இந்த காரின் விலை இவ்வளவு சீப்தானா? எம்ஜி வேறலெவல் மாஸான காரை கொண்டுவந்துட்டாங்க
எம்ஜி நிறுவனம் தனது அஸ்டர் காரை அப்டேட் செய்து 2024 எம் ஜி அஸ்டர் காராக வெளியிட்டுள்ளது. பழைய மாடல் காரில் இருந்து புதிய காரில் ஏகப்பட்ட அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக காரின் உட்புறம் பல்வேறு வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ள. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
எம்ஜி நிறுவனம் இன்று தனது 2024 அப்டேட் செய்யப்பட்ட அஸ்டர் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை நிறுவனம் ரூ 9.98 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம் இந்த காரில் ஐந்து விதமான வேரியன்ட்கள் உள்ளன. ஸ்பிரிட், ஷைன், செலக்ட், ஷார்ப் ப்ரோ, மற்றும் சாவி ப்ரோ ஆகிய வேரியன்ட்களில் வெளியாகி உள்ளன.

எம்ஜி நிறுவனத்தின் அஸ்டர் கார் மார்க்கெட்டில் மிக நன்மதிப்பை பெற்ற கார் என்பதால் இந்த காரின் வருகைக்காக பலர் காத்திருந்தார்கள். இந்நிலையில் அவர்களுக்கு பலனளிக்கும் வகையில் பல்வேறு அப்டேட்களை பெற்று இந்த கார் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரை வாங்க பலர் எம்ஜி ஷோரூமை நோக்கி படையெடுக்க துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அம்சங்களில் வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்டுகள், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, ஆட்டோ டீம் செய்யக்கூடிய ரியர் வியூ மிரர் உள்ளிட்டவை இந்த காரில் முக்கிய அம்சங்களாக உள்ளன. இதுபோக கூடுதலாக அப்டேட் செய்யப்பட்ட ஐஸ்மார்ட் 2.0 இதில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஐஸ்மார்ட் 2.0 அம்சத்தில் முக்கியமாக அட்வான்ஸான யூசர் இன்டர்ஃபேஸ் மற்றும் 80 இன் கார் கனெக்டெட் அம்சங்கள் ஆகியன உள்ளன. இதில் ஜியோ வாய்ஸ் ரெககணேஷன் சிஸ்டம், வானிலை, கிரிக்கெட் ஸ்கோர், கால்குலேட்டர், கடிகாரம், தேதி மற்றும் நாள், ராசி பலன், டிக்ஷனரி, செய்திகள் மற்றும் பிற தகவல்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட விஷயங்களை அறிந்து கொள்ளும் இன்பில்ட் வாய்ஸ் கமெண்டுகள் உள்ளன.
இத்துடன் கூடுதலாக ஆன்ட்டி தெஃப்ட் அம்சம் இருக்கிறது. இது டிஜிட்டல் கீ உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்டர்நெட் கனெக்ஷன் இல்லை என்றாலும் இந்த கார் பாதுகாப்பானதாக இருக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் யூசர் இன்டர்ஃபேஸ் விட்ஜெட் கஸ்டமர் உடன் கூடிய ஹோம் ஸ்கிரீன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவும் இதில் பல்வேறு ஆப்ஸ்கள் உள்ளன.

இந்த காரில் அசிஸ்டென்ஸ் மற்றும் 14 லெவல் 2 ஆட்டோமேஷன் அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் மெட்ராஸ் ரீடர்கள் மற்றும் மல்டி பர்ப்பஸ் கேமரா இருக்கிறது. இது அடாஸ் தொழில் நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ள காராக இருக்கிறது. மொத்தம் 49 சிறப்பான பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கார் 5 சீட்டர் காராக பிரீமியம் இன்டீரியர் மற்றும் பேனராமிக் சன் ரூஃப் கொண்ட காராக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் மற்றும் 1.3 டர்போ ஆகிய இன்ஜின் ஆப்ஸ்கள் உள்ளன. இது ஏற்கனவே பழைய காரில் இருந்த இன்ஜின் ஆப்ஷன்கள்தான் பெர்ஃபார்மன்ஸ் வகையில் எந்த விதமான மாற்றங்களும் இல்லை. 1.5 லிட்டரில் மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் உள்ளன 1.3 டர்போவில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் இருக்கிறது.
எம்ஜி நிறுவனத்தின் அஸ்டார் கார் நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற காராக இருக்கிறது. இந்த காரின் விற்பனை தொடர்ந்து சிறப்பாக இருந்து வரும் நிலையில் இந்த காரை அப்டேட் செய்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது அதன் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. இந்த காரின் விற்பனை இதனால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனம் இந்தியாவில் மிக முக்கியமான கார் தயாரிப்அபு நிறுவனமாக மாறிவிட்டது. இந்நிறுவனம் இந்தியாவிற்கு வந்தது முதல் நல்ல வரவேற்பை பெற்று சிறப்பான கார்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ள நிலையில் இந்த அஸ்டார் காரும் நல்ல விற்பனையாகி வந்தது. தற்போது அதன் அப்டேட் வெளியாகியுள்ளது அதன் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications









