும் போட்டியை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே தற்போது அதை புதுப்பித்தலுக்கு உட்படுத்தி சிட்ரோன் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

குறிப்பாக ஏற்கனவே பிரீமியம் அம்சங்களை அதிகம் தாங்கிய காராக இந்த சி3-யை, இன்னும் அதிகம் சிறப்பம்சங்களைத் தாங்கியதாக தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. பவர் ஜன்னல்கள், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்புடன் கூடிய 10.2 அங்குல டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களே இந்த காரில் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

சிட்ரோன் சி3 பாதுகாப்பு அம்சங்களைத் தாங்கி இருப்பதிலும் மேம்பட்ட வாகனமாகக் காட்சியளிக்கின்றது. மிக முக்கியமாக பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த கார் மாடலின் உயர் நிலை வேரியண்டில் ஆறு ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. எஞ்சினைப் பொருத்த வரை சிட்ரோன் சி3 கார் மாடலில் இரண்டு விதமான மோட்டார் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

81 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் ஐந்து ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடனும், 108 பிஎச்பி ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜ் மோட்டார் ஆப்ஷனிலேயே இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டாவது மோட்டார் ஆப்ஷனில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸே வழங்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மலிவு விலை கார் மார்க்கெட்டை தன் வசம் ஈர்க்கும் பொருட்டு சிட்ரோன் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சி3 ஹேட்ச்பேக்கை விற்பனைக்குக் கொண்டு வந்தது. இந்த காருக்கு கணிசமான அளவு மட்டுமே வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழிலிலேயே அக்கார் மாடலை அதிகம் சிறப்பம்சங்கள் கொண்டதாக தயார் செய்திருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, August 19, 2024, 15:46 [IST]
English summary
2024 citroen c3 sees price increase with new features
மேலும்... #citroen #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+