இனி எதுத்தாப்ல எமனே வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது! பாதுகாப்பை உச்ச கட்டத்துக்கு கொண்டு போனது அந்த நிறுவனமா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) ஆகிய 2 கார்களும், மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. இதில், ஸ்கோடா குஷாக், எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். மறுபக்கம் ஸ்கோடா ஸ்லாவியா, செடான் (Sedan) ரகத்தை சேர்ந்தது.
இந்த 2 கார்களின் அப்டேட் செய்யப்பட்ட 2024 மாடல்களை ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதில், 2024 ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 11.99 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 19.79 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் 2024 ஸ்கோடா ஸ்லாவியா செடான் காரின் ஆரம்ப விலை 11.63 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 18.83 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

2024 அப்டேட்களின் ஒரு பகுதியாக ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய 2 கார்களிலும் தற்போது 6 ஏர்பேக்குகள் (Airbags) ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது இனிமேல் இந்த 2 கார்களின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படும். இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது.
ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா என 2 கார்களுமே குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன. இந்த சூழலில் தற்போது இந்த கார்களின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா என்று 2 கார்களின் பாதுகாப்பு அதிகமாகும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஸ்கோடா குஷாக் என்று 2 கார்களுமே மொத்தம் 3 வேரியண்ட்களில்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை ஆக்டிவ் (Active), ஆம்பிஷன் (Ambition) மற்றும் ஸ்டைல் (Style) ஆகியவை ஆகும். செயல்திறனை பொறுத்தவரையில், இந்த 2 கார்களிலுமே மொத்தமாக 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும்.
டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா கார்களின் 2024 மாடல்களின் வருகை, அவற்றின் போட்டி மாடல்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 2024 மாடல்களின் வருகை காரணமாக, ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய 2 கார்களின் விற்பனை உயரும் என நாங்கள் கருதுகிறோம். ஸ்கோடா நிறுவனம் இதற்கு அடுத்தபடியாக புத்தம் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் ரெனால்ட் கைகர் (Renault Kiger) போன்ற கார்களுக்கு போட்டியாக, ஸ்கோடா நிறுவனம் இந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.


Click it and Unblock the Notifications








