பிராண்ட் நியூ பென்ஸ் கார் வெறும் ரூ.50 லட்சத்தில்!! பென்ஸ் கார் கனவை நிஜமாக்க இதுதான் சரியான நேரம்!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2024 ஜி.எல்.ஏ ஃபேஸ்லிஃப்ட் (GLA Facelift) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பென்ஸ் காரை பற்றிய விரிவான விபரங்களையும், முந்தைய ஜிஎல்ஏ கார் உடன் ஒப்பிடுகையில் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மாடல் எந்த அளவிற்கு அப்டேட்டானது என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.

உலகளவில் பிரபலமான லக்சரி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக மெர்சிடிஸ்-பென்ஸை சொல்லலாம். இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் நம் நாட்டு மார்க்கெட்டில் மட்டும் கிட்டத்தட்ட 30 கார்களை விற்பனை செய்து வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

mercedes benz gla facelift launched

இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய லக்சரி காராக ஜி.எல்.ஏ எஸ்யூவி காரை சொல்லலாம். இந்த விலை குறைவான பென்ஸ் கார் தற்போது ஃபேஸ்லிஃப்ட்டுக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. புதிய 2024 ஜி.எல்.ஏ ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.50.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஜி.எல்.ஏ, ஜி.எல்.ஏ 200டி மற்றும் ஜி.எல்.ஏ 200டி 4மேட்டிக் என 3 விதமான வேரியண்ட்களில் இந்த புதிய பென்ஸ் கார் கிடைக்கும். இதில் ஜி.எல்.ஏ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைதான் ரூ.50.50 லட்சம் ஆகும். மற்ற இரண்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.54.75 லட்சம் மற்றும் ரூ.56.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

2024ஆம் ஆண்டிற்கான புதிய அப்டேட்களாக புதிய டிசைனில் ஹெட்லைட்ஸ் & எல்இடி டிஆர்எல்-கள், அப்டேட்டட் எல்இடி டெயில்லைட்ஸ் உள்ளிட்டவை புதிய ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்த காரின் பம்பர்களில் புதியதாக கிளாடிங் சேர்க்கப்பட்டு உள்ளன. அதேபோல், சக்கரங்களுக்கு மேல் வழங்கப்படும் வளைவுகளை காரின் உடல் நிறத்திலேயே பெறலாம்.

2024 ஜிஎல்ஏ காருக்கு புதியதாக ஸ்பெக்ட்ரல் நீலம் என்கிற பெயிண்ட் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மற்றப்படி, காருக்கு உள்ளே பெரியதாக எந்த அப்டேட்டும் வழங்கப்படவில்லை. பழைய ஸ்டேரிங் சக்கரம் மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக ஃப்ளேட்-பாட்டம் ஸ்டேரிங் சக்கரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்டேரிங் சக்கரமும் தேவையான கண்ட்ரோல் பொத்தான்களை கொண்டுள்ளது.

mercedes benz gla facelift launched

காரின் டேஸ்போர்டில் ஃபாக்ஸ்-ஃபைபர் ட்ரிம் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்விட்ச்கியரின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. ஜி.எல்.ஏ எஸ்யூவி காரில் வழக்கமாக வழங்கப்படும் 10.25 இன்ச்சில் ட்வின் டிஸ்பிளேஸ் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மாடலிலும் தொடரப்பட்டுள்ளது. அப்டேட்டான எம்பக்ஸ் சாஃப்ட்வேரை கொண்ட டிஸ்பிளேகள் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே வசதியை வழங்கக்கூடியவை ஆக உள்ளன.

இன்ஃபோடெயின்மெண்ட் திரையில் டிஜிட்டல் டயல்களுக்கு புதிய தீம்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஜிஎல்ஏ காரில் 360-டிகிரி கேமரா வழங்கப்பட்டுள்ளதால், காரை எளிதாக பார்க் செய்யலாம். மற்றப்படி, இந்த காரில் வழங்கப்படும் என்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லை. 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அல்லது 2.0 லிட்டர் டர்போ 4-சிலிண்டர் டீசல் என்ஜின் உடன் 2024 ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் காரை வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலை குறைவான காராக இருப்பினும், ஜி.எல்.ஏ எஸ்யூவி காரை அவ்வப்போது மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அப்டேட் செய்துவிடுகிறது. இந்த முறை தொழிற்நுட்ப அம்சங்கள் அதிகளவில் சேர்க்கப்படாவிடினும், காரின் தோற்றம் மெருக்கேற்றப்பட்டுள்ளது. இருப்பினும், ரூ.50.50 லட்சத்தில் வாங்கக்கூடிய அளவிற்கு ஏற்ற காரா இது என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 31, 2024, 19:26 [IST]
English summary
2024 mercedes benz gla facelift launched price design updates all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+