ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் ஓட்டி பார்க்க எப்படி இருந்தது? முழு ரைடு ரிவியூ தகவல் வீடியோவாக!

தென்கொரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai), அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் (Alcazar Facelift) கார் மாடலை இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த காரை அது விற்பனைக்குக் கொண்டு வந்தது. முன்பு விற்பனையில் இருந்த வெர்ஷனைக் காட்டிலும் படுகவர்ச்சியான காராக இதனை ஹூண்டாய் தயார் செய்திருக்கின்றது. சொல்லப்போனால், ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டாவை தழுவியே அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்டையும் ஹூண்டாய் தயார் செய்துள்ளது. குறிப்பாக, புதுப்பித்தலின் கீழ் ஏகப்பட்ட புதிய அம்சங்கள் பலவற்றை இந்த காரில் ஹூண்டாய் நிறுவனம் சேர்த்திருக்கின்றது.

இந்த கார் மாடலையே சமீபத்தில் ரைடு ரிவியூ செய்து பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. அப்போது அந்த கார் பற்றிய தெரிந்துக் கொண்ட முக்கிய விபரங்களையே இந்த பதிவில் வீடியோவாக தொகுத்து வழங்கி இருக்கின்றது. வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

கூடுதல் கவர்ச்சியான காராகவே ஃபேஸ்லிஃப்ட் அல்கஸார் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. லைட்டிங் செட்-அப், கிரில், பம்பர், பக்கவாட்டு பகுதி மற்றும் பின் பக்கம் என அனைத்திலும் ஹூண்டாய் மாற்றத்தைச் செய்திருக்கின்றது. குறிப்பாக, இந்த காருக்கு மிக அதிக அழகை சேர்க்கும் விதமாக ஹெட்லைட் மற்றும் டிஆர்எல் ஆகியவை உள்ளன.

Hyundai alcazar facelift review video

ஃபேஸ்லிஃப்ட் ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி இந்தியாவில் 6 மற்றும் 7 இருக்கைகள் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதேபோல், எஞ்சின் விஷயத்திலும் மூன்று விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அதில் இரண்டு பெட்ரோல், ஒன்று டீசல் ஆகும். இத்துடன், மிக முக்கியமான பாதுகாப்பு அம்சமாக இந்த காரில் ஃபேஸ்லிஃப்ட்டின்கீழ் லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பத்தை ஹூண்டாய் சேர்த்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 18, 2024, 19:15 [IST]
English summary
2024 hyundai alcazar facelift review video here we explained design features and driving impression
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+