பைக் மாதிரி மைலேஜ் தரப்போகுது! செப்டம்பர் மாதம் வரப்போகும் புதிய ஸ்விஃப்ட் காரை பற்றி தெரியுமா?

சுஸூகி நிறுவனம் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது அதன் ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் முற்றிலும் புதிய இன்ஜின் மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் இயங்கும் வகையில் இந்த கார் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வரும் செப்டம்பர் மாதம் இந்த கார் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் விற்பனையாகி வரும் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த கார் மீண்டும் ஹேட்ச்பேக் செக்மென்டில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இந்த புதிய தலைமுறை காரில் வடிவமைப்பு, இன்ஜின் உள்ளிட்ட பல்வேறு விதமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சுஸூகி நிறுவனம் இந்த புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரின் ஸ்போர்ட்ஸ் வெர்ஷனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

2024 Swift Sport Specs

ஜப்பானில் இந்த புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் வெர்ஷன்காரின் சோதனை துவங்கப்பட்டுள்ளது. இந்த கார் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது விற்பனையாகி வரும் காரைவிட இந்த கார் எடை குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சுமார் 70 கிலோ வரை இந்த காரின் எடை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த காரின் பெர்ஃபார்மென்ஸ், மைலேஜ் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஐரோப்பா ஸ்விஃப்ட் புதிய தலைமுறை கார் 1025 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இதுவே ஜப்பான் ஸிஃவிப்ட் ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் கார் 970கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. அளவுகளை பொருத்தவரை புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் கார் 3990மிமீ நீளமும், 1750மிமீ அகலமும், 1500மிமீ உயரமும் வழங்கப்பட்டுள்ளது. உயரம் மற்றும் வீல் பேஸை பொருத்தவரை அதே அளவிலேயே வழங்கப்பட்டுள்ளது.

2024 Swift Sport Specs

புதிய ஸ்விஃப்ட் வெர்ஷன் கார் தற்போது விற்பனையாகி வரும் 4ம் தலைமுறை ஸ்விஃப்ட் கார் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது இன்ஜின் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சுஸூகி நிறுவனம் புதிய இன்ஜின் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த இன்ஜின் 1.4 லிட்டர் இன்லைன் 4 சிலிண்டர் டர்போ இன்ஜினாக உருவாக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. இது 48 வோல்ட் இண்டகிரேட்டர் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.

நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் கார் இஸட் 12இ டைப் இன்ஜின் பொருத்தப்பட்டதாக இருக்கிறது. இது 1.2 லிட்டர் இன்லைன் 3 சிலிண்டர் இன்ஜின் உடன் 82 பிஎஸ் பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தெர்மல் கட்டுப்பாட்டில் 40 சதவீதம் சிறப்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த இன்ஜினை தான் மாற்றி விட்டு புதிய இன்ஜினை ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் காருக்கு பொருத்தப்படுகிறது.

2024 Swift Sport Specs

ஏற்கனவே ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் காரில் ஹைபிரிட் மாடலாக 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் செட்டப் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக இன்டர்கிரேட்டர் ஸ்டார்டர் ஜெனரேட்டர் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது இதன் மூலம் கூடுதலாக 13.6 எச்பி பவர் காருக்கு கிடைக்கிறது. இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் ஆக்ஸிலரேஷன் அதிகமாகும் போது கண்ட்ரோல் கூடுதலாக கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காரின் எடை குறைக்கப்பட்டுள்ளதால் இந்த கார் தற்போது விற்பனையாகி வரும் காரை விட 16சதவீதம் அதிக மைலேஜ் தரும் எனவும், தற்போது விற்பனையாகி வரும் காரில் இருந்து வெளியேறும் மாசுவைவிட 15சதவீதம் குறைவாக மாசு வெளியேறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது விற்பனையாகி வரும் 4ம் தலைமுறை ஸ்விஃப்ட் காரை விட ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் கார் அதிக மைலேஜ், அதிக பெர்ஃபார்மென்ஸ் காராக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது ஸ்விப்ட் ஹைபிரிட் கார் ஜப்பானில் இந்திய மதிப்பில் ரூபாய் 12.04 லட்சம் என்ற விலையிலும், ஹைபிரிட் இல்லாத மாடல் ரூபாய் 12.03 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் ஜப்பானில் விற்பனைக்கு அறிமுகமாகும் போது ரூ12.78 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாக வாய்ப்பு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜப்பானில் இந்த ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் கார் வரும் செப்டம்பர் மாதம் அறிமுகம் ஆகும் நிலையில், இந்த காரை இந்தியாவிற்கு கொண்டு வருவது குறித்து சுஸூகி நிறுவனம் விரைவில் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கலாம். இப்படியாக இந்த கார் இந்தியாவிற்கு வந்தால் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என பொருத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 1, 2024, 13:26 [IST]
English summary
2024 swift sport specs leak 1 4 turbo lighter weight mileage
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X