இரண்டில் எந்த காரை வாங்குவது என்றே தெரியல!! ஹூண்டாயின் தயாரிப்பு பளபளக்குது... 2024 கிரெட்டா!

ஹூண்டாய் மோட்டார் (Hyundai Motor) நிறுவனம் அதன் புதிய கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கான முன்பதிவுகளும், டெலிவிரிகளும் ஏற்கனவே துவங்கப்பட்ட நிலையில், இந்த புதிய கிரெட்டா காரை நமது டிரைவ்ஸ்பார்க் குழுவும் சமீபத்தில் ஓட்டி பார்த்தது. எங்களது விமர்சனங்களை ஏற்கனவே விரிவான ரிவியூவாக வழங்கி உள்ளோம்.

இ, இ.எக்ஸ், எஸ், எஸ் (ஆப்ஷ்னல்), எஸ்.எக்ஸ், எஸ்.எக்ஸ் டெக் மற்றும் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) என மொத்தம் 7 விதமான வேரியண்ட்களில் 2024 கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கஸ்டமர்களுக்கு டெலிவிரி செய்வதற்காக கிட்டத்தட்ட இந்த அனைத்து வேரியண்ட்களிலும் புதிய கிரெட்டா கார்கள் ஷோரூம்களுக்கு வர துவங்கிவிட்டன.

2024 hyundai creta entry-level variants

இந்த வகையில், ஷோரூம் ஒன்றின் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2024 ஹூண்டாய் கிரெட்டா காரின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்களான இ மற்றும் இ.எக்ஸ் -ஐ விவரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், 2024 கிரெட்டா இ மற்றும் இ.எக்ஸ் வேரியண்ட்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை விவரிக்கக் கூடியதாக இந்த வீடியோ உள்ளது.

எண்ட்ரீ-லெவல் இ வேரியண்ட்டில் புதிய கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை ரூ.10.99 லட்சமாகவும், அதற்கடுத்த நிலை வேரியண்ட்டான இ.எக்ஸ் -இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.17 லட்சமாகவும் உள்ளது. வீடியோவில், முதலாவதாக கார்களின் வெளிப்பக்கம் காட்டப்படுகிறது. இ வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில் அதே மாதிரியான தோற்றத்தை தான் இ.எக்ஸ் வேரியண்ட்டும் பெற்றுள்ளது.

2024 hyundai creta entry-level variants

2024 கிரெட்டாவின் இந்த எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்களில் எல்இடி டிஆர்எல்-கள், பாராமெட்ரிக் முன்பக்க க்ரில், ஃபெண்டர்களில் டர்ன் இண்டிகேட்டர்கள், காரின் உடல் நிறத்தில் கதவு கைப்பிடிகள் மற்றும் கனெக்ட்டிங் எல்இடி லைட் பார் உடன் எல்இடி டெயில்லேம்ப்கள் கிடைக்கும். ஆனால், முன்பக்கத்தில் புரோஜெக்டர் ஹலோஜன் ஹெட்லேம்ப்கள் தான் காரில் பொருத்தப்பட்டுள்ளன, எல்இடி ஹெட்லேம்ப் இல்லை.

சைடு மிரர்ஸை க்ரெட்டா இ வேரியண்ட்டில் மேனுவலாக தான் மடக்கவும்/ நீட்டவும் முடியும். ஆனால், இ.எக்ஸ் வேரியண்ட்டில் இதனை எலக்ட்ரிக் மூலமாக செய்யலாம். அதேபோல், மேற்கூரையில் இ வேரியண்ட்டில் சாதாரண ஆண்டென்னாவும், இ.எக்ஸ் வேரியண்ட்டில் சுறாவின் துடுப்பு வடிவிலான ஆண்டென்னாவும் கிடைக்கும்.

2024 hyundai creta entry-level variants

காருக்கு உள்ளே, இந்த இரு வேரியண்ட்களிலும் ஃபேப்ரிக் இருக்கைகள், பின் இருக்கை பயணிகளுக்கும் ஆர்ம்ரெஸ்ட், ரியர் ஏசி வெண்ட்ஸ், டைப் சி சார்ஜிங் துளைகள், மேனுவல் ஏசி, ஃபிளாட்-பாட்டம் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதேபோல், 4 ஜன்னல்களுக்கும் பவர் விண்டோஸ், கியா கேரன்ஸ் காரில் இருப்பது போன்றதான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கிராப் ஹேண்டில்ஸை இந்த இரு எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்களில் பெறலாம்.

இ.எக்ஸ் வேரியண்ட்டில் சிறிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கேபின் விளக்குகள் உடன் சன்கிளாஸ் ஹோல்டர் மற்றும் ஸ்டேரிங் சக்கரத்தில் இன்ஃபோடெயின்மெண்ட்டை கண்ட்ரோல் செய்யக்கூடிய பொத்தான்கள் கூடுதலாக கிடைக்கும். இந்த வசதிகளை எண்ட்ரீ-லெவல் இ வேரியண்ட்டில் பெற முடியாது. 2024 கிரெட்டா இ மற்றும் இ.எக்ஸ் வேரியண்ட்களை பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் ஆப்ஷனில் பெறலாம். டர்போ என்ஜின் ஆப்ஷனில் இவை இரண்டும் கிடைக்காது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஹூண்டாய் கிரெட்டா காரை எப்படியாவது காசை புரட்டி வாங்கி விட வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த இரு வேரியண்ட்கள் ஏற்றவையாக இருக்கும். ஏனெனில் இவைதான் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய வேரியண்ட்கள் ஆகும். மற்ற விலைமிக்க வேரியண்ட்கள் உடன் ஒப்பிடுகையில் இவற்றில் சில வசதிகளை பெற முடியாது என்றாலும், கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற கார்களாகவே கிரெட்டா இ மற்றும் இ.எக்ஸ் விளங்குகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, January 26, 2024, 15:00 [IST]
English summary
2024 hyundai creta entry level e and ex variants check full comparison here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X