கொஞ்ச நாளில் எல்லாரும் போட்டி போட்டு வாங்க போறது இந்த மாருதி காரை தான்!! ஷோரூமுக்கு வந்தாச்சு!
2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய ஸ்விஃப்ட் காரின் மிட் வேரியண்ட்டான வி.எக்ஸ்.ஐ (VXi) டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றின் வளாகத்திற்குள் காட்சி தந்துள்ளது. இதுதொடர்பாக, இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கார் ஆர்வலர்கள் அனைவரும் தற்சமயம் எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பது நியூ ஜென்ரேஷன் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் அறிமுகத்தை ஆகும். புதிய 2024 ஸ்விஃப்ட் கார் ஜப்பான் நாட்டில் கடந்த ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிய ஸ்விஃப்ட் காரை மாருதி சுஸுகி நிறுவனம் வெளியீடு செய்தது.

அதாவது, காரை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டன. மற்றப்படி, புதிய ஸ்விஃப்ட் காரின் விலைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. 2024 ஸ்விஃப்ட் காரின் அறிமுகம் இந்த மே மாதத்தில் இருக்கும் என ஏற்கனவே நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் கூறியிருந்தோம். அறிமுகத்தின் போதுதான், காரின் விலைகள் அறிவிக்கப்படும்.
2024 ஸ்விஃப்ட் காரின் இந்திய அறிமுகத்துக்கு மாருதி சுஸுகி நிறுவனம் தயாராகி வரும் நிலையில், புதிய ஸ்விஃப்ட் கார்கள் இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளன. இந்த வகையில், டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றிற்கு வந்துள்ள புதிய ஸ்விஃப்ட்டின் மிட் வேரியண்ட்டான வி.எக்ஸ்.ஐ காரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஆட்டோ அடிக்ட்ஸ் என்கிற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், புதிய ஸ்விஃப்ட் வி.எக்ஸ்.ஐ காரை எல்லா விதமான கோணங்களிலும் காணலாம். ஸ்விஃப்ட் வி.எக்ஸ்.ஐ காரின் முன்பக்கத்தில் இசட்.எக்ஸ்.ஐ வேரியண்ட்டில் வழங்கப்படுவதை போன்று ஹெட்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது, விலையுயர்ந்த ஸ்விஃப்ட் வேரியண்ட்டில் கிடைக்கும் ஹெட்லைட்களை இந்த மிட் வேரியண்ட்டிலும் பெறலாம்.
ஹெட்லைட் செட்-அப்பில் சிங்கிள் புரோஜெக்டர் விளக்குகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், இசட்.எக்ஸ்.ஐ வேரியண்ட்டை போன்று எல்இடி தரத்தில் ஹெட்லைட்களை பெற முடியாது. ஹலோஜன் தரத்தில் மட்டுமே கிடைக்கும். 2024 ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட்களில் ஹெட்லைட்களுடன் எல்இடி டிஆர்எல்-கள் கிடைக்கும். ஆனால், இந்த மிட் வேரியண்ட்டில் டி.ஆர்.எல்-களுக்கு பதிலாக மினுமினுப்பிற்காக L-வடிவில் க்ரோம் கொடுக்கப்பட்டுள்ளது.

பளபளப்பான கருப்பு நிறத்தில் காரின் க்ரில் பகுதி புதிய தேன்கூடு பேட்டர்னில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வி.எக்ஸ்.ஐ காரில் அலாய் சக்கரங்களுக்கு பதிலாக இரும்பு சக்கரங்கள் சற்று சிறியதாக 14 இன்ச்சில் கொடுக்கப்பட்டுள்ளன. ரூஃப்-ஐ தாங்கி நிற்கும் பில்லர்கள் காரில் இருந்து தனியாக தெரியும் வகையில் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், டோர் ஹேண்டில்கள் மற்றும் ரியர்வியூ மிரர்ஸ் காரின் உடல் நிறத்தில் இந்த வேரியண்ட்டில் கிடைக்கும்.
காருக்கு பின்பகுதியில் ரியர் பார்க்கிங் கேமரா இல்லை. இந்த ஸ்விஃப்ட் வி.எக்ஸ்.ஐ காரின் வெளிப்பகுதி முற்றிலுமாக கருப்பு நிறத்தில் உள்ளது. டேஸ்போர்டில் 7-இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 2024 ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் இசட்-சீரிஸ் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 12 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் கிடைக்கவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்களுள் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகும். இந்த காரை குறைந்த விலையில் வாங்குவதற்கு நிறைய பேர் விரும்புவார்கள். அதேநேரம், மிட் வி.எக்ஸ்.ஐ வேரியண்ட்டிலும் ஸ்விஃப்ட் கார் கொடுக்கும் பணத்திற்கு ஏற்றதாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications









