இந்தியர்கள் வாங்க துடிக்கும் புது ஹூண்டாய் காரின் விலை இவ்வளவுதானா!! மாருதிக்கு மேலும் தலைவலி ஸ்டார்ட்!

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Creta Facelift) கார் இந்திய மார்க்கெட்டில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய க்ரெட்டா காரின் விலை மற்றும் மற்ற சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக ஹூண்டாய் க்ரெட்டாவை சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால், கடந்த சில மாதங்கள் முன்பு வரையில் இந்தியாவின் நம்பர் ஒன் எஸ்யூவி காராக க்ரெட்டா விளங்கி வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக க்ரெட்டாவின் விற்பனை குறைய துவங்கியதை அடுத்து, க்ரெட்டாவை அப்டேட் செய்யும் வேலைகளில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இறங்கியது.

2024 hyundai creta facelift launched

இதன்படி, மெருக்கேற்றப்பட்ட 2024 க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இ (E), இ.எக்ஸ் (EX), எஸ் (S), எஸ் ஆப்ஷ்னல் (S (O)), எஸ்.எக்ஸ் (SX), எஸ்.எக்ஸ் டெக் (SX Tech) மற்றும் எஸ்.எக்ஸ் ஆப்ஷ்னல் (SX (O)) என மொத்தம் 7 விதமான வேரியண்ட்களில் 2024 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் இருந்து காரில் பனாரோமிக் சன்ரூஃப் கிடைக்கும். புதிய கிரெட்டா காரின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.10,99,900 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது க்ரெட்டாவின் முந்தைய ஆரம்ப விலையை காட்டிலும் வெறும் ரூ.10,000 என்ற மட்டுமே அதிகம் ஆகும். 2024 க்ரெட்டா காரை மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் வாங்கலாம். 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்பன அந்த 3 என்ஜின் ஆப்ஷன்கள் ஆகும்.

2024 hyundai creta facelift launched

ஆனால் தற்போதைக்கு, இவற்றில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கும் 2024 க்ரெட்டா கார் வேரியண்ட்களின் விலைகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் இ.எக்ஸ் வேரியண்ட்டின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12,17,700, எஸ் வேரியண்ட்டின் விலை ரூ.13,39,200, எஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டின் விலை ரூ.14,32,400, எஸ்.எக்ஸ் வேரியண்ட்டின் விலை ரூ.15,26,900, எஸ்.எக்ஸ் டெக் வேரியண்ட்டின் விலை ரூ.15,94,900 மற்றும் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டின் விலை ரூ.17,23,800 ஆகும்.

ஆனால், மற்ற என்ஜின் ஆப்ஷன்களுடனும் 2024 க்ரெட்டா காரை விருப்பப்படுவோர் ரூ.25 ஆயிரம் முன்தொகையை செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு புதிய க்ரெட்டா காரை டெலிவிரி கொடுக்கும் பணிகள் இந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் புது க்ரெட்டா காரை வாங்கலாம்.

2024 hyundai creta facelift launched

புதிய க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரில் மிக முக்கியமான அப்டேட்டாக லெவல்-2 அடாஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கான திரை உள்ளிட்டவை அளவில் சற்று பெரியதாக 10.25 இன்ச்சில் டேஸ்போர்டில் வழங்கப்பட்டுள்ளன. காரின் ஸ்டேரிங் சக்கரம் மல்டி-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரமாக மாற்றப்பட்டுள்ளது.

இவற்றுடன், 360-டிகிரி கேமராவையும் புதிய அப்டேட்டாக ஹூண்டாய் க்ரெட்டா கார் பெற்றுள்ளது. கியர்பாக்ஸ் ஆப்ஷன்களாக, 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஐஎம்டி, 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை என்ஜினை பொறுத்து பெறலாம். இதில் மேனுவல் கியர்பாக்ஸை வாங்கினால் காரில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஸ்டாப் & கோ வசதி கிடைக்காது.

2024 hyundai creta facelift launched

சஸ்பென்ஷனுக்கு புதிய க்ரெட்டா காரின் முன்பக்கத்தில் காயில் சுருள்கள் உடன் மெக்பெர்சன் ஸ்ட்ரட்டும், பின்பக்கத்தில் டோர்சன் பீம் ஜோடியும் வழங்கப்பட்டுள்ளன. ஈக்கோ நார்மல் & ஸ்போர்ட் என 3 டிரைவ் மோட்களையும், பனி, சகதி & மணல் என்ற 3 டிராக்‌ஷன் மோட்களையும் இந்த காரில் பெறலாம். புதிய க்ரெட்டாவின் நீளம் 2610மிமீ, அகலம் 1790மிமீ மற்றும் உயரம் 1635மிமீ ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய சந்தையில் தற்கால மாடர்ன் கார்களை பொறுத்தவரையில் ஓர் தவிர்க்க முடியாத கார் க்ரெட்டா ஆகும். இந்த நிலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் அளவிற்கு, மிகவும் ஸ்டைலிஷாக, கொரியன்-ஸ்டைலில் 2024 க்ரெட்டா உருவாக்கப்பட்டு உள்ளதை கூறியே ஆக வேண்டும். விலையும் அதற்கேற்ப மக்கள் பலரால் வாங்கக்கூடிய வகையில் நிர்ணயிக்கப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பு.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 16, 2024, 13:26 [IST]
English summary
2024 hyundai creta facelift launched price features engine all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X