அம்பானியே இந்த காரை வாங்க கொஞ்சம் யோசிக்கதான் செய்வாரு போல! காஸ்ட்லியான மெர்சிடீஸ் கார் அறிமுகம்!
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடத்த 2023-ம் ஆண்டு இறுதியில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ என்ற காரை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த காரை அப்டேட் செய்து இதன் ஸ்போர்டியர் வெர்ஷனாக ஏஎம்ஜி ஜிஎல்இ 53 என்ற புதிய காரை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ஒரே வேரியன்டில் தான் விற்பனைக்கு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் சொகுசு காரர்களை விற்பனை செய்யும் சிறந்த நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் கார்களை வாங்கினாலே சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்து கிடைக்கும் என்பதால் மக்கள் பலர் இந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை விரும்பி வாங்கி வருகின்றனர். தொடர்ந்து இந்நிறுவனத்தின் காரின் விற்பனை சிறப்பாக இருக்கிறது.

இந்நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு ஜிஎல்இ காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. தற்போது இந்த காரின் அப்டேட் மற்றும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் எஸ்யூவி ரக கூப்பே பாடி ஸ்டைல் கொண்ட காராக இருக்கிறது. இதில் ஜிஎல்இ என்பது நேரடியாக எஸ்யூவி காராக இருக்கும். இதன் அப்டேட்டட் வெர்ஷன் கூப்பே ஸ்டைலில் மாற்றப்பட்டுள்ளது.
முக்கியமாக இதில் முன்பக்க எல்இடி டிஆர்எல்கள் கீழ்ப்பக்கம் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்க பம்பர் டிசைனும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த காரில் ஏஎம்ஜி எம்பிளம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டு பகுதியில் 21 இன்ச் 5 போர்க் அலாய் வீல்கள் ஸ்டாண்டர்டாகவும் ஆப்ஷனாக 22 இன்ச் 10 போர்க் அலாய் வீல்களும் வழங்கப்படுகின்றன. இதன் பின்பக்க எல்இடி லைட் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்த கார் இரண்டு விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி ஆல்பைன் க்ரே யூனி, சோடா லைட் ப்ளூ மெட்டாலிக் ஆகிய நிறங்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இந்த காரின் உட்புற தீமை பொருத்தவரை பாஷிய பிரெளன் மற்றும் பிளாக் தீமிலும் மேட்சியாட்டோ பேட்ச் மற்றும் பிளாக் பீமிலும் இருக்கிறது. முக்கியமாக இந்த காரின் உட்புறம் ஏஎம்ஜி ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை பானரோமிக் சன்ரூஃப், முன் பக்க ஹீட்டு சீட்டுகள், 16ஸ்பீக்கர் கொண்ட 590 பர்மஸ்டர் சவுண்ட் சிஸ்டம், அடுத்ததாக 12.3 இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது இரண்டு ஸ்கிரீன்களாக உள்ளன. ஒரு ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்காகவும் மற்றொரு ஸ்கிரீன் இன்ஸ்ட்ருமென்டாகவும் வழங்கப்பட்டுள்ளன. 4சவுண்ட் கொண்ட கிளைமேட் கண்ட்ரோலும் இதில் உள்ளது.
இந்த ஏஎம்ஜி ஜிஎல்இ53 காரின் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை மல்டிபிள் ஏர் பேக் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக 360 டிகிரி கேமரா, இஎஸ்பி பிளைன் ஸ்பாட் அஸிஸ்ட் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. இதனால் இந்த கார் விபத்தில் சிக்கினாலும் உள்ளே இருக்கும் பயணிகளுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் இன்ஜினில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஏஎம்ஜி ஜிஎல்இ காரில் உள்ள அதே இன்ஜின் தான் இதிலும் இருக்கிறது. 3லிட்டர் ட்வின் டர்போ 6 சிலிண்டர் இன்லைன் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 48வோல்ட் மைல்டு லைப்ரரி இன்ஜினாக வழங்கப்பட்டுள்ளது. இந்த செட்டப் 9ஸ்பீடு டூயட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளன. இது மொத்தமாக 435பிஎஸ் பவரையும் 560என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் பொருத்தப்பட்டுள்ள மைல்ட் ஹைபிரிட் செட்டப்பான 48 வோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார் 20பிஎஸ் பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் கூடுதலாக வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆல் வீல் டிரைவ் காராக உருவாக்கப்பட்டுள்ளது. இது 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5 நொடியில் பிக்கப் செய்து விடும். முக்கியமாக இந்த காரில் ஏஎம்ஜி ஸ்பெசிஃபிக் பிரேக்கிங் மற்றும் ரைட் கண்ட்ரோல் ஆகிய அம்சங்கள் உள்ளன.
இந்த காரில் கம்போர்ட்டபிள் மற்றும் ஸ்போர்ட்டி என இரண்டு விதமான ரைடு மோடுகள் உள்ளன. ரைடருக்கு தகுந்த மோடை தேர்வு செய்து வாகனத்தை ஓட்ட முடியும். அதற்கு ஏற்றார் போல் சஸ்பென்ஷன் சிஸ்டமும் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளும் வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 1.85 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் சொகுசு கார்களை தயாரித்து விற்பனை செய்யும் நம்பர் 1 நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் அதிக விலை கொண்ட கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதை நம்மால் சுலபமாக உணர முடிகிறது.


Click it and Unblock the Notifications








