மாருதி, மஹிந்திரா எல்லாம் ஓரமா போ! ஃபோர்ஸ் கூர்கா காரின் விலை கம்மி தானா?
ஃபோர்ஸ் நிறுவனம் 2024 கூர்கா என்ற ஆஃப் ரோடு எஸ்யூவி காரை அப்டேட் செய்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூபாய் 16.75 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது. மூன்று டோர் மற்றும் ஐந்து டோர் ஆகிய இரண்டு வெர்ஷன்களில் இந்த கார் அறிமுகமாகியுள்ளது. இந்த காருக்கான புக்கிங்கும் என்று முதல் துவங்குகிறது. இது குறித்த விரிவான விபரங்கள் காணலாம் வாருங்கள்.
ஃபோர்ஸ் நிறுவனம் தனது கூர்க்கா என்ற எஸ்யூவி காரை தற்போது அப்டேட் செய்து 2024 போர்ஸ் கூர்கா என்ற பெயரில் இன்று அதிகாரப்பூர்வமாக விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் இதற்கு முன்னாள் கடந்த 2021ம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இது ஆஃப் ரோடு கார் விரும்பிகள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபோர்ஸ் நிறுவனம் இந்த அப்டேட்டில் புதிய அலாய் வீல்கள், ஹெட் லைட் மற்றும் கிரில்கள் எல்லாம் புதிதாக வழங்கியுள்ளன. மொத்தம் இரண்டு விதமான வெர்ஷன்களில் இந்த கார் அறிமுகமாகிறது. அதன்படி மூன்று டோர் கொண்ட வெர்ஷன் மற்றும் ஐந்து டோர் கொண்ட வெர்ஷன் என்ற இரண்டு விதமான கார்கள் அறிமுகமாகியுள்ளன.
இதில் மூன்று டோர் கொண்ட வெர்ஷன் கார் 3.95 மீட்டர் நீளம் கொண்டதாகவும் ஐந்து டோர் கொண்ட வெர்ஷன் கொண்ட கார் 4.3 மீட்டர் நீளம் கொண்டதாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலவேட் ஆகிய கார்கள் எல்லாம் எப்படி நீளமாக இருக்கிறதோ அதே அளவில் தான் இந்த காரும் நீளமாக இருக்கிறது.

ஃபோர்ஸ் நிறுவனம் இந்த காரை அப்டேட் செய்யும்போது இந்த காருக்குள்ளும் பல்வேறு விதமான அப்டேட்களை செய்துள்ளன. முக்கியமாக புதிய அப்ஹோல்சரி மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றை வழங்கி உள்ளது. இது போக மற்ற அம்சங்களாக டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், டூயல் ஏர் பேக்குகள், 8.0 இன்ச் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டிஸ்ப்ளே ஆகியன வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் உள்ள இன்ஜினை பொறுத்த வரை 2.6 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 132 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் மட்டுமே இணைக்கப்படுகிறது.

இதில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கிடையாது. ஆனால் இந்த காரில் 4 வீல் டிரைவ் ஆப்ஷன் இருக்கிறது. லாக்கிங் டிஃப்ரன்சியல் மற்றும் ஷிப்ட் ஆகிய ஆப்சன் இதில் உள்ளன. 3 டோர் மற்றும் 5 டோர் கார்களில் இதே இன்ஜின் செட்டப் தான் உள்ளது.
இந்த கார் பல்வேறு விதமான ஆஃப் ரோடு அம்சங்கள் நிறைந்த காராக இருக்கிறது அதனால் இந்த காரை எடுத்துக்கொண்டு நீங்கள் சாலையில் செல்வதை விட ஆஃப் ரோட்டில் செல்வதுதான் சிறப்பான அனுபவத்தை தருகிறது. இந்த காரை எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழு ஓட்டி பார்த்தோம் ஓட்டி பார்த்தபோது இந்த விமர்சனம் தான் எங்களுக்கு இருந்தது.
ஏற்கனவே இந்த ஆஃப் ரோடு எஸ்யூவி செக்மெண்டில் மாருதி நிறுவனத்தின் ஜிம்னி காரும், மஹிந்திரா நிறுவனத்தின் தார் காரும் விற்பனையாகி வருகிறது. இதில் மாருதி நிறுவனத்தின் ஜிம்னி கார் ஐந்து டோர் வெர்ஷன் கொண்ட கார் மட்டுமே இந்தியாவில் விற்பனையாகிறது மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் 3 டோர் சீட்டர் கொண்ட கார் மட்டுமே இந்தியாவில் விற்பனையாகி வருகிறது.
தற்போது இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் போட்டியாக இரண்டு விதமான கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலையை பொறுத்தவரை 3 டோர் வெர்ஷன் கொண்ட கார்கள் ரூ16.75 லட்சம் என்ற விலையிலும் 5 டோர் வெர்ஷன் கொண்ட கார் ரூ18 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதற்கான புக்கிங்கும் இன்று முதல் துவங்குகிறது. ரூபாய் 25000 முன்பணம் செலுத்தி இந்த காரை புக் செய்யலாம்.
டிரைஸ்பார்க் கருத்து: ஆஃப் ரோடு எஸ்யூவி கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஃபோர்ஸ் கூர்கா கார் மீது நீண்ட நாட்களாக கண் இருந்தது. இதை தற்போது உள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு அப்டேட் செய்ய வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் இந்த அப்டேட்டை தற்போது நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது அதன் விலையையும் அறிவித்துள்ளது. பலர் இந்த காரை இனி புக் செய்ய அதிகமான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications









