இந்தியாவே தவம் கெடக்கும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! மண்டய பிச்சுக்க போகும் போட்டி நிறுவனங்கள்

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) வாங்குபவர்களின் எண்ணிக்கை தற்போது மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. இதில், ஹூண்டாய் நிறுவனமும் ஒன்றாகும்.

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் தற்போது மொத்தம் 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric) மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) ஆகியவை ஆகும். ஆனால் இவை இரண்டுமே சற்று காஸ்ட்லியான எலெக்ட்ரிக் கார்களாக உள்ளன.

2024 Hyundai Creta

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 23.84 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 24.03 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மறுபக்கம் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை 45.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் வெறும் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Hyundai Creta

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இவை இரண்டுமே சற்று விலை உயர்ந்தவையாக உள்ளன. எனவே இவற்றுடன் ஒப்பிடும்போது சற்று விலை குறைவான, அதே நேரத்தில் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) மற்றும் பல்வேறு அதிநவீன வசதிகளை (Features) கொண்ட மற்றொரு புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அது ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV) எலெக்ட்ரிக் கார் ஆகும். ஹூண்டாய் க்ரெட்டா இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஒரு மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக கார்களில் ஒன்று. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளை ஹூண்டாய் நிறுவனம் தீவிரமாக்கியுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டம் சர்வதேச மற்றும் இந்திய சாலைகளில் ஏற்கனவே தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போது எடுக்கப்பட்ட பல்வேறு ஸ்பை புகைப்படங்கள் கூட வெளியாகி, வைரலாக பரவின. ஆனால் இவை எல்லாம் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலுக்கு முந்தைய ஹூண்டாய் க்ரெட்டா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் ஆகும்.

ஆனால் இந்திய சாலைகளில் ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் வெர்ஷனின் சோதனை ஓட்டம் தற்போது முதல் முறையாக தொடங்கியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட 2024 க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலை கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் வெர்ஷனின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாள் நெருங்கி கொண்டிருப்பதையே இது உணர்த்துகிறது. அனேகமாக நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது 2025ம் ஆண்டின் தொடக்கத்திலோ, ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரில், 45 kWh பேட்டரி தொகுப்பு (Battery Pack) வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்ஜி கெமிக்கல் (LG Chem) நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளதாக கூறப்படும் இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 450 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக பயணம் செய்ய முடியும் என தெரிகிறது.

சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 2024 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட்டுள்ள பெரும்பாலான வசதிகள், அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 17 அல்லது 18 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும் என்றாலும் கூட, ஹூண்டாய் நிறுவனத்தின் மற்ற 2 எலெக்ட்ரிக் கார்களுடன் ஒப்பிடும்போது, மிகவும் குறைவான ஆரம்ப விலையில் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் கார் களமிறங்க போகிறது என்பது மட்டும் உறுதி.

More from DriveSpark

Article Published On: Thursday, January 25, 2024, 14:41 [IST]
English summary
2024 hyundai creta based ev testing commenced in india all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+