எவ்வளவு காஸ்ட்லியா இருந்தாலும் இந்த காரை வாங்கியே ஆகனும்! அப்படி என்ன இருக்குது தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது இக்யூஏ என்ற எலெக்ட்ரிக் காம்பேக்ட் கிராஸ் ஓவர் காரை அப்டேட் செய்து வெளியிடயுள்ளது. இந்த கார் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் காராகும். பென்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரை விரும்பும் மக்கள் பலர் இந்த காரின் அப்டேட்டிற்காக காத்திருந்தார்கள். தற்போது இந்த கார் அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்காக வெளியாக உள்ளது. இந்த காரில் அப்படி என்னென்ன மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன? புதிய அம்சங்கள் என்ன என்று இந்த கார் விற்பனைக்காக அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது என்ற அனைத்து தகவல்களையும் காணலாம் வாருங்கள்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காம்பேக்ட் செக்மென்ட்டில் என்ட்ரி லெவல் காராக இக்யூஏ என்ற கார் விற்பனையாகி வருகிறது. இந்த காரை அந்நிறுவனம் அப்டேட் செய்து புதிய ஆப்ஷன்களுடன் வெளியிட முடிவு செய்துள்ளது. அதன்படி சர்வதேச அளவில் கடந்த 2023ம் ஆண்டு அறிமுகமாகி விற்பனையாகி வரும் என்ற காரின் சில அப்டேட்களை அப்படியே எடுத்துக் கொண்டு இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

2024 Mercedes-Benz EQA Launch

சர்வதேச அரங்கில் விற்பனையாகி வரும் இக்யூபி காரில் உள்ள ஸ்டைலிங் கருவிகள் மற்றும் பிற சில அப்டேட்டுகளையும் இந்த கார் பெற்றுள்ளது. இந்த காரின் ஸ்டைலிங்கை பொறுத்தவரை முன்பக்கம் வழக்கமான பென்ஸ் ஸ்டார் பேட்டர்ன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக முன் பக்கம் நீளமான லைட் பார், ஏரோ ஆப்டிமைஸ்ட் பம்பர்கள், பின்பக்கம் 3டி லைட் சிக்னேச்சர் அம்சங்களும் இடம் பெறுகிறது.

இந்த அப்டேட்களை பார்க்கும்போது ஏற்கனவே இந்தியாவில் விற்பனையாகி வரும் இக்யூ ரேஞ்ச் வாகனங்களில் உள்ள அம்சங்களை ஒத்ததாக இருக்கிறது. புதிய மூன்று ஸ்போக் ஸ்டியரிங் வீல் கெப்பாசிட்டிவ் கண்ட்ரோல்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டேஷ்போர்டு மற்றும் டோர்களில் இலுமினேட் செய்யப்பட்ட மெர்சிடிஸ் லோகோ பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக 10 இன்ச் கொண்ட இரண்டு ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் எம்பக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

2024 Mercedes-Benz EQA Launch

இந்த ஸ்கிரீன்களை மூன்று விதமான செயல்களில் பெர்சலை செய்து கொள்ளலாம். அதன்படி செட்டில், ஸ்போர்ட்டி மற்றும் கிளாசிக் ஆகிய ஸ்டைல்களில் வழங்கப்பட்டுள்ளன. தற்போது இந்த அப்டேட்டில் கிளியரான மெனு மற்றும் கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக இந்த காரில் வாய்ஸ் ரெககனேஷன் சிஸ்டம் இருக்கிறது. இதில் பல்வேறு விதமான புதிய கமாண்டுகளும் புரிந்து கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு முந்தைய பாடலை விட சிறப்பாக செயல்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏரோ எஃபிசியென்ஸி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் ரோலிங் ரெசிஸ்டென்ஸ் டயர்கள் மற்றும் புதிய ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் மோடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிரைவிங் ரேஞ்சை அதிகப்படுத்த தேவையில்லாத நேரங்களில் ஏசியையும் டிஸ்ப்ளேயும், ஆப் செய்யும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

2024 Mercedes-Benz EQA Launch

சர்வதேச அளவில் விற்பனையாகி வரும் இக்யூஏ 250 ப்ளஸ் காரில் 70.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக இக்யூஏ 250 4 மேட்டிக் மற்றும் இக்யூஏ 350 4 மேட்டிக் கார்களிலும் 66.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு பேட்டரி பேக்கும் டிசி ஃபாஸ்டட் சார்ஜர் 100 கிலோ வாட் வரை சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்யூஏ 250 மற்றும் இக்யூஏ 250 ப்ளஸ் ஆகிய கார்களில் முன் வீல் டிரைவ் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 188 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதுபோக ஆல்வின் டிரைவ் ஆப்ஷனாக இக்யூஏ 300 கார்களில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது 225 எச்பி பவரையும் 288 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஏ கார் அப்டேட் செய்யப்பட்டு இந்தியாவில் வரும் ஜூலை 8ம் தேதி விற்பனைக்கு வருகிறது. இது குடும்பத்தில் வரும் 4வது மாடல் கார் ஆகும். இக்யூஇ, இக்யூஎஸ், இக்யூபி ஆகிய கார்கள் ஏற்கனவே விற்பனையாகி வருகிறது. இந்த இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் பட்சத்தில் இந்தியாவில் ஏற்கனவே விற்பனயாகி வரும் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் மற்றும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெசிடிஸ் பென்ஷன் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் அவர்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள்
குறிப்பாக இந்த கார் ஒரு கிராஸ் ஓவர் கார் என்பதால் இந்த காரை மக்கள் பலர் விரும்பி வாங்குவார்கள். பெரு நகரங்களில் இந்த கார்களின் விற்பனை ஓரளவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஜூலை 8ம் தேதி இந்த கார் விற்பனைக்கு அறிமுகமான பிறகு நிச்சயம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 6, 2024, 11:20 [IST]
English summary
2024 mercedes benz eqa launch india july 8
மேலும்... #mercedes benz eqa #mercedes benz #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X