டாடா பஞ்ச் கார் வாங்கப்போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சீக்கிரமே ஃபேஸ்லிஃப்ட் வருது!

2024-ல் டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் இந்திய சந்தையில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் புதிய அம்சங்கள் மற்றும் விற்பனையில் உள்ள வேரியன்ட்களில் மாற்றம் இடம்பெறும். டாடா மோட்டார்ஸ் பஞ்ச் உள்நாட்டில் அதிக விற்பனையாகும் வாகனமாக உள்ளது. சமீபத்தில் பல முறை இந்தியாவில் அதிகம் விற்பனையான பயணிகள் காராகவும் இருந்துள்ளது. இந்த மைக்ரோ எஸ்யூவின் விலை பேஸ் மாடல் ரூ. 6.13 லட்சத்தில் இருந்து டாப் மாடலுக்கு ரூ. 10.20 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. இது ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் பிற கச்சிதமான எஸ்யூவுகளுடன் நேரடியாக போட்டியிடுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, ஃபேஸ்லிஃப்ட் பஞ்ச் காரின் ஸ்பை படங்கள் இந்தியாவில் வெளியாகின, அது விரைவில் இந்த கார் வெளியாக உள்ளதைக் குறிக்கிறது. டாடா மோட்டார்ஸ் தனது மாடல்களை அடிக்கடி புதுப்பிக்கிறது. எனவே புதுப்பிக்கப்பட்ட பஞ்ச் வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் கர்வ் காரின் ICE மற்றும் EV கார்ககளை புதிய மாடல்களாக சமீபத்தில் தான் வெளியிட்டது.

Tata Punch Facelift 2024

2024 டாடா பஞ்ச் அதன் பெரிய சிப்லிங் மாடலான நெக்ஸானில் காணப்படும் பல புதிய அம்சங்களுடன் வருகிறது. வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஒருங்கிணைப்பைக் கொண்ட ஒரு பெரிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சேர்க்கப்படும் என தெரிகிறது. கூடுதலாக, யூஎஸ்பி - சி டைப் சார்ஜிங் போர்ட்கள் மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் ஆகியவை கிரியேட்டிவ் மற்றும் அக்கம்பிளீஸ்டு வேரியன்ட்களில் கிடைக்கும்.

புதுப்பிக்கப்பட்ட வேரியன்ட் வரிசை பழைய மாடலை விட குறைவாக இருக்கும். புதிய டாடா பஞ்ச் பியூர், பியூர் (ஓ), அட்வென்ச்சர், அட்வென்ச்சர் ரிதம், அட்வென்ச்சர் எஸ், அட்வென்ச்சர்+ எஸ், அக்கம்ளீஸ்டு டேஸில், அக்கம்ளீஸ்டு+, அக்கம்ளீஸ்டு டேஸில் சன்ரூஃப், அக்கம்ளீஸ்டு+ சன்ரூஃப், கிரியேட்டிவ், கிரியேட்டிவ்+, கிரியேட்டிவ் சன்ரூஃப், கிரியேட்டிவ்+ எஸ் வேரியன்ட்களில் வழங்கப்படும்.

Tata Punch Facelift 2024

பியூர் ரிதம், அக்கம்ளீஸ்டு, அக்கம்ளீஸ்டு சன்ரூஃப் மற்றும் கிரியேட்டிவ் வேரியன்ட்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வெளிப்புற வடிவமைப்பு சமீபத்திய நெக்ஸான் மற்றும் பஞ்ச் EV மாடல்களுடன் மேலும் ஒத்துப்போகும். கேபினின் உள்ளே, புதிய மேற்பரப்பு வடிவமைப்புகள் மற்றும் வேரியன்ட்கள் ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் சன்ரூஃப் அதிக வேரியன்ட்களில் நீட்டிக்கப்படும். முன்பக்க பயணியருக்கு ஒரு புதிய கன்சோல், ஒரு ஆர்ம்ரெஸ்ட் மற்றும் ஒருங்கிணைந்த பின்புற ஏசி வென்ட் ஆகியவை அப்டேட்டில் ஒரு பகுதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதானல் தற்போது உள்ள பஞ்ச் காரிலிருந்து அப்டேட் செய்யப்பட்ட பின்பு பல அம்சங்கள் புதிதாக சேரும் என எதிர்பார்க்கலாம்.

Tata Punch Facelift 2024

செயல்திறனில் எந்த மாற்றமும் எதிர்பார்க்கப்படவில்லை. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் கியர் (AMT) உடன் கியர் ஆப்ஷன் உடன் கூடிய 1.2L NA பெட்ரோல் இன்ஜினை தொடர்ந்து பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் CNG எடிசன்கள் கிடைக்கும்.

டாடா மோட்டார்ஸ் விரைவில் CNG-வெர்ஷனில் நெக்ஸான் காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இது ஃபேஸ்லிஃப்ட் பஞ்ச் கார் இந்த வருடத்தின் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை டாடா பஞ்ச் ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள். அறிமுகமானதும் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கின்றனர்.

இந்த பிராண்ட் சமீபத்தில் வெளியீட்டு டிரெண்டில் உள்ளது. கர்வ் காரின் ICE மற்றும் EV எடிசன்கள் இரண்டும் குறுகிய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. வரும் புதுப்பிப்புகள் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் அப்டேட்ட செய்யப்பட்ட வேரியன்ட் வரிசையை வழங்குவதன் மூலம் இந்தியாவின் வளர்ந்து வரும் கம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் டாடா பஞ்ச் போட்டித்தன்மையைத் தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அவ்வப்போது மார்கெட்டில் உள்ள டிரெண்டிற்கு ஏற்ப தங்கள் வாகனங்களை அப்டேட் செய்து கொள்ளும். அதன்படி தான் பஞ்ச் காரும் தற்போது அப்டேட் செய்யப்படுகிறது. இந்த அப்டேட்டிற்கு பிறகு இந்த காரின் விற்பனை மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 13, 2024, 12:09 [IST]
English summary
The anticipated 2024 Tata Punch facelift aims to strengthen its position in India's compact SUV market with new features, a simplified variant lineup, and design enhancements.
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X