மீண்டும் கேமரா கண்ணில் சிக்கிய கர்வ் கார்! இதுல இவ்வளவு விஷயம் இருக்குதா?

டாடா நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரிய அறிமுகமான கர்வ் காரின் கம்பஷன் இன்ஜின் வெர்ஷன் இந்திய சாலைகளில் மீண்டும் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. தற்போது புனே பகுதியில் இந்த கார் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனம் சி-எஸ்யூவி செக்மெண்டில் அடுத்து மிகப்பெரிய தயாரிப்பாக கர்வ் என்ற காரை தான் வெளியிடப் போகிறது. இந்த காரை எலெக்ட்ரிக் மற்றும் கம்பஷன் இன்ஜின் ஆகிய இரண்டு ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அடுத்த ஒரு சில மாதங்களில் டாடா கர்வ் எலெக்ட்ரிக் கார் தான் முதலில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

tata curvv

2024ம் ஆண்டு இறுதியில் டாடா கர்வ் காரின் கம்பஷன் இன்ஜின் வெர்ஷன் கார்கள் விற்பனைக்கு அறிமுகமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இந்த காரை தற்போது டாடா நிறுவனம் இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. முற்றிலுமாக மறைக்கப்பட்ட ஸ்டிக்கர்களுடன் இந்த கார் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. புனேவில் இந்த கார் சோதனை செய்யப்பட்டு வரும்போது நமது கேமரா கண்களுக்கு சிக்கியது.

சோதனை செய்யப்பட்டு வரும் காரிலிருந்து நமக்கு கிடைத்த தகவலின் படி இந்த காரில் உள்ள சி பில்லர் ஸ்லோப் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நமக்கு ஏற்கனவே தெரிந்த தகவலான இது ஒரு கூப்பை வடிவ கார் என்பதால் இப்படியான வடிவமைப்பு இருக்கிறது. அடுத்ததாக இதில் தெளிவாக தெரிவது இதன் அலாய் வீல் தான். இதில் ஸ்டார் வடிவ அளவில் வழங்கப்பட்டுள்ளது.

tata curvv

இந்த காரின் மற்ற தகவல் எதுவும் இதுவரை டாடா நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதன் கம்பஷன் இன்ஜின் வெர்ஷனை பொருத்தவரை டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் வெர்ஷனை பொருத்தவரை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகிய இரண்டு ஆப்ஷன்களும் அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளன.

2023ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் 1.2லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் தான் இந்த கார் கான்செப்ட் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டது. கூடுதலாக 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் புதிய ஆப்ஷனாக இணைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. டீசல் இன்ஜினை பொறுத்தவரை 1.5 லிட்டர் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு ஆப்ஷன்களிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

tata curvv

அடுத்ததாக இந்த காரில் உள்ள உட்புறத்தை பொருத்தவரை தற்போது டாடா நெக்ஸான் கார் அப்டேட் செய்யப்பட்டு வெளியாகும் போது எப்படியான உட்புற கட்டமைப்பு இருந்ததோ அதே வடிவிலான கட்டமைப்பு இந்த கர்வ் காரில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இதில் உள்ள டச் ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டம் ப்ளோட்டிங் ஸ்கிரீனாக வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் கார் முதலிலேயே அறிமுகமாக வாய்ப்புள்ளதால் அதன் விற்பனையை பொறுத்து இதன் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படலாம். இதன் விலை குறித்த விபரங்களும் ஓரளவுக்கு நமக்கு தெரியவந்துள்ளன. அதன்படி எலெக்ட்ரிக் வெர்ஷன் கார் 18 லட்சம் என்ற விலையிலும் கம்பஷன் இன்ஜின் கார் ரூபாய் 15 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளது.

டாடா கர்வ் கார் நிச்சயம் மார்கெட்டில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெக்ஸான் கார் ஆட்டோமொபைல் சந்தையில் பாதுகாப்பான கார்களுக்கான டிரெண்டை ஏற்படுத்தியது என சொல்லாம். அதே போல கர்வ் கார் சிறந்த வடிவமைப்பு மற்றும் டிசைனில் புது டிரெண்டை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதே நேரத்தில் இந்த கார் பாதுகாப்பான காராகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனத்தின் கர்வ் கார் மீது மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த கார் மார்க்கெட்டின் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்கெட்டில் உள்ள பல நிறுவனங்கள் இந்த செக்மெண்டில் கார்களை விற்பனை செய்து வரும் நிலையில் இந்த காரும் பலத்த போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, May 6, 2024, 23:59 [IST]
English summary
2024 tata curvv ice version spotted testing in pune
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X