சன்ரூஃப் இவ்வளவு கம்மியான விலையில் கிடைத்தால்... எல்லாரும் இந்த மாருதி காரை தான் வாங்க போறாங்க!!

மேம்படுத்தப்பட்ட மாருதி சுஸுகி டிசைர் (Maruti Suzuki Dzire) கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் வாயிலாக, 2024 டிசைர் காரை பற்றி நமக்கு தெரியவந்துள்ள விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவில் அதிக பேர் வாங்கும் கார்களுள் ஒன்று மாருதி சுஸுகி டிசைர் ஆகும். பிரபலமான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது டிசைர் ஆகும். இந்த நிலையில், ஆல்-நியூ 2024 மாருதி சுஸுகி டிசைர் கார் ஒன்று முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் பொது சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

2024 maruti dzire road testing

இந்த சோதனை ஓட்டத்தில் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருப்பதால், நிறைய விபரங்களை நம்மால் பெற முடியவில்லை. இருப்பினும், இந்த ரோடு டெஸ்ட் மாடலில் சன்ரூஃப்-ஐ பார்க்க முடிகிறது. இதன் மூலம், 2024 டிசைர் கார் எலக்ட்ரிக் சன்ரூஃப் உடன் அறிமுகம் செய்யப்பட உள்ளதை அறிய முடிகிறது. இந்த சோதனை ஓட்டத்தில் 2024 டிசைர் காருடன், நெக்ஸ்ட் ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் காரையும் பார்க்க முடிகிறது.

இன்னும் சொல்லப்போனால், நியூ ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் கார் தான் முதலாவதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன் பின்னரே நியூ ஜென்ரேஷன் டிசைர் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ரோடு டெஸ்ட்டிங் வீடியோவின் மூலம் பார்க்கும்போது, 2024 மாருதி சுஸுகி டிசைர் முற்றிலும் புதிய முன்பகுதியை பெற்றுவர உள்ளது.

இதன்படி, புதிய டிசைனிலான க்ரில் மற்றும் பம்பர் 2024 டிசைர் காரின் முன்பக்கத்தில் வழங்கப்பட உள்ளன. முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட்கள் வழக்கத்தை காட்டிலும் மெல்லியதான டிசைனில் உள்ளன. மேலும், எல்இடி டிஆர்எல்-களும் மாடர்ன் டிசைனில் உள்ளன. காரின் பக்கவாட்டு டிசைனில், புதிய டிசைனிலான அலாய் சக்கரங்களை தவிர்த்து வேறெந்த மாற்றமும் இல்லை. இந்த சோதனை டிசைர் காரில் அலாய் சக்கரங்கள் கருப்பு நிறத்தில் உள்ளன.

தற்போது விற்பனையில் உள்ள டிசைர் செடான் காரில் முன்பகுதி நன்கு நீளமானதாகவும், பின்பகுதி குறுகியதாகவும் வழங்கப்படுகிறது. தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவிலும், 2024 டிசைர் காரின் பின்பகுதி குறுகியதாகவே உள்ளது. இருப்பினும், காரின் முன்பக்கத்திற்கு இணையாக பின்பக்கத்திலும் நிறைய அப்டேட்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கிறோம்.

2024 maruti dzire road testing

மற்றப்படி, 2024 டிசைர் காரின் உட்பக்கத்தில் பெரியதாக எந்த அப்டேட்டையும் எதிர்பார்க்க முடியாது என கூறப்பட்டாலும், டேஸ்போர்டின் டிசைனை மாருதி சுஸுகி நிறுவனம் கட்டாயம் மாற்றி அறிமுகப்படுத்தும். அதேபோல், பலேனோ, ஃப்ரான்க்ஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா கார்களில் வழங்கப்படும் புதிய 9-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை 2024 டிசைரில் வழங்கப்படலாம்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக புதிய டிசைர் ஆனது மைல்ட்-ஹைப்ரீட் காராக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வகையில், புதிய 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உடன் 12 வோல்ட் மைல்ட் ஹைப்ரீட் சிஸ்டம் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024 மாருதி சுஸுகி டிசைர் காரின் அறிமுக தேதி தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. இந்த காரின் அறிமுகம் இன்னும் சில மாதங்களில் இருக்கலாம் என கூறப்படுகிறது.

2024 maruti dzire road testing

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பின் மூலம், மாருதி சுஸுகி டிசைர் கார் அதிகளவில் அப்டேட் செய்யப்பட போவதில்லை என்பதை அறிய முடிகிறது. இருப்பினும், புதிய டிசைரில் சிங்கிள்-பேன் எலக்ட்ரிக் சன்ரூஃப் வழங்கப்பட உள்ளது உண்மையில் கவர்ச்சிக்கரமான விஷயம் ஆகும். ஏனெனில், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் அவ்ரா என டிசைருக்கு விற்பனையில் போட்டியாக உள்ள மற்ற கார்களில் சன்ரூஃப் வழங்கப்படுவது இல்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 19, 2024, 23:00 [IST]
English summary
2024 maruti suzuki dzire with electric sunroof new spy video
மேலும்... #Maruti Dzire 2024 #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X