கேக் வெட்டி கொண்டாட்டமா டெலிவிரி எடுக்குறாங்க - பென்ஸ் கார் என்ஜின் உடன் கிடைச்சா யாருக்குதான் குஷி இருக்காது!

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் (Force Motors), மஹாராஷ்டிராவை சேர்ந்த இந்திய ஆட்டோமொபைல் நிறுவனம். மஹிந்திரா, மாருதி சுஸுகி போன்ற முன்னணி கார் நிறுவனங்களுக்கு போட்டியாக வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக, சந்தையில் பிரபலமாக உள்ள மஹிந்திரா தார் வாகனத்திற்கு விற்பனையில் போட்டியாக குர்கா வாகனத்தை ஃபோர்ஸ் விற்பனை செய்து வருகிறது. மஹிந்திரா தாருக்கு போட்டியாக இருப்பதினாலேயே, கணிசமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் குர்காவுக்கு கிடைக்கின்றனர். குர்காவை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் அப்டேட் செய்திருந்தது. இந்த நிலையில், 2024 ஃபோர்ஸ் குர்கா வாகனத்தை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

புதிய 2024 குர்கா வாகனத்தை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 3-டோர் மற்றும் 5-டோர் ஆப்ஷன்களில் கடந்த மே மாதத்தில் அறிமுகம் செய்தது. 3 கதவுகளை கொண்ட புதிய ஃபோர்ஸ் குர்காவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.16.75 லட்சத்தில் இருந்தும், 5 கதவுகளை கொண்ட வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.18 லட்சத்தில் இருந்தும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

2024 force gurkha deliveries start

2024 ஃபோர்ஸ் குர்கா வாகனத்திற்கான முன்பதிவுகள் கடந்த மே மாதத்திலேயே துவங்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில், தற்போது முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு வாகனங்கள் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக, 2024 குர்காவை புக் செய்த முதற்கட்ட கஸ்டமர்கள் இந்த வாகனத்தை டெலிவிரி பெற்று, வீட்டிற்கு கொண்டு செல்ல துவங்கியுள்ளனர்.

2024 குர்காவின் டெலிவிரி பணிகள் துவங்கப்பட்டு இருப்பதை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் படங்களுடன் தெரிவித்துள்ளது. முன்பு விற்பனையில் இருந்த குர்கா வாகனத்துடன் ஒப்பிடுகையில், 2024 குர்கா வாகனம் கணிசமான அப்டேட்களை பெற்றுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து குர்காவை ஃபோர்ஸ் நிறுவனம் உருவாக்குகிறது.

2024 force gurkha deliveries start

இதனால், மெர்சிடிஸ் ஜி-வேகன் காரில் உள்ள நிறைய அம்சங்களை ஃபோர்ஸ் குர்காவில் காண முடியும். குறிப்பாக, 2024 குர்காவின் முன்பக்கத்தில் ஜி-வேகனில் இடம்பெறுவதை போன்று வட்ட வடிவில் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி டிஆர்எல்-கள், ஃபெண்டரில் பொருத்தப்பட்ட எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன், கார்னரிங் ஃபங்க்சன் உடன் ஃபாக் விளக்குகள், மடக்கக்கூடிய மேற்கூரை அலமாரி, ஸ்னோர்கெல், ஏணி உள்ளிட்டவற்றை 2024 குர்காவில் பெறலாம்.

ஃபோர்ஸ் குர்காவில் 18-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் 255-பிரிவு டயர்கள் உடன் பொருத்தப்படுகின்றன. இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்திற்கு உள்ளே, ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி உடன் 9-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, ஃபுல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் திரை, எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ORVM-கள், மடக்கக்கூடிய & சாய்க்கக்கூடிய ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

2024 force gurkha deliveries start

5-டோர் குர்காவில் 3வது இருக்கை வரிசையில் கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்படுகின்றன. ஃபோர்ஸ் குர்காவில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் பவர்ஃபுல்லான 2.6 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. குர்காவின் மிக முக்கியமான சிறப்பம்சங்களுள் இது ஒன்று. மெர்சிடிஸ் நிறுவனம் உற்பத்தி செய்யும் இந்த டர்போ டீசல் என்ஜின் முன்பு, அதிகப்பட்சமாக 95 பிஎச்பி மற்றும் 250 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது.

அது 2024 குர்காவில் அதிகப்பட்சமாக 140 பிஎச்பி மற்றும் 320 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் என்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி கொடுக்கப்படுகிறது. இந்த வாகனத்தின் முன் மற்றும் பின்பக்க சக்கரங்களை தேவைக்கேற்ப லாக் செய்துக் கொள்ளலாம் என்பதும் ஃபோர்ஸ் குர்காவின் முக்கியமான அம்சங்களுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2020இல் 2ஆம் தலைமுறை மஹிந்திரா தார் அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே அதற்கு போட்டியளிக்கும் விதமாக குர்காவை ஃபோர்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து, கடந்த மே மாதத்தில் 2024 குர்கா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது குர்காவை புக் செய்துள்ளவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இது 2024 குர்காவை புக் செய்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 18, 2024, 21:44 [IST]
English summary
2024 force gurkha suv deliveries start in india check all details here
மேலும்... #gurkha #force motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X