புதிய ஸ்விஃப்ட் காரின் விலை இவ்வளவு கம்மியா? முழுமையான விலை விபரங்கள் இதோ!

நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையில் மாருதி நிறுவனம் இன்று தனது புதிய ஸ்விப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட இந்த கார் ஏற்கனவே புக்கிங் துவங்கப்பட்ட நிலையில் இன்று தான் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது. இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்த நிலையில், இந்த காரின் விலை குறித்த விபரங்களை தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.

மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காருக்கு மார்க்கெட் ஏற்கனவே நல்ல மவுசு இருக்கிறது. மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். நீண்ட ஆண்டுகளாக சிறப்பான விற்பனையில் இருக்கும். இந்த காரை தற்போது அந்நிறுவனம் அப்டேட் செய்து வெளியிட்டுள்ளதன் மூலம் இதன் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 maruti swift price

இந்த காரை புக் செய்ய காத்திருக்கும் பலர் இந்த காரின் விலை குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார்கள். அதன்படி நாம் இங்கே இதன் விலை விபரங்களை மட்டும் காண போகிறோம். இந்த கார் மொத்தம் ஆறு விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன்களும் உள்ளன.

இருப்பதிலேயே குறைந்தபட்ச வேரியன்ட் காராக எல்எக்ஸ்ஐ வேரியன்டை பொறுத்தவரை மேனுவல் கியர் ஆப்ஷனில் மட்டுமே வருகிறது. இந்த கார் ரூ 6.49 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த வேரியண்டில் மட்டும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் கிடையாது.

2024 maruti swift price

அடுத்ததாக ஸ்விஃப்ட் விஎக்ஸ்ஐ பொறுத்தவரை மேனுவல் கியர் ஆப்ஷன் கார் ரூபாய் 7.29 லட்சம் என்ற விலையிலும், ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் கொண்ட கார் ரூபாய் 7.79 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. மேனுவல் கியர் காருக்கும் ஆட்டோமேட்டிக் கியர் காருக்கும் ரூபாய் 50,000 வித்தியாசம் இருக்கிறது.

அடுத்ததாக விஎக்ஸ்ஐ(ஓ) என்ற கார் இருக்கிறது. இந்த கார் மேனுவல் கியர் ஆப்ஷனில் ரூபாய் 7.56 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் ஆகியுள்ளது இதுவே ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷனை பொறுத்தவரை ரூபாய் 8.06 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காருக்கும் மார்க்கெட்டில் நல்ல மவுசு இருக்கிறது.

2024 maruti swift price

அடுத்ததாக இசட்எக்ஸ்ஐ என்ற வேரியன்ட் தான் இருக்கிறது. இந்த வேரியன்டை பொருத்தவரை மேனுவல் கியர் ஆப்ஷனில் ரூபாய் 8.29 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதுவே ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனில் ரூபாய் 8.79 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் ஆகியுள்ளது.

அடுத்ததாக இசட்எக்ஸ்ஐ ப்ளஸ் என்ற வேரியண்ட் இருக்கிறது. இந்த வேரியன்ட் மேனுவல் கியர் ஆப்ஷனில் ரூபாய் 8.99 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இதுவே ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷனில் ரூபாய் 9.49 லட்சம் என்ற விலையில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

இருப்பதிலேயே டாப் வேரியண்டாக இசட்எக்ஸ்ஐ ப்ளஸ் டூயல் டோன் வேரியன்ட் இருக்கிறது. இதை பொறுத்தவரை மேனுவல் கியர் ஆப்ஷனில் ரூபாய் 9.14 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதுவே ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனில் ரூபாய் 9.64 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

இதில் பேஸ் வேரியண்டான எல்எக்ஸ் வேரியண்டில் மட்டுமே ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் இல்லை. மற்ற அனைத்து வேரியன்ட்களிலும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் இருக்கிறது. மேனுவல் கியர் ஆப்ஷனை விட ரூபாய் 50 ஆயிரம் அதிகமான விலையில் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் கொண்ட வாகனங்கள் விற்பனையாகி வருகிறது.

அடுத்ததாக இந்த காரை சப்ஸ்கிரைப் முறையில் மாருதி நிறுவனம் விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறது. அதன்படி ரூபாய் 17,436 என்ற மாத கட்டண விலையில் இந்த கார் சப்ஸ்கிரைப் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இது வாகனத்திற்கான உரிமம், பதிவு, பராமரிப்பு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து கட்டணமும் சேர்ந்ததாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் இந்த ஸ்விஃப்ட் கார் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது. இனி இந்த காருக்கான புக்கிங் மற்றும் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலே நாங்கள் அளித்துள்ள வேரியன்ட் விபரங்களை வைத்து உங்களுக்கு பிடித்த வேரியன்ட்டை உடனே புக் செய்ய அருகில் உள்ள ஷோரூம்க்கு செல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 9, 2024, 14:39 [IST]
English summary
2024 maruti swift variant wise price details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X