முரட்டுத்தனமான ஆஃப்ரோடு எஸ்யூவி வந்தாச்சு! 2024 ஃபோர்ஸ் கூர்கா வீடியோ ரிவியூ!

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது கூர்காரின் 5 டோர் வெர்ஷனை தயாரிக்க முடிவு செய்து. அதற்கான பணிகளையும் துவங்கியது. தற்போது இந்த கார் தயாராகியுள்ளது. மார்க்கெட்டில் உள்ள மஹிந்திரா தார் மற்றும் மாருதி சுஸூகி ஜிம்னி ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளது. ஆஃப் ரோடு எஸ்யூவி ரக கார்களை வாங்க நினைக்கும் பலருக்கு இந்த கார் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழுவை அழைத்து இந்த 5 டோர் கொண்ட கூர்கா காரை ஓட்டி பார்க்க அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி எங்கள் குழுவும் கோவாவிற்கு விரைந்து சென்று இந்த காரை ஓட்டிப் பார்த்தோம். இப்படியாக நாங்கள் ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவத்தை இதோ வீடியோவாக உங்களுடன் பகிர்ந்து உள்ளோம்.

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காரை கிட்டத்தட்ட தனது 3 டோர் வெர்ஷன் கார் போலவே உருவாக்கியுள்ளது. இருந்தாலும் பக்கவாட்டில் இரண்டு டோர்கள் எக்ஸ்ட்ராவாக வர உள்ளதால் இதன் வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் லுக் அடிப்படையில் வெகு சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக இதில் பவர்ஃபுல்லான இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

2024 force gurkha video review

என்னதான் பவர்ஃபுல்லான இன்ஜின் பொருத்தப்பட்டாலும், இந்த காரின் எடை அதிகமாக இருப்பதால் அந்தப் பவரை நம்மால் உணர முடியவில்லை. அதேநேரம் இந்த கார் ஆஃப் ரோட்டில் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. பள்ளமேடுகள், சேரு, சகதி, மலைப்பகுதிகள் என எந்த இடத்திலும் இந்த கார் அசால்டாக செல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, April 29, 2024, 12:19 [IST]
English summary
2024 force gurkha 5 door off road suv watch video review in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+