ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரின் புதிய அப்கிரேட் செய்யப்பட்ட வெர்சன் வருகிற மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிய ஸ்விஃப்ட் காரை விளம்பரப்படுத்தும் வகையில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள தொலைக்காட்சி கமர்ஷியல் வீடியோவை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஒட்டுமொத்த இந்தியாவே என சொல்லும் அளவிற்கு, புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் அறிமுகத்திற்கு மக்கள் பலர் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஏனெனில், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்களுள் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகும். சில மாதங்களில் இந்தியாவின் நம்பர் ஒன் காராகவும் ஸ்விஃப்ட் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஆனால், கடந்த சில மாதங்களாக ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை எண்ணிக்கை குறைய துவங்கியது. ஆக, இதுதான் சரியான நேரம் என திட்டமிட்டு மாருதி சுஸுகி நிறுவனம் புதிய 4ஆம் தலைமுறை ஸ்விஃப்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, வருகிற மே 9ஆம் தேதி நியூ ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
3ஆம் தலைமுறை ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் 2018ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வகையில் பார்த்தால், கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு பிறகு நியூ ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த 6 வருடங்களில் சிறு, சிறு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்களை ஸ்விஃப்ட் காருக்கு மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கி வந்துள்ளது.

ஆனால், கடந்த 6 வருடங்களில் மிக முக்கியமான அப்கிரேடை வரும் மே மாதத்தில்தான் ஸ்விஃப்ட் பெறவுள்ளது. 4ஆம் தலைமுறை சுஸுகி ஸ்விஃப்ட் கார் ஜப்பானில் கடந்த ஆண்டு இறுதியிலேயே விற்பனைக்கு வந்துவிட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் யுகே-இல் விற்பனையை துவங்கிய புதிய ஸ்விஃப்ட் கார், விரைவில் இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. புதிய ஸ்விஃப்ட் காரின் வடிவத்தில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால், காரின் முகப்பு பகுதி முற்றிலுமாக மாற்றப்பட்டு உள்ளது. புதிய ஸ்விஃப்ட் காரின் முகப்பு பகுதியில் முற்றிலும் புதிய டிசைனில் கிரில் மற்றும் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், ஸ்விஃப்ட் காரில் முக்கிய மாற்றமாக, பின் கதவுகளுக்கான கைப்பிடிகளின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கடந்த சில வருடங்களாக ஸ்விஃப்ட் காரின் ரியர் ஹேண்டில்களை விண்ட் ஷீல்டு உடன் ஒருங்கிணைத்து சுஸுகி நிறுவனம் வழங்கி வந்தது.

ஆனால், புதிய ஸ்விஃப்ட் காரில் முன் கதவுகளை போலவே பின் கதவுகளிலும் ஹேண்டில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் பின்பக்கத்தில் பம்பர் பெரியதாக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், C-வடிவ டெயில் லைட்கள் சிறியதாக்கப்பட்டு உள்ளன. 2024 ஸ்விஃப்ட் காரின் உள்ளே கேபின் முழுவதுமாக கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. டேஸ்போர்டில் எச்டி தரத்தில் 8.0 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கும் திரையும் முன்பு இருந்ததை விட பெரியதாக்கப்பட்டு உள்ளது. ஸ்விஃப்ட் காரின் ஒட்டுமொத்த நீளம் 2 செ.மீ அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஜப்பானில் ஸ்விஃப்ட் காரில் லெவல்-2 அடாஸ் கொடுக்கப்படுகிறது. ஆனால், அதனை இந்திய ஸ்விஃப்ட் காரில் எதிர்பார்க்க முடியாது. வழக்கம்போல், புதிய ஸ்விஃப்ட்டிலும் 1.2 லிட்டர் கே12சி என்ஜின் எந்த மாற்றமும் இன்றி வழங்கப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்விஃப்ட் காரின் தோற்றத்தை மாற்றி, சில தொழிற்நுட்ப அம்சங்களை அப்டேட் செய்து இருப்பினும், அடாஸ் மற்றும் புதிய என்ஜின் ஆப்ஷனை மாருதி சுஸுகி கொண்டுவரவில்லை. இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ள புதிய ஸ்விஃப்ட் காரை பற்றிய உறுதியான விபரங்கள் மே 9ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும். இந்த நிலையில், நியூ ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் காரை விளம்பரப்படுத்தும் வகையில் பிரான்ஸ் நாட்டில் ஒரு வீடியோவை சுஸுகி நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









