இந்த கார்ல பேட்டரியை மாத்தப்போறாங்களாம்! என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம்?
ஹூண்டாய் நிறுவனத்தின் அயனிக்5 காரின் வெர்ஷனை ஃபேஸ்லிப்ட் செய்து அந்நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த காரில் பெரிய பேட்டரி ஆப்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள். சமீப காலமாக ஹூண்டாய் நிறுவனத்திடம் இருந்து புதிய கார் ஒன்றை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றால் அந்த அயானிக் 5 காரின் அப்டேட் வெர்ஷன் கார் தான்.
இந்த கார் அப்டேட் செய்யப்பட்டு விரைவில் அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. இந்த காரில் ஹூண்டாய் நிறுவனம் சிறிய ஃபேஸ்லிப்ட் அம்சங்களையும் செய்துள்ளது. புதிதாக வரவுள்ள 2024 ஹூண்டாய் ஃபேஸ்லிப்ட் மற்றும் புதிய அயானிக் ஆன்லைன் வெர்ஷன் ஆகிய இரண்டு கார்களும் அயானிக் 5 என்ற காருக்கு கீழாக விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த காரின் டிசைன் வடிவமைப்பை பொறுத்தவரை நீங்கள் லென்ஸ் வைத்து பார்த்தாலும் வித்தியாசம் கண்டுபிடிப்பது சிரமமாக தான் இருக்கும். இதற்கு முன்னர் உள்ள மாடலின் அதே டிசைன் கிட்டத்தட்ட மெயின்டெயின் செய்யப்பட்டுள்ளது. டிசைன் தான் அந்த காரின் முக்கியமான விஷயம் என்பதால் அதில் மாற்றங்கள் செய்ய நிறுவனம் விரும்பவில்லை. பெரிய டிசைன் மாற்றம் என்றால் இந்த காரின் பின்பக்க பம்பர் பகுதியில் ஸ்போர்ட்டியான சிறிய டிசைன் மாற்றப்பட்டுள்ளது.
பின்பக்கம் உள்ள பம்பரில் டிசைன் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் காரின் ஒட்டுமொத்த நீளம் 20 மீமி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல காரின் அகலமும் 50மீமி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பக்கமும் பம்பரில் டிசைன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கம் கீழ்ப்பகுதியில் உள்ள பம்பர் புல்பார் மாதிரியான டிசைன் வடிவமைப்பை கொண்டதாக இருக்கிறது.

இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை சிறிய சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக பட்டன்களின் டிசைன்கள் எல்லாம் மாற்றப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் போர்ட் இடம் மாற்றப்பட்டு வேறு டிசைனில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள டிசைன் சவுகரியமாக இருக்கிறது. கிளைமேட் கண்ட்ரோலை செட் செய்யும் டச்சு சென்சிடிவ் பேனல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலில் யுஎஸ்பி போர்ட் குறித்த எந்த தகவலையும் ஹூண்டாய் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இதற்கு முந்தைய மாடலில் டைப் ஏ போர்ட் மற்றும் டைப் சி போர்ட்களும் இருந்தன. தற்போது உள்ள கார் அறிமுகமாகும் போது தான் இது குறித்த தகவல் எல்லாம் தெரியும். பழைய மாடலில் உள்ள போர்ட்டுகள் எல்லாம் கியா இவி6 காரில் உள்ள அதே போர்ட்டுகளாக இருந்தன.

இதுபோக இந்த காரில் புதிய பாதுகாப்பு அம்சங்களாக ஹேண்ட்ஸ் அப் டிடெக்ஷன் ஸ்டியரிங் வீல், லேன்கீப் அசிஸ்ட்2, ரிமோட் ஸ்மார்ட் பார்க்கிங் அசிஸ்ட் 2, முன்பக்கம்/ பக்கவாட்டுப்பகுதி/ பின்பக்கம்/ ஆகியவற்றை கொல்யூஷன் தடுப்பு கருவி, முன்பக்க லைட்டிங் சிஸ்டம், டிஜிட்டல் கீ, பில்டிங் கேமரா, இரண்டாவது வரிசை சீட்டை ரிமோட், மூலம் மடித்துக் கொள்ளும் வசதி உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.
இந்த பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட அயானிக் 5 லைன் வெர்ஷன் ஒரு கார் என்பதால் இதன் வீல் பகுதி 20 இன்ச் அலுமினியம் வீலாகவும், பக்கவாட்டில் ஸ்போடிக் பிளேட், வழங்கப்பட்டுள்ளது. இதுபோக தனித்துவமான பம்பர் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக பழைய மாடல் இருந்த பேட்டரி முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டு புதிய பேட்டரி ஆக வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பழைய மாடலில் 77.4கிலோவாட்ஹவர் திறன் கொண்ட பேட்டரி தற்போது 84கிலோவாட்ஹவராக மாற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த காரின் ரேஞ்ச் அதிகமாக உள்ளது. ரேஸ் குறித்த விபரங்கள் எல்லாம் பின்னர் வெளியிடப்படும் தற்போது இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட காராக இருந்தாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த கார் உதிரிபாகங்களை மட்டும் இறக்குமதி செய்து இந்தியாவில் கட்டுமானம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் காராக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தை பொருத்தவரை தனது அயானிக் பைவ் காரை மிக சிறந்த காராக வடிவமைத்து விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த காரை வாங்க மக்கள் மத்தியில் போட்டி இருக்கிறது. அதிக விலை இருப்பதால் விற்பனை எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் மக்கள் மத்தியில் இந்த காருக்கு பெரும் வரவேற்பிருக்கிறது.


Click it and Unblock the Notifications









