ராணுவ கேண்டீனில் வெர்னா காரை வாங்கினால் 1.25 லட்ச ரூபாவை மிச்சம் பண்ணலாம்.. வேற லெவல் காராச்சே இது!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் வெர்னா (Verna)-வும் ஒன்றாகும். இது ஓர் செடான் ரக கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியர்கள் மத்தியில் இந்த கார் மாடலுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, செடான் ரக கார் பிரியர்கள் மத்தியில் ஓரளவிற்கு சிறப்பான வரவேற்பையே இந்த கார் மாடல் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இத்தகைய ஓர் கார் மாடலையே ஹூண்டாய் நிறுவனம், சமீபத்தில் ராணுவ வீரர்களுக்காக, கேண்டீன் ஸ்டோர்ஸ் டிபார்ட்மெண்ட் (சிஎஸ்டி)-இல் இணைத்தது.
அதாவது, ராணுவ வீரர்கள் சற்றே குறைவான விலையில் இந்த காரை வாங்கிக் கொள்ளும் பொருட்டு கேண்டீனில் இக்காரை ஹூண்டாய் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஆகையால், இந்த காரை நம்மை விட மிகப் பெரிய அளவில் குறைவான விலையில் ராணுவ வீரர்களால் வாங்கிக் கொள்ள முடியும் என்கிற சூழல் தற்போது உருவாகி இருக்கின்றது.

எவ்வளவு குறைவான விலையில் இந்த கார் ராணுவ கேண்டீனில் வாங்கிக் கொள்ள முடியும் என்பது பற்றிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். ஹூண்டாய் வெர்னா இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 14 விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் உயர்நிலை தேர்வுகள் நான்கு மட்டும் ராணுவ கேண்டீனில் விற்பனைக்குக் கிடைக்காது என தெரிகின்றது.
1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், மேனுவல் கியர்பாக்ஸைக் கொண்ட எஸ்எக்ஸ் டூயல் டோன், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், மேனுவல் கியர்பாக்ஸைக் கொண்ட எஸ்எக்ஸ் (ஓ) டூயல் டோன், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், ஆட்டோமேட்டிக் டிசிடி கியர்பாக்ஸைக் கொண்ட எஸ்எக்ஸ் டூயல் டோன் மற்றும் ஆட்டோமேட்டிக் டிசிடி கியர்பாக்ஸைக் கொண்ட எஸ்எக்ஸ் (ஓ) டூயல் டோன் ஆகியவையே ராணுவ கேண்டீனில் விற்பனைக்குக் கிடைக்காது என்பது தெரிய வந்திருக்கின்றது.
மற்ற தேர்வுகள் அனைத்தும் இந்த ராணுவ கேண்டீனில் விற்பனைக்குக் கிடைக்கும். இங்கு ராணு வீரர்களால் நம்மை விட ரூ. 1.25 லட்சம் தொடங்கி ரூ. 1.70 லட்சம் வரை குறைவான விலையில் வெர்னா செடான் கார் மாடலை அவர்களால் வாங்கிக் கொள்ள முடியும்.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் வெர்னாவின் ஆரம்ப நிலை தேர்வான இஎக்ஸ்-ஐ சாமானியர்கள் வாங்க வேண்டும் எனில் எக்ஸ்-ஷோரூமிலேயே ரூ. 11 லட்சத்தைக் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், இதே தேர்வை ராணுவ வீரர்கள் ராணுவ கேண்டீனில் ஜிஎஸ்டி மற்றும் டிசிஎஸ் ஆகிய கட்டணங்களைச் சேர்த்தே ரூ. 9.72 லட்சத்திற்கு வாங்கிக் கொள்ள முடியும்.
இது நாம் வாங்கும் எக்ஸ்-ஷோரூம் விலையைக் காட்டிலும் ரூ. 1.27 லட்சம் குறைவான விலை ஆகும். இதேபோல், வெர்னா எஸ் தேர்வை ராணுவ கேண்டீனில் ரூ. 1.25 லட்சமும், எஸ்எக்ஸ் வேரியண்டை ரூ. 1.32 லட்சமும், எஸ்எக்ஸ் (ஓ) வேரியண்டை ரூ. 1.37 லட்சமும் குறைவான விலையில் வாங்கிக் கொள்ள முடியும்.
இருப்பதிலேயே 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் மற்றும் ஆட்டோமேட்டிக் டிசிடி கியர்பாக்ஸ் உடன் விற்பனைக்குக் கிடைக்கும் எஸ்எக்ஸ் (ஓ) வேரியண்டே மிக குறைவான விலையில் ராணுவ கேண்டீனில் விற்கப்படுகின்றது. அது ரூ. 1.70 லட்சம் வரை குறைவான விலையிலேயே கேண்டீனில் விற்கப்படுகின்றது. ஆகையால், ராணுவ வீரர்களால் இந்த காரை வாங்கும் மிகப் பெரிய தொகையை மிச்சப்படுத்தும் என்பது தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ராணுவ வீரர்களுக்கான கேண்டீனில் கார்களை வாங்கும்பட்சத்தில் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும். இத்தகைய ஓர் கேண்டீனில் ஹூண்டாய் வெர்னா இணைக்கப்பட்டிருப்பது ராணுவ வீரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவலாக அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








