ரோடு ஃபுல்லா இந்த கார் தான் ஓடுது! இந்த 5 விஷயம் தான் இதுக்கு முக்கியமான காரணம்!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் 2024ம் ஆண்டிற்காவ கிரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. பிரபலமாக அறியப்பட்ட மிட் சைஸ் எஸ்யூவி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது, கடந்த மூன்று மாதங்களில் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் இந்த காருக்கு குவித்துள்ளது. தொடர்ந்து முன்பதிவுகள் நடந்து கொண்டிருக்கின்றன. 2024 ஹூண்டாய் கிரெட்டா கார் அதன் விரிவான அப்டேட்கள் காரணமாக இந்திய SUV சந்தையில் மிகவும் விரும்பப்படும் வாகனமாக உள்ளது.

கிரெட்டா காரின் புதிய வடிவமைப்பு, அதன் முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, ​​மிகவும் ரக்கட் தோற்றத்தைக் கொடுக்கும். குறிப்பிடத்தக்க வெளிப்புற அப்டேட்களில் புதிய LED ஹெட்லைட்கள், அப்டேட் செய்யப்பட்ட டிஆர்எல்கள் மற்றும் முன்பக்கத்தில் ஒரு லைட் பார் ஆகியவை அடங்கும். பின்புறத்தில், லைட் பார் மூலம் இணைக்கப்பட்ட நேர்த்தியான LED டெயில் லைட்டுகள் வாகனத்தின் தோற்றத்தை மேலும் நவீனப்படுத்தி காட்டுகிறது.

hyundai creta

2024 கிரெட்டா காரின் உட்புறம் புதிய டூயல்-டோன் தீம் மூலம் அப்டேட் செய்யப்பட்டு, சமகால வடிவமைப்பை வழங்குகிறது. டேஷ்போர்டு தளவமைப்பு இப்போது இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பூட் ஸ்பேஸ் 433 லிட்டராக உள்ளது, மேலும் பின் இருக்கையில் இன்னும் மூன்று பெரியவர்கள் அமர முடியும், இருப்பினும் நடுவில் இருப்பவருக்கு ஹெட்ரெஸ்ட் இல்லை.

புதிய கிரெட்டா காரில் அடாஸ் தொழிற்நுட்பம், 6 ஏர்பேக்குகள், பிளைண்ட் வியூ மானிட்டர், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் அடாஸ் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

hyundai creta

2024 கிரெட்டா கார் மூன்று இன்ஜின் தேர்வுகளை வழங்குகிறது, இவை அனைத்தும் 1.5லிட்டர் கொள்ளளவு கொண்டவை. நேச்சுரல் அஸ்பிரன்ட் பெட்ரோல் இன்ஜின், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜின் மற்றும் டீசல் இன்ஜின் ஆகியவை இதில் அடங்கும். கியர் பாக்ஸ் தேர்வுகளில் 6 ஸ்பீடு மேனுவல், IVT , 7 ஸ்பீடு DCT (இரட்டை கிளட்ச் டிரான்ஸ்மிஷன்) மற்றும் 6 ஸ்பீடு டார்க் கண்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை அடங்கும்.

2024 ஹூண்டாய் கிரெட்டா கார் மார்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும், கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 உள்ளிட்ட பல மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்கு கடும் போட்டியை தருகிறது.

hyundai creta

ஹூண்டாய் 2024 கிரெட்டாவை 7 வேரியன்ட்களில் வழங்குகிறது: E,EX,S, S(O), SX, SX Tech மற்றும் SX(O). இதன் விலை ₹11 லட்சத்தில் துவங்கி ₹20.15 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது.. கூடுதலாக, கிரெட்டா காரின் N லைன் வெர்ஷன் N8 மற்றும் N10 ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது, இதன் விலை ₹16.82 லட்சம் முதல் ₹20.45 லட்சம் வரை இருக்கும். குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

2024 கிரெட்டா காரின் வடிவமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இன்ஜின் தேர்வுகள் ஆகியவைகளால் அதன் பிரிவில் வலுவான போட்டியாளராக இருப்பதை உறுதி செய்கிறது. ஏற்கனவே குறிப்பிடத்தக்க முன்பதிவுகளுடன், ஹூண்டாய் நிறுவனத்தின் சிறப்பாக விற்பனையாகும் காராக மாறியுள்ளது. போட்டித்தன்மை வாய்ந்த இந்திய எஸ்யூவி மார்கெட்டில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனால் இந்த காரின் விற்பனை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.

நீங்கள் எஸ்யூவி காரை வாங்கும் எண்ணத்தில் இருந்தால் நிச்சயம் இந்த ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காரையும் தேர்வு செய்யலாம். கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்திலேயே அதிகமாக விற்பனையாகும் காராக இந்த கார் தான் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா என்ற மிட் சைஸ் எஸ்யூவி காருக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகமாக இருப்பதற்கு மேலே சொன்ன 5 விஷயங்கள் தான் முக்கியமான காரணமாக இருக்கிறது. போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு போட்டியாக இந்த காரும் சிறப்பாக விற்பனையாகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 3, 2024, 14:28 [IST]
English summary
The 2024 Hyundai Creta launches in India, featuring design improvements, enhanced safety features, and a range of engine options, securing over 100,000 bookings.
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X