6 பேர் போகலாம் சீட்டுல மட்டுமே இவ்வளவு வசதிகள் இருக்குதா? இது கார் இல்ல சொர்க்கம்!

கியா நிறுவனம் தனது கார்னிவெல் காரை கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விற்பனையிலிருந்து நிறுத்திய நிலையில், தற்போது சர்வதேச அளவில் விற்பனையாகி வரும் 4ம் தலைமுறை கியா கார்னிவெல் காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூபாய் 63.90 லட்சம் என்ற நிலையில், இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாகியுள்ளது.

தற்போது அறிமுகமாகியுள்ள புதிய கார்னிவெல் கார் முந்தைய தலைமுறை காரை விட இரு மடங்கு விலையில் அறிமுகமாகியுள்ளது. விலை இரு மடங்கு அதிகரித்து இருந்தாலும் காரில் பல்வேறு அப்டேட்டுகள் மற்றும் நவீன அம்சங்கள் இருப்பதால், இந்த விலையை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இந்நிலையில் இந்த காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது.

இந்த காரை நாம் ஓட்டி பார்க்கும்போது நமக்கு கிடைத்த அனுபவத்தை தான் வீடியோவாக பகிர்ந்து உள்ளோம். அந்த வீடியோவை நீங்கள் மேலே காண்கிறீர்கள். இந்த காரில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் இதற்கு முந்தைய தலைமுறை காரிலும் பொருத்தப்பட்டிருந்தது. இது 190 பிஎச்பி பவரையும், 441 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2024 kia carnival video review

இந்த கார் மூன்று வரிசை சீட்டர் கொண்ட காராக இருக்கிறது. மூன்று வரிசையிலும் தாராளமான இடவசதிகள் இருக்கிறது. 6 பேர் வரை தாராளமாக பயணம் செய்யக்கூடிய வகையில் இருக்கிறது. இரண்டாவது சீட்டர் கேப்டன் சீட்டுகளாக வழங்கப்பட்டு இதில் சாய்வு வசதி மற்றும் கால்களுக்கான சப்போர்ட்டுகளும் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட தூர பயணத்திற்கு இந்த கார் ஏற்றதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 22, 2024, 11:44 [IST]
English summary
2024 kia carnival limousine video review
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+