பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் மைலேஜை வாரி வழங்கி கொண்டிருக்கும் நிலையில், இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் மைலேஜ் எவ்வளவு இருக்கும் என எப்போதாவது யோசித்துள்ளீர்களா? வாருங்கள் அதனை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சுஸுகி ஸ்விஃப்ட் (Suzuki Swift), ஜப்பான் நாட்டில் உருவாகி இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்து காணப்படும் ஓர் தரமான கார். இந்தியாவில் ஸ்விஃப்ட் கார்களை எத்தனை பேர் வைத்துள்ளனர் என கணக்கிட்டு பார்த்தால், இலட்சங்களை கடந்து செல்லும். அந்த அளவிற்கு இந்திய மக்களின் நம்பகமான காராக ஸ்விஃப்ட் விளங்குகிறது.

2024 suzuki swift mileage figures

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக சுமார் 20 ஆயிரம் ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகுகின்றன. ஸ்விஃப்ட் கார்களை மக்கள் பலர் விரும்பி வாங்குவதற்கு காரணம், அதன் காம்பெக்ட்டான உடலமைப்பு மற்றும் குறைந்த விலை ஆகும். அதுமட்டுமின்றி, ஸ்விஃப்ட் காரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுஸுகி நிறுவனம் அவ்வப்போது அப்டேட் செய்துவிடுகிறது.

இந்த வகையில், நியூ ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் காரை சில மாதங்களுக்கு முன் சுஸுகி நிறுவனம் உலகளவில் வெளியீடு செய்தது. ஜப்பானில் ஏற்கனவே விற்பனையை துவங்கிவிட்ட புதிய ஸ்விஃப்ட் கார் வருகிற ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜப்பானில் உள்ள ஸ்விஃப்ட் காருக்கும், இங்கிலாந்தில் விற்பனையை துவங்கவுள்ள ஸ்விஃப்ட் காருக்கும் இடையே சில வித்தியாசங்கள் நிச்சயமாக இருக்கும்.

2024 suzuki swift mileage figures

அந்தந்த நாட்டு மக்களின் இரசனை மற்றும் கால வெப்பநிலைக்கு ஏற்ப இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இங்கிலாந்தில் விற்பனையை துவங்கவுள்ள 2024 ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட உள்ளது. இங்கிலாந்திலும், இந்தியாவிலும் இந்த புதிய ஸ்விஃப்ட் கார் மைல்ட்-ஹைப்ரீட் காராக விற்பனை செய்யப்பட உள்ளது. அதாவது, என்ஜின் உடன் 12 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் இணைக்கப்பட்டு இருக்கும்.

ஒட்டுமொத்தமாக இந்த மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் சிஸ்டத்தின் மூலமாக 82 பிஎஸ் மற்றும் 112 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காரில் பெறலாம் என்கிறது சுஸுகி நிறுவனம். இங்கிலாந்தில் 2024 ஸ்விஃப்ட் கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேனுவல் ஆப்ஷனில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் சிவிடி கியர்பாக்ஸும் இருக்கும்.

2024 suzuki swift mileage figures

நம் இந்தியாவில் எந்தெந்த கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் 2024 ஸ்விஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எங்களுக்கு தெரிந்தவரையில், இங்கிலாந்தை போல் மேனுவல் & சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இந்தியாவிலும் வழங்கப்படலாம். அதுமட்டுமின்றி, இங்கிலாந்தில் 2-வீல்-டிரைவ் மற்றும் 4-வீல்-டிரைவ் ஆப்ஷன்களில் 2024 ஸ்விஃப்ட் விற்பனை செய்யப்பட உள்ளது.

2-வீல்-டிரைவ் ஆப்ஷனில் என்ஜினின் ஆற்றல் காரின் ஏதேனும் 2 சக்கரங்களுக்கு மட்டுமே செல்லும். அதுவே, 4-வீல்-டிரைவ் ஆப்ஷனில் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்லும். கரடு முரடான சாலைகளில் செல்வதற்கு 4-வீல்-டிரைவ் ஆப்ஷன் ஏற்றதாக இருக்கும். சரி, 2024 ஸ்விஃப்ட் காரின் மைலேஜ் விஷயத்திற்கு வருவோம்.

2024 suzuki swift mileage figures

இங்கிலாந்தில் விற்பனை செய்யப்பட உள்ள 2024 ஸ்விஃப்ட் கார் மேனுவல் ஆப்ஷனில் லிட்டருக்கு 27.29கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் 25.55கிமீ மைலேஜையும் வழங்கும் என சுஸுகி தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் 2-வீல்-டிரைவ் ஆப்ஷனில் கிடைக்கும் மைலேஜ் ஆகும். 4-வீல்-டிரைவ் ஆப்ஷனில் லிட்டருக்கு சற்று குறைவாக 24.49கிமீ மைலேஜை பெறலாமாம். 4-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் காரை மேனுவல் ஆப்ஷனில் மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 4வது ஜென்ரேஷன் அப்டேட் ஆகும். இங்கிலாந்தில் விற்பனை செய்யப்பட உள்ள காரை பற்றி இவ்வளவு முக்கியமானதாக பார்ப்பதற்கு காரணம், ஏற்கனவே கூறியதுபோல் இங்கிலாந்தின் ஸ்விஃப்ட் காருக்கும், இந்தியாவின் ஸ்விஃப்ட் காருக்கும் பெரியதாக எந்த வித்தியாசமும் இருக்காது. இங்கிலாந்தை தொடர்ந்து, இந்தியாவில் 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இன்னும் சில மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 29, 2024, 19:30 [IST]
English summary
2024 maruti suzuki swift mileage figures check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X