ரூ.6.5 லட்சத்தில் கிடைக்கும் மாருதி ஸ்விஃப்ட் காரை இப்படியும் மாற்றி கொள்ளலாம்!! ரோட்டில் தனியா தெரிவீர்கள்!
மாருதி சுஸுகி சுஸுகி (Maruti Suzuki Swift) காரின் விலை குறைவான வேரியண்ட்டை இப்படியும் வாங்கலாம் என வெளிக்காட்டும் விதமாக இணையத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றியும், நியூ ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து மார்க்கெட்டில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்களுள் ஒன்று ஸ்விஃப்ட் ஆகும். ஆனால், கடந்த சில மாதங்களாக ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை வெகுவாக குறைந்து வந்ததை அடுத்து, நியூ ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் காரை அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி தயாராகியது.

அதன்படி, மேம்படுத்தப்பட்ட 2024 ஸ்விஃப்ட் கார் இந்த மே மாத துவக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவுகள் கிட்டத்தட்ட கடந்த 1 மாதமாக ஏற்கப்பட்டு வரும் நிலையில், இந்த காரை புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் மே 14ஆம் தேதியில் இருந்து அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டன.
புதிய ஸ்விஃப்ட் காரை டெலிவிரி பெற்றுள்ள முதல் கஸ்டமர்களை பற்றி நமது செய்தித்தளத்தில் கூட பார்த்திருந்தோம். நியூ ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் காருக்கு ஏகப்பட்ட ஆக்ஸஸரீஸ் ஆப்ஷன்களை மாருதி சுஸுகி வழங்கியுள்ளது. ஆக்ஸஸரீகளுக்கு காரின் விலையை காட்டிலும் கூடுதல் பணத்தை செலுத்த வேண்டியிருக்கும். பொதுவாகவே, ஸ்விஃப்ட் போன்ற விலை குறைவான கார்களுக்கு மாருதி சுஸுகி அதிக எண்ணிக்கையில் ஆக்ஸஸரீகளை வழங்குவது வழக்கம்.

ஏனெனில், ஸ்விஃப்ட் காரை மற்றவர்களை காட்டிலும் அழகாக காட்டிக் கொள்ள நினைப்பவர்கள் ஆக்ஸஸரீகளை வாங்குவர். இதன்படி, 2024 ஸ்விஃப்ட் காரின் விலை குறைவான எல்.எக்ஸ்.ஐ வேரியண்ட்டிற்கான ஆக்ஸஸரீகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் எல்.எக்ஸ்.ஐ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு குறைவான விலையில் கிடைக்கும் இந்த வேரியண்ட்டையும் ஆக்ஸஸரீகள் மூலமாக அலங்கரித்து கொள்ளலாம். இவ்வாறு அலங்கரிக்கப்பட்ட ஸ்விஃப்ட் எல்.எக்ஸ்.ஐ கார் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வெளிப்பக்க தோற்றத்தை பார்த்தவுடன் உங்களில் சிலருக்கு இது விசித்திரமானதாக தோன்றலாம். ஏனெனில், இவ்வாறான தோற்றம் கொண்ட ஸ்விஃப்ட் காரை இதற்குமுன் பார்த்திருக்க மாட்டோம்.

காரின் தோற்றத்தில் முக்கியமாக நம்மை கவரக்கூடியது, கருப்பு நிறத்தில் காருக்கு முன்பக்கத்தில் பொனெட் மீது செல்லும் இரு கிராஃபிக்ஸ் லைன்கள் ஆகும். இந்த லைன்கள் காரின் மேற்கூரை வரையில் செல்கின்றன. காரின் முன்பக்க கிரில் பகுதியில் க்ரோம் ஹைலைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், காருக்கு பின்னால் ஸ்பாய்லர் என ஏகப்பட்ட ஆக்ஸஸரீகள் இந்த ஸ்விஃப்ட் காரில் வழங்கப்பட்டுள்ளன.
ஷோரூமுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட ஸ்விஃப்ட் காரை எந்த வாடிக்கையாளரும் முன்பதிவு செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த கார் விற்பனைக்கானது இல்லை. ஷோரூமுக்கு வரும் கஸ்டமர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், குறைவான விலையில் கிடைக்கும் ஸ்விஃப்ட் காரை இவ்வாறும் மாற்றிக் கொள்ளலாம் என்பதை காட்டுவதற்காகவும் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஸ்விஃப்ட் காரில் பொருத்தப்பட்டிருக்கும் ஆக்ஸஸரீகளை உருவாக்குவதும் மாருதி சுஸுகி தான் என்றாலும், இந்த ஆக்ஸஸரீகளை இந்த குறிப்பிட்ட டீலர்ஷிப் ஷோரூம் 2024 ஸ்விஃப்ட் காரில் பொருத்தியுள்ளது. ஆதலால், இதில் டீலர்ஷிப்பின் இரசனை உள்ளது. காரை வாங்கும் கஸ்டமர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப வேறு விதமாகவும் புதிய ஸ்விஃப்ட் காரை அலங்கரித்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications









