ரூ.10 லட்சம் செலவழிக்கும் அளவிற்கு இந்த புது கியா காரில் அப்படி என்ன இருக்கு? ஷோரூமில் இருந்து வெளிவந்த வீடியோ

கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் (Kia Sonet Facelift) காரின் விலை குறைவான வேரியண்ட் இவ்வாறு தான் இருக்கும் என வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில், பளபளக்கும் கருப்பு நிறத்தில் கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிக்கும் சொனெட் எச்.டி.கே+ (HTK+) வேரியண்ட்டை பற்றி விரிவாக இனி பார்க்கலாம்.

கியா நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 2024 சொனெட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.99 இலட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. அதிகப்பட்சமாக ரூ.15.69 இலட்சம் வரையில் இந்த காரின் விலைகள் உள்ளன. ரூ.15.69 லட்சத்தில் சொனெட்டின் எக்ஸ்-லைன் வேரியண்ட் டீசல் என்ஜின் உடன் கிடைக்கும்.

kia sonet walkaround video out

ஆனால் நாம் இந்த செய்தியில், விலைமிக்க அந்த எக்ஸ்-லைன் வேரியண்ட்டை பற்றி பார்க்க போவதில்லை. பெரும்பான்மையான மக்களால் வாங்கக்கூடிய விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள எச்.டி.கே+ வேரியண்ட்டை பற்றியே பார்க்க போகிறோம். எச்.டி.இ மற்றும் எச்.டி.கே வேரியண்டிகளுக்கு அடுத்து 2024 சொனெட் காரின் 3வது விலை குறைவான வேரியண்ட்டாக எச்.டி.கே+ விளங்குகிறது.

2024 சொனெட் காரை வழக்கம்போல் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கியா அறிமுகப்படுத்தி உள்ளது. எச்.டி.கே+ வேரியண்ட்டை இந்த மூன்றில் எந்தவொரு என்ஜின் உடனும் வாங்கலாம் என்பது சிறப்பு. 1.2 லி பெட்ரோல் என்ஜின் உடன் ரூ.9.90 இலட்சத்தையும், டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் ரூ.10.49 இலட்சத்தையும், டீசல் என்ஜின் உடன் ரூ.11.39 இலட்சத்தையும் சொனெட் எச்.டி.கே+ கார் எக்ஸ்-ஷோரூம் விலைகளாக கொண்டுள்ளது.

kia sonet walkaround video out

2024 சொனெட்டின் எண்ட்ரீ-லெவல் எச்.டி.இ வேரியண்ட்டை பார்த்தால், அது மிகவும் எளிமையாக இருக்கும். ஆனால், புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் காரில் கியா நிறுவனம் வழங்கியுள்ள அனைத்து க்ரோம் டச்-அப்களை எச்.டி.கே+ வேரியண்ட்டில் பெற முடியும் என்பதை தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின் மூலம் அறிய முடிகிறது.

வீடியோவில், காரின் முன்பக்கத்தில் கிரில் பகுதியை சுற்றிலும் மேட் ஃபினிஷிங்கில் க்ரோம் சரவுண்ட்டிங்கை காண முடிகிறது. காரின் முன்பக்க மற்றும் பின்பக்க ஸ்கிட் பிளேட்கள் யானையின் தந்தம் போன்று உள்ளன. ஸ்டார் மேப் எல்இடி டி.ஆர்.எல்-கள், ஐஸ் கட்டி வடிவில் எல்இடி ஃபாக் விளக்குகள் மற்றும் ஸ்டார் மேப் எல்இடி கனெக்டட் டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவை சொனெட் எச்.டி.கே+ காரின் வெளிப்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள மற்ற சிறப்பம்சங்கள் ஆகும்.

kia sonet walkaround video out

இருப்பினும், இந்த வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லேம்ப்களை பெற முடியாது. ஏனெனில், எல்இடி ஹெட்லைட்கள் எச்.டி.எக்ஸ் வேரியண்ட்டில் இருந்தே வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், அலாய் சக்கரங்கள் இல்லாமல், இரும்பு சக்கரங்களே இந்த விலை குறைவான சொனெட் வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. 40.56 செமீ அளவில் ஆர்16 இரும்பு சக்கரங்கள் இந்த எச்.டி.கே+ வேரியண்ட்டில் பொருத்தப்பட்டுள்ளன.

காரை சுற்றிலும் பிளாஸ்டிக் பாடி கிளாடிங்குகள் இடம்பெற்றுள்ளன. டர்ன் சிக்னல்கள் உடன் உள்ள, பின்பக்கத்தை காட்டும் காரின் பக்கவாட்டு கண்ணாடிகள் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக் கூடியவைகளாக உள்ளன. காருக்கு வெளியே கதவு கைப்பிடிகள் காரின் உடல் நிறத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. காரின் மேற்கூரையில், சில்வர் நிறத்தில் கம்பிகளும், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னாவும் உள்ளன.

kia sonet walkaround video out

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பதிவில் நாம் சொனெட் எச்.டி.கே+ வேரியண்ட்டின் வெளிப்பக்கத்தை பற்றி மட்டுமே பார்த்துள்ளோம். சொனெட்டின் டாப் வேரியண்ட்களுடன் ஒப்பிடுகையில் இந்த வேரியண்ட் வெளிப்பக்க தோற்றத்தில் நிறைய வேறுப்பாடுகளை கொண்டுள்ளது. காருக்கு உள்ளே வழங்கப்பட்டு இருப்பவைகளை ஆராய்ந்தால் இன்னும் நிறைய விஷயங்கள் தெரியவரும். அவற்றை இன்னும் விரிவாக கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 13, 2024, 14:06 [IST]
English summary
2024 kia sonet base variant walkaround video out check all details here
மேலும்... #கியா #kia #kia sonet
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X