எல்லாரும் போட்டி போட்டு புக் செய்து கொண்டிருக்கும் புது மாருதி கார் எப்படி இருக்கு? தமிழ் ரிவியூ வீடியோ!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் புதிய 4ஆம் தலைமுறை ஸ்விஃப்ட் கார் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதன்முதலாக 2005ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் இந்த 19 வருடங்களில் பெற்றுள்ள 4வது மிக முக்கியமான அப்டேட் இதுவாகும்.

இதன் காரணமாகவே, புதிய ஸ்விஃப்ட் கார் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையில் 2024 ஸ்விஃப்ட் காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவுக்கு கிடைத்தது. அப்போது எங்களை ஆச்சிரியப்படுத்திய விஷயங்களை ரிவியூவாக வழங்கியுள்ளோம். அதனை கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.

நியூ ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் காரில் மிக முக்கியமான அம்சமாக புத்தம் புதிய இசட்-சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. முன்பு கே-சீரிஸ் என்ஜினை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கிவந்த நிலையில், தற்போது இசட்-சீரிஸ் என்ஜினுக்கு மாறியுள்ளது. அதேபோல், என்ஜினில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையையும் 4இல் இருந்து 3ஆக மாருதி சுஸுகி குறைத்துள்ளது.

maruti suzuki swift review video

புதிய என்ஜின் மட்டுமின்றி, காரின் பாதுகாப்பு அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 2024 ஸ்விஃப்ட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், கம்மியான விலையில் ஸ்விஃப்ட் காரை வாங்கினால் கூட 6 ஏர்பேக்குகள் கிடைக்கும். தோற்றத்தை பொறுத்தவரையில், ஸ்விஃப்ட் காரின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, May 16, 2024, 12:40 [IST]
English summary
2024 maruti suzuki swift test drive review video in tamil check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+