மாருதி, ஹூண்டாயை சமாளிக்க டாடா நிறுவனம் அல்ட்ராஸ் காரில் கொண்டு வந்த செம மாற்றம்!

டாடா நிறுவனம் தனது அல்ட்ராஸ் காரை அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. அந்த காருக்கு போட்டி நிறுவனங்கள் வெளியிடும் கார்களில் உள்ள பல்வேறு அம்சங்கள் இல்லாத காரணத்தால் அதையெல்லாம் சேர்த்து அந்நிறுவனம் தற்போது அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்த காரின் ரேஸர் எடிஷன் அறிமுகமாக உள்ள நிலையில் தற்போது இந்த காரும் அப்டேட்டாகி உள்ளது பலரை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த அப்டேட்டை பலர் பார்த்து வந்த நிலையில் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனம் வரும் 7ம் தேதி தனது அல்ட்ராஸ் காரின் ரேஸர் எடிசனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது இந்நிலையில் தற்போது உள்ள அல்ட்ராஸ் கார் மிகப்பெரிய அப்டேட்டுகளை பெறுகிறது. அதன்படி 2024 அல்ட்ராஸ் காரரின் அப்டேட்டட் வெர்ஷன் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதில் சில வேரியன்ட்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே விற்பனையாக கார்களில் சில வேரியன்ட்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

2024 Tata Altroz Updated

அதன்படி விரைவில் அறிமுகமாக உள்ள அல்ட்ராஸ் கார்களில் உள்ள அம்சங்கள் பல தற்போது விற்பனையாகி வரும் அல்ட்ராஸ் காரிலும் இடம் பெறும் வகையில் இந்த அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்காக எல்யூஎக்ஸ் என்ற டிரிம்களை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி எக்ஸ் இசட் எல்யூஎக்ஸ், எக்ஸ் இசட் பிளஸ் எஸ் எல்யூ எக்ஸ் மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் எஸ் எல்யூஎக்ஸ் டார்க் ஆகிய வேரியன்ட்கள் அறிமுகமாகி உள்ளன.

இந்த வேரியன்ட்களில் எல்லாம் உட்புறம் 10.25 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்பளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுபோக 360 டிகிரி கேமரா சிஸ்டமும் உள்ளது. இந்த வேரியன்ட்களில் அவென்யூ ஒயிட், ஆர்கேடு கிரே, ஒப்பேரா ப்ளூ, டெளன் டவுன் ரெட், காஸ்மோ டார்க் ஆகிய கலர் ஆப்ஷன்களும் உள்ளன.

2024 Tata Altroz Updated

எக்ஸ்இசட் பிளஸ் எஸ் மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் எல்யூஎக்ஸ் ஆகிய வேரியன்ட்களில் 7இன்ச் கொண்ட டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது அம்சம் தான் அல்ட்ராஸ் காரிலும் இருக்கிறது. காரில் 10.25இன்ச் டிஸ்ப்ளே சிஸ்டம் இருக்கிறது. அதன் இதே டிஸ்ப்ளே தான் உள்ளது. டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் கார்தான் பிரீமியம் ஹேட்ச்பேக் காராக 5ஸ்டார்களை பெற்ற காராக விற்பனைக்கு வருகிறது. இதில் இதுவரை 6ஏர் பேக்குகள் ஸ்டாண்டர்டாக பொருத்தப்படவில்லை.

2024 டாடா அல்ட்ராஸ் எக்ஸ்இசட் பிளஸ் எஸ் எல்யூஎக்ஸ் என்ற டாப் வேரியன்ட் காரில் மட்டுமே தற்போது 6ஏர்பேக் ஆப்ஷன் இருக்கிறது. இதே வேரியன்டில் ஐஆர்ஏ டெலிமேடிக் டெக்னாலஜி மற்றும் ஏர் பியூரிஃபையர் ஆகிய அம்சங்கள் உள்ளன. எக்ஸ்இசட் பிளஸ் வேரியன்டிலும் இந்த ஆப்ஷன் இருக்கிறது. விரைவில் வெளியாக உள்ள அல்ட்ராஸ் ரேஸர் காரில் மட்டுமே அல்ட்ராஸ் காரில் வென்டிலேட்டட் முன்பக்க சீட்டுகள் கொண்ட காராக அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.

2024 Tata Altroz Updated

டாடா நிறுவனம் தற்போது அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி டார்க் எடிசன் மற்றும் ஐ டர்போ காரின் அனைத்து வேரியன்ட்களை நிறுத்தியுள்ளது. ரேஸர் காரை பொறுத்தவரை 120 பிஎஸ் பவரையும் 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் நெக்ஸான் காரிலும் பொருத்தப்படுகிறது.

சாதாரண அல்ட்ராஸ் காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நேரச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பெஆரத்தப்பட்டுள்ளது. இது 88 பிஎஸ் பவரையும் 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டிசிஏ கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் சிஎன்ஜி வேரியன்ட் 73.5 பிஎஸ் பவரையும் 103 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த வேரியன்டில் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் கிடையாது.

இதன் டீசல் இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 90 பிஎஸ் பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் வருகிறது. இதிலும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கிடையாது. இதன் விலை குறித்த அறிவிப்புகள் எல்லாம் பின்னர் தெரிவிக்கப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் கார் மக்கள் அதிகம் விரும்பும் காராக இருக்கிறது. இந்த காரை மக்கள் பலர் விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்த காரில் தற்போது புதிய அப்டேட்களை கொண்டு வந்துள்ளது அதன் ரசிகர்களை ஈர்த்துள்ளது. குறிப்பாக ரேஸர் எடிசன் காரில் பவர்ஃபுல்லான இன்ஜினை விரும்பும் மக்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 4, 2024, 13:58 [IST]
English summary
2024 tata altroz updates new features variants dark cng turbo discontinued
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X