சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ

பிரபல அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான ஜீப் (Jeep), இந்தியாவில் அதன் புதுப்பிக்கப்பட்ட விராங்ளர் எஸ்யூவி (Wrangler Facelift) காரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. தான் ஓர் எஸ்யூவி கார் ஸ்பெஷலிஸ்ட் என்பதை இந்த காரை அப்டேட் செய்ததன் வாயிலாக அது மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. கணிசமான அப்டேட்டுகளை அது செய்திருந்தாலும், அந்த கார் பார்க்க மிகவும் கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது.

இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனையே சமீபத்தில் ரைடு ரிவியூ செய்து பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவத்தையே இங்கே வீடியோ வாயிலாக தொகுத்து வழங்கி இருக்கின்றோம். புதிய விராங்ளர் ஓட்ட எப்படி இருந்தது? என்ன மாதிரியான மாற்றங்கள் எல்லாம் செய்யப்பட்டு இருக்கின்றன? என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம், வாங்க.

ஆஃப்-ரோடை அசால்டாக கையாளும் திறன் கொண்டதே இந்த ஜீப் விராங்ளர் எஸ்யூவி கார் மாடல் ஆகும். அதேவேளையில், இதை தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், இது ஓர் ஆஃப்-ரோடு ஸ்பெஷலிஸ்ட் என்பதை நம்மால் மறுக்க முடியாது. கரடு-முரடான பாறைகள் நிறைந்த சாலை அல்லது மணல் நிறைந்த சாலை என எதுவாக இருந்தாலும் சிறிதும் சிரமமின்றி கடந்து வந்துவிடும்.

Jeep wrangler facelift review video

இத்தகைய திறன்மிக்க காரையே மிகவும் அழகானதாக மாற்றி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, ஜீப். ஆகையால், அழகு மற்றும் திறம்பட செயல்படக் கூடிய கார் மாடலாக விராங்ளர் காட்சியளிக்கின்றது. அதேவேளையில், சொகுசான ரைடு அனுபவத்தை இந்த காரில் பயணிகளால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 25, 2024, 13:12 [IST]
English summary
2024 jeep wrangler facelift ride review video in english
மேலும்... #ஜீப் #jeep #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+