2கே கிட்ஸ்க்கு இந்த விஷயம் தெரியாம பாத்துக்கோங்க! அப்புறம் அவங்கள கையிலேயே பிடிக்க முடியாது!

கேடிஎம் நிறுவனம் தனது 200 டியூக் பைக்கை அப்டேட் செய்து வெளியிட தயாராகி வருகிறது. இதற்காக நிறுவனம் பல்வேறு விதமான அப்டேட்களை மேற்கொண்டுள்ளது. இப்படியாக இந்த பைக்கில் என்னென்ன அப்டேட் எல்லாம் இடம் பெற உள்ளன. இந்த பைக் என்ன விலையில் விற்பனைக்கு வருகிறது. எப்பொழுது அப்டேட் செய்யப்பட்ட பைக் அறிமுகமாகும் என்ற அனைத்து விரிவான தகவல்களையும் இங்கே காணலாம் வாருங்கள்.

இளைஞர்கள் அதிகம் விரும்பும் வாகனமாக கேடிஎம் நிறுவனத்தின் வாகனங்கள் இருக்கிறது. இந்நிறுவனத்தின் பைக்குகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமான பைக்குகளாக இருக்கின்றன. வித்தியாசமான லுக்கில் ஈர்க்கும் வகையிலான கலர் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் கொண்ட பைக்குகளாக இருப்பதால் மக்கள் பலர் இந்த பைக்கை விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்நிலையில் இந்நிறுவனம் தனது 200 டியூக் என்ற பைக்கை அப்டேட் செய்து வெளியிட்ட திட்டமிட்டுள்ளது.

2024 KTM 200 Duke Update

கேடிஎம் 200 டியூக் பைக்கை பொறுத்தவரை என்ட்ரி லெவல் நேக்கட் பைக் ஆகும் இந்த பைக்கில் புதிய அப்டேட்டாக புதிய டிஎஸ்பி டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ள பைக்கில் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக டிஎஃப்டி டிஸ்ப்ளே ஏற்கனவே 390 டியூக் பைக்கில் இருப்பது போலவே இந்த பைக்கிலும் பொருத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்த அப்டேட் மூலம் கேடிஎம் நிறுவனம் மாடலான பல அம்சங்கள் நிறைந்த ஒரு ஒரு பைக்காக வழங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளது. அதற்காக இந்த அப்டேட்டை கொண்டு வருகிறது. இந்த அப்டேட்டிற்கு பிறகு இந்த கேடிஎம்200 டியூக் பைக்கின் விலை சற்று அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ரூபாய் 5000 வரை அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. தற்போது இந்த பைக் ரூபாய் 1.98 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

2024 KTM 200 Duke Update

அப்டேட் செய்யப்பட்ட பைக் இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது ரூபாய் 2.04 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அப்டேட் செய்யப்பட்டுள்ள டிஸ்பிளே தான் இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என தெரிகிறது. இருந்தாலும் பெரிய அளவில் விலை அதிகரிப்பு இல்லை என்பதால் மக்கள் பலர் விலை காரணமாக இந்த பைக்கை தவிர்க்க மாட்டார்கள் என நம்பப்படுகிறது.

டிஸ்ப்ளே அப்டேட் போக கேடிஎம் நிறுவனம் இந்த புதிய 200 டியூக் பைக்கில் அதன் வடிவமைப்பு மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களை அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வடிவமைப்பு அந்நிறுவனத்தின் அடையாளமாக இருக்கிறது. அதனால் அந்நிறுவனம் மாற்றாமல் தொடர்ந்து அதே வடிவமைப்பிலேயே இந்த பைக் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட், ஸ்பிளிட் சீட் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

இதுபோக இந்த பைக்கில் தலைகீழாக பொருத்தப்பட்ட முன்பக்க ஃபோர்க்குகள், பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஷன், இரண்டு வீர்களிலும் டிஸ்க் பிரேக்குகள் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்களும் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த பைக் பாதுகாப்பான பைக்காகவும் இருக்கிறது. அதை நேரம் சொகுசான பயணத்தையும் வழங்குவதை உறுதி செய்கிறது.

இந்த பைக்கில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை 199.5 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 25 பிஎச்பி பவரையும் 19.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் தற்போது உள்ள மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டில் இந்த இன்ஜினில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிகிறது.

கேடிஎம் 200 டியூக் பைக்கை பொறுத்தவரை மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மற்றும் சுஸூகி ஜிக்ஸர் 250 பைக் போட்டியாக வருகிறது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள டிஎஃப்டி டிஸ்ப்ளே பைக்கிற்க்கு ஒரு ஸ்போர்ட் லுக்கை கொடுக்கிறது. இதன் பெர்பார்மென்ஸூம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைஸ்பார்க் கருத்து: 200 டியூக் பைக்கை பொறுத்தவரை என்ட்ரி லெவலில் சிறந்த பெர்பார்மென்ஸ் கொண்ட பைக்கை விரும்பும் பலருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். மாடலான அம்சங்கள் மற்றும் நம்பகத்தன்மையான பைக்காக வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பைக் சிறந்த பைக்காக இருக்கும். இந்த பைக் அப்டேட் செய்யப்பட்ட பிறகு இதன் விற்பனை அதிகமாக வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 2, 2024, 11:06 [IST]
English summary
2024 ktm 200 duke update new tft display
மேலும்... #ktm #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+