இரண்டுமே மேட்-இன் இந்தியா புராடெக்ட் தான்!! 3 கதவுகள் உடன் கிடைக்கும் இந்தியாவின் ஆஃப்-ரோடு வாகனங்கள்!

ஃபோர்ஸ் குர்கா (Force Gurkha) வாகனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட வெர்சன் சந்தையில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த டைப் வாகனங்களில் மஹிந்திரா தார் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஃபோர்ஸ் குர்காவின் விற்பனை பெரிய அளவில் இல்லை. ஆனால், புதிய அப்டேட் செய்யப்பட்ட குர்கா இந்த நிலையை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுஸுகி ஜிம்னியும் இந்த பிரிவில் விற்பனை செய்யப்படுகிறது என்றாலும், மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் குர்கா வாகனங்கள் 3 கதவுகளுடன் மட்டுமே கிடைக்கின்றன. மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் குர்கா வாகனங்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

force gurkha vs mahindra thar

சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ள 3-கதவு ஃபோர்ஸ் குர்காவின் நீளம் 3965மிமீ, அகலம் 1865மிமீ, உயரம் 2080மிமீ மற்றும் வீல்பேஸ் நீளம் 2400மிமீ ஆகும். மஹிந்திரா தார் இதனை காட்டிலும் 2 செ.மீ நீளம் அதிகமானது, 1 செ.மீ அகலமானது. ஆனால், தார் உடன் ஒப்பிடுகையில் குர்கா அரை அடி ஸ்கேல் அளவுக்கு உயரமானது. நீளம் அதிகமாக இருப்பதால், தார் வாகனத்தில் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 5 செ.மீ அதிகமாக உள்ளது.

தார் மற்றும் குர்கா இரண்டும் ஆஃப்-ரோடு வாகனங்கள் ஆகும். அதாவது, இவற்றை சகதி மிகுந்த ஆஃப்-ரோடுகளுக்கும் தைரியமாக கொண்டு செல்லலாம். இதற்கேற்றாற் போன்று, இவை இரண்டிலும் தரையில் இருந்து வாகனத்தின் அடிப்பகுதி நன்கு உயரமாக கொடுக்கப்படுகிறது. இருப்பினும், தார் மற்றும் குர்கா இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால், குர்காவில் வாகனத்தின் அடிப்பகுதி 7 மிமீ உயரமாக உள்ளது.

மஹிந்திரா தாரில் முன் மற்றும் பின் சக்கரங்கள் ஒரே நேராக கொடுக்கப்படுகின்றன. ஆனால், குர்காவில் முன் சக்கரங்களை காட்டிலும் பின் சக்கரங்கள் 57 மிமீ குறைவான இடைவெளி உடன் கொடுக்கப்படுகின்றன. குர்காவில் 10 மீட்டர் விட்டத்தில் வாகனத்தை திருப்பிவிடலாம். ஆனால், தார் வாகனத்தை திருப்ப 11.8 மீட்டர் விட்டம் தேவைப்படும். குர்காவில் அதிகப்பட்சமாக 700மிமீ ஆழமுள்ள நீரிலும், தாரில் 650மிமீ ஆழமுள்ள நீரிலும் இறங்கி செல்லலாம்.

force gurkha vs mahindra thar

ஃபோர்ஸ் குர்காவில் 2.5 லிட்டர் 4-சிலிண்டர், டர்போ-டீசல் என்கிற ஒரேயொரு என்ஜின் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால், மஹிந்திரா தாரில் 2.2 லிட்டர் 4-சிலிண்டர், டர்போ-டீசல் மற்றும் 1.5 லிட்டர் 4-சிலிண்டர், டர்போ-டீசல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. ஆக, இந்த இரு வாகனங்களும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்காது. என்ஜின் ஆப்ஷனை போல், குர்காவை மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே பெற முடியும்.

ஆனால், மஹிந்திரா தாரை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வாங்கலாம். ஆனால் இந்த கியர்பாக்ஸ் ஆப்ஷன் ஆனது 2.2 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். குர்காவில் மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது 5 கியர்களை மட்டுமே கொண்டது. ஆனால், தார் வாகனத்தில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டிலும் 6 கியர்கள் கிடைக்கின்றன.

பவர் அவுட்-புட்டை பொறுத்தவரையில், அளவில் பெரிய என்ஜினை கொண்டிருப்பதால் குர்காவில் 140 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். குர்காவில் 4-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. அதாவது, என்ஜினின் பவர் ஒரே நேரத்தில் அனைத்து சக்கரங்களுக்கும் செல்லும். ஆனால், தார் வாகனத்தை ரியர்-வீல்-டிரைவ் ஆப்ஷனிலும் வாங்கலாம். புதிய ஃபோர்ஸ் குர்கா வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் குர்கா இரண்டும் இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால், விலையிலும் இரண்டிற்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. இருப்பினும், மஹிந்திரா தார் வாகனத்தை ரூ.11.25 லட்சம் என்கிற குறைந்த விலையிலும் வாங்க முடியும். இந்த விலையில், ரியர்-வீல்-டிரைவ் ஆப்ஷனில் தார் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 30, 2024, 12:27 [IST]
English summary
2024 force gurkha vs mahindra thar dimensions engine specifications
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+