வெறும் ரூ1 லட்சம் இருந்தா போதும் இந்த இவி காரை புக் பண்ணலாம்! ஊரே உங்களை தான் திரும்பி பார்க்கும்
ஆட்டோமொபைல் தயாரிப்பில் பல்வேறு விருதுகளைப் பெற்ற ஹுண்டாய் நிறுவனத்தின் அயானிக் 5 கார் தற்போது புதிய அம்சங்கள் மற்றும் புதிய நிறத்துடன் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த காரை வாங்குபவர்களுக்கு புதிய கலர் ஆப்ஷன் கிடைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனத்தில் அயானிக் 5 கார் போக கோனா என்ற காரும் சேர்த்து மொத்தம் இரண்டு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகி வருகின்றன. இந்த இரண்டு எலெக்ட்ரிக் கார்களும் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. இந்த விற்பனையை மேலும் அதிகரிப்பதற்காக ஹுண்டாய் நிறுவனம் தனது அயானிக் 5 காரில் புதிய கலர் ஸ்கிம்மை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி அயானிக் 5 கார் தற்போது டைட்டான் கிரே என்ற புதிய கலருடன் விற்பனைக்கு வருகிறது. ஏற்கனவே கிராவிட்டி கோல்ட் மேட்,ஆப்டிக் ஒயிட் மற்றும் மிட்நைட் பிளாக் பியர்ல் ஆகிய மூன்று கலரில் விற்பனையாகி வந்த நிலையில் தற்போது கார் நான்காவது கலராக டைட்டான் கிரே கலரும் சேர்ந்துள்ளது.
இந்த ஹூண்டாய் நிறுவனத்தின் அயானிக் 5 காரின் உட்புறத்தை பொருத்தவரை ஆக்ஸிஜன் பிளாக் மற்றும் டார்க் ட்ரிபிள் கிரே ஆகிய நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் முழுமையாக குளோபல் மாடுலர் பிளாட்பார்ம் எனப்படும் இ-ஜிஎம்பி பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வேகமான சார்ஜிங் மட்டும் அதிக ரேஞ்ச் கொண்ட காராக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்புறம் அதிகமான இடவசதி இருப்பதால் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் நேரடியான டி2சி போர்டல் வழியாக ரூபாய் 1 லட்சத்தை முன்பணமாக செலுத்தி இந்த காரை வாங்க முடியும். 2023-ம் ஆண்டு தான் அப்பொழுது முதல் தற்போது வரை 1400 கார்கள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளன.
இந்நிலையில் புதிய கலர் ஸ்கீம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த காரின் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அயானிக் 5 காரின் பேட்டரியை பொருத்தவரை 72.6 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் 214 எச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.6 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரை ஒரு தடவை சார்ஜ் செய்தால் 631 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் செல்லும் என சான்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த அயானிக் 5 கார் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளது.
சமீபத்தில் இந்த அயானிக் 5 காருக்கு 2024-ம் ஆண்டு சிறந்த பெர்ஃபார்மன்ஸ் கார் என்ற சர்வதேச விருதை பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த கார் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்து வருகிறது. இந்த கார் சர்வதேச அரங்கில் மொத்தம் மூன்று விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. ஸ்டாண்டர்ட், நியூ எல்லைன் மற்றும் என் ஆகிய வேரியன்ட்கள் தற்போது கிடைக்கப்பெறுகின்றன.

இந்த காரில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக டிரைவர் மற்றும் பயணிகளின் நலனுக்காக பல்வேறு அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வயர்லெஸ் சார்ஜிங் பேட் வழங்கப்பட்டுள்ளது. கிளைமேட் கண்ட்ரோல் பட்டன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அப்புறம் 12.3 இன்ச் கொண்ட இரண்டு டிஜிட்டல் ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்காகவும் மற்றொன்று டிரைவர் டிஸ்ப்ளேக்காகவும் வழங்கப்பட்டுள்ளன.
இதுபோக இந்த காரில் ஹீட்டர் மற்றும் வென்டிலேட்டட் சீட்டிங், ஹீட்டட் ஸ்டியரிங் வீல், பார்க்கிங் அசிஸ்ட், சென்ட்ரல் கன்சோல், கப் ஹோல்டர் உள்ளிட்ட ஏகப்பட்ட அப்டேட்கள் உள்ளன. விரைவில் இந்த அப்டேட்களுடன் வரப் போகும் இந்த காரில் 84 கிலோ வாட் அவர் பேட்டரி பேக் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ரேஞ்ச் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை ஹேண்ட் ஆன் ஸ்டீரிங் வீல் டிடெக்சன், ரிமோட் ஸ்மார்ட் பார்க்கிங் அசிஸ்ட், முன்பக்கம் பின்பக்கம் பக்கவாடுகளில் பார்க்கிங் சென்சார்கள், உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இதுபோக இந்த கார் டிஜிட்டல் கீயுடன் வருகிறது. இந்த காரில் உள்ளே கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சீட்டுகள் எல்லாம் ரிமோட் மூலம் மடக்கிக் கொள்ளும் ஆப்ஷன் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் மார்க்கெட்டில் உள்ள கியா இவி 6, பிஓய்டி அட்டோ3, பிஒய்டி இ6 ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இருந்தாலும் இந்த கார் நல்ல அம்சங்கள் மற்றும் லுக் கூட நிற்பதால் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. அப்டேட் செய்யப்பட்டவுடன் இன்னும் விற்பனை அதிகமாக தான் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications









