பாசிட்டிவாக துவங்கும் 2024! ஆரம்பமே அமர்க்களப்படுத்துற மாதிரி 4 கார்கள் வரப்போகுது!

2024-ம் புத்தாண்டு பிறந்துவிட்ட நிலையில் இந்தியாவில் பல புதிய கார்கள் அறிமுகமாக உள்ளன. அதன்படி இந்த ஜனவரி மாதமே நான்கு புதிய கார்கள் அறிமுகம் ஆகிறது. மெர்சிடிஸ் பென்ஸ், ஹூண்டாய், கியா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் தலா ஒரு கார்களை இந்த மாதம் அறிமுகம் படுத்த திட்டமிட்டுள்ளன. அப்படியாக இந்த மாதம் அறிமுகமாக உள்ள கார்கள் பற்றி காணலாம் வாருங்கள்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ்: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வரும் 8ம் தேதி தனது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஜிஎல்எஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சர்வதேச அரங்கில் அறிமுகமாகிவிட்டது. இந்த காரை தான் இந்நிறுவனம் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்து இந்திய வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்துகிறது.

2024 january car launches

சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகமான ஜிஎல்எஸ் காரில் ஒரு சில அப்டேட்கள் செய்யப்பட்டு இந்தியாவிற்கு இந்த கார் அறிமுகமாக வருகிறது. முக்கியமாக இந்த காரின் உட்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் எம்பக்ஸ் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. புதிய அப்ஹோல்சரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புதிய பார்க்கிங் சூட் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இடம் பெறுகிறது.

இந்த கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது ரூபாய் ஒரு கோடி என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன் இன்ஜினை பொருத்தவரை 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உள்ளன. இது 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் இணைக்கப்படுகிறது. இந்த கார் 4 வீல் டிரைவ் சிஸ்டமாக விற்பனைக்கு வருகிறது.

2024 january car launches

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா செய்து வரும் 16ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த அப்டேட்டில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அப்டேட் செய்யப்படும். இந்த காரில் முன்பக்கம் உள்ள டிசைன்கள் மறுபடியும் செய்யப்பட்டுள்ளன. அதே போல பின்பக்கமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்புறத்திலும் முக்கியமான மாற்றங்கள் இடம் பெற உள்ளன. முக்கியமாக லெவல் 2 அடாஸ் சிஸ்டம் இதில் பொருத்தப்பட உள்ளது. இந்த காரின் இஞ்சினை பொருத்தவரை 1.5லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 160 பிஎஸ் பவரையும் 283 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.

2024 january car launches

கியா சோனட் ஃபேஸ்ஃலிப்ட்: கியா நிறுவனம் 2024 சோனட் ஃபேஸ்ஃலிப்ட் காரை இந்த மாதம் அறிமுகப்படுத்தப் போகிறது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த புதிய அப்டேட்டில் இந்த காரியம் வெளிப்புறத் தோற்றம் பல்வேறு மாற்றங்களை பெறுகின்றன. முக்கியமாக முன்புறம் உள்ள தோற்றம் பல்வேறு அப்டேட்களை பெறுகிறது. இதன் கிரில், ஹெட்லைட் உள்ளிட்ட பகுதிகளெல்லாம் அப்டேட் செய்யப்படுகின்றன.

அப்டேட் செய்யப்பட்ட காரில் புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் பொருத்தப்படுகிறது. இந்த காரில் முக்கியமாக லெவல் 1 அடாஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட உள்ளது. இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில் இந்த காரின் விலை குறித்து அறிவிப்புகள் எல்லாம் இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெலிவரியும் இதே மாதம் துவங்க வாய்ப்புள்ளது.

2024 january car launches

மஹிந்திரா எக்ஸ்யூவி 400: மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காராக இந்த எக்ஸ்யூவி 400 கார் இருக்கிறது . இந்த கார் தான் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் என்ற அதிக விற்பனையில் இருக்கும் இவி காரில் மார்க்கெட்டில் மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்துகிறது. இதில் சில பிரிமியம் அம்சங்கள் இடம் பெற்று அந்த கார் தற்போது அறிமுகமாக தயாராகி வருகிறது.

இந்த மாதம் இந்த புதிய எக்ஸ்யூவி 400 கார் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்த காரின் உட்புறத்தில் பல்வேறு மாற்றங்கள் இடம் பெற வாய்ப்புள்ளது. அதன்படி இந்த காரின் உள்ளே 10.25 இன்ச் அளவில் இரண்டு ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒன்று இன்போடெயின்மெண்ட் பயன்பாட்டிற்காகவும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் கண்ட்ரோல் பயன்படுத்தவும் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2024 ஆம் ஆண்டு துவங்கும் போது ஆட்டோமொபைல் ரசிகர்களுக்கு நற்செய்தியாக நான்கு புதிய கார்கள் அறிமுகமாகிறது. இதில் அனைத்து கார்களும் தரமான கார்களாகவே உள்ளன. இந்த கார்களுக்காக மக்கள் நீண்ட நாட்கள் காத்திருக்கிறார்கள். இந்த கார்கள் எல்லாம் அறிமுகமானவுடன் நிச்சயம் ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, January 1, 2024, 12:46 [IST]
English summary
2024 january car launches india new auto models debut
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X