ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்

மேம்படுத்தப்பட்ட 2024 ஜீப் வ்ராங்லர் ஃபேஸ்லிஃப்ட் (Jeep Wrangler Facelift) கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.67.65 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வ்ராங்லர் காரின் சிறப்பம்சங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்கன் கார் தயாரிப்பு நிறுவனமான ஜீப் அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் வ்ராங்லர் காரை இந்தியாவிலும் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், அப்டேட் செய்யப்பட்ட ஜீப் வ்ராங்லர் இந்தியாவில் ரூ.67.65 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அன்லிமிடெட் மற்றும் ரூபிகான் என 2 விதமான வேரியண்ட்களில் 2024 வ்ராங்லர் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

2024 jeep wrangler facelift launched

இதில் அன்லிமிடெட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை தான் ரூ.67.65 லட்சம் ஆகும். வ்ராங்லர் ரூபிகானின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.71.65 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய வ்ராங்லர் காருக்கு இந்தியாவில் ஏற்கனவே 100க்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றுவிட்டதாக ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக, புதிய வ்ராங்லரில் சிறிய அளவிலான முன்பக்க க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, முன்பு இருந்ததை காட்டிலும் சிறியதான க்ரில் பகுதி புதிய வ்ராங்லரில் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல், வ்ராங்லரின் க்ரில் அமைப்பில் செங்குத்தாக 7-ஸ்லாட்கள் உள்ளன. மேலும், க்ரில் அமைப்பில்தான் பார்க்கிங் கேமரா இடம்பெற்றுள்ளது. க்ரில்லின் தோற்றத்தை மாற்றியதோடு, கொரில்லா கண்ணாடி விண்ட்ஷீல்டை 2024 வ்ராங்லரில் ஜீப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த விண்ட்ஷீல்டில் தான் ஆண்டென்னாவும் இடம்பெற்றுள்ளது.

2024 jeep wrangler facelift launched

வ்ராங்லரின் அலாய் சக்கரங்களின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இந்த வாகனத்தின் மேற்கூரை மற்றும் கதவுகளை மொத்தமாக நீக்கிக் கொள்ள முடியும். இது, ஜீப் வ்ராங்லரில் வழக்கமாக வழங்கப்படும் அம்சமே ஆகும். வாகனத்திற்கு உள்ளே, எலக்ட்ரிக் மூலமாக 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகளை புதிய வ்ராங்லர் கொண்டுள்ளது.

இதனுடன், ஜீப் யு-கனெக்ட் சாஃப்ட்வேரை கொண்ட 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரையும் இந்த ஆஃப்-ரோடு வாகனத்தில் உள்ளது. இந்த இன்ஃபோடெயின்மெண்ட் திரையின் வாயிலாக ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே கனெக்ட்டிவிட்டி வசதிகளையும், பயணத்திற்கான வழிக்காட்டுதல்களையும் பெறலாம். மேலும், இன்ஃபோடெயின்மெண்ட் திரை உடன் ப்ளூடூத் மூலமாக ஒரே நேரத்தில் 2 மொபைல் போன்களை இணைத்துக் கொள்ள முடியும்.

2024 jeep wrangler facelift launched

இவற்றுடன், 2024 வ்ராங்லரில் மொத்தம் 7 யுஎஸ்பி டைப்-ஏ மற்றும் டைப்-சி சார்ஜிங் துளைகள் உள்ளன. இதனால், இந்த வாகனத்தில் பயணிக்கும் அனைவரும் ஒரே நேரத்தில் தங்கள் அனைவரது மொபைல் போனையும் சார்ஜ் செய்ய முடியும். புதிய வ்ராங்லர் ஃபேஸ்லிஃப்ட் காரிலும் வழக்கமான அதே 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.

அதிகப்பட்சமாக 270 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. என்ஜினின் ஆற்றலை, இந்த கியர்பாக்ஸ் காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் அனுப்பும். புதிய வ்ராங்லரில் அடாஸ் (ADAS) வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

2024 jeep wrangler facelift launched

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஜீப் வ்ராங்லரில் வழங்கப்பட்டுள்ள மிக முக்கிய அம்சங்களை மட்டுமே இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். இவை இல்லாமல், மற்ற ஆஃப்-ரோடு வாகனங்களில் கொடுக்கப்படும் வழக்கமான தொழிற்நுட்ப வசதிகளையும் 2024 ஜீப் வ்ராங்லர் பெற்றுள்ளது. 2024 ஜீப் வ்ராங்லரை ஓட்டிப் பார்த்து நாங்கள் எங்களது டெஸ்ட் டிரைவ் ரிவியூவை வழங்கியுள்ளோம். அதனை எங்களது டிரைவ்ஸ்பார்க் தளத்தில் காணலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 25, 2024, 16:09 [IST]
English summary
2024 jeep wrangler facelift launched in india price features engine all details
மேலும்... #ஜீப் #jeep #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X