பயணிகளை பாதுகாப்பதில் கடவுளுக்கு இணையான கார் அறிமுகம்! எல்லா பெரிய பிராண்டுகளையும் ஓரமா போக சொல்லுங்க..

டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் விலை குறைவான கார் மாடலாக பஞ்ச் (Punch) உள்ளது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலையே புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, டாடா நிறுவனம். புதுப்பித்தலின்கீழ் ஏகப்பட்ட புதிய அம்சங்களை இந்த காரில் டாடா மோட்டார்ஸ் சேர்த்திருக்கின்றது. ஆகையால், இதன் போட்டியாளர்களுக்கு கூடுதல் பலம் கொண்ட போட்டியாளனாக பஞ்ச் மாறியிருக்கின்றது. மேலும், இந்த அப்டேட் செய்யப்பட்ட மாடலுக்கு அறிமுக விலையாக ரூ. 6.12 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். புதுப்பித்தலின் அடிப்படையில் இந்த காரில் டாடா நிறுவனம் யுஎஸ்பி டைப் சி வகை சார்ஜிங் போர்ட்டை சென்டர் கன்சோலில் வழங்கி இருக்கின்றது. இத்துடன், புதிதாக 26.03 செமீ (10.25 அங்குல) அளவுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

2024 Tata punch launched

இது ஓர் வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்ட திரை ஆகும். இத்துடன், பின் இருக்கைக்கு என தனி ஏசி துவாரங்கள் மற்றும் முன் இருக்கைக்கு ஆர்ம் ரெஸ்ட் ஆகியவை இந்த காரில் புதுப்பித்தலின்கீழ் வழங்கப்பட்டு உள்ளன.

இதுதவிர முந்தைய வெர்ஷனில் வழங்கப்பட்ட சிறப்பம்சங்களும் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பவர் ஃபோல்டிங் விங் மிர்ரர், பின்னிருக்கைக்கான சென்டர் ஆர்ம்ரெஸ்ட், கூல்டு க்ளோவ் பாக்ஸ் ஆகியவையும் இந்த காரில் இடம் பெற்றிருக்கும்.

2024 Tata punch infotainment

இத்துடன், படில் லேம்ப்-ம் இந்த காரின் ரியர் வியூ மிர்ரர்களில் வழங்கப்பட்டு உள்ளது. இது இருட்டான இடங்களில் காரை வெளியேறும் போது இடத்தை பார்த்து ஏதுவாக இருக்கும். இதுமட்டுமில்லைங்க, இந்த கார் மாடல் அழகிய தோற்றத்தைக் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றது. இதற்கு பெரும் பங்கினை வகிக்கக் கூடியதாக எல்இடி டிஆர்எல் லைட்டுகள் இருக்கின்றன.

இதுதவிர, இந்த காரில் புரஜெக்டர் வகை ஹெட்லேம்ப், ஐஆர்ஏ கார் இணைப்பு வசதி உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த கார் அதிக பாதுகாப்பானதாகவும் இருக்கும் என தெரிகின்றது. டூயல் ஏர் பேக், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை, சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், பிரேக் ஸ்வே கன்ட்ரோல் மற்றும் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் ஆகிய அம்சங்களே இடம் பெற்றிருக்கின்றன.

Tata punch wireless charger

அதேநேரத்தில், பஞ்ச் ஓர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்ற கார் மாடலாகும். ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே அது பெற்றிருக்கின்றது. விபத்துகளின் போது கடவுளை காக்கும் திறன் கொண்ட கார் இது என்பதற்கு சான்றாகவே இந்த தர மதிப்பு உள்ளது.

எஞ்சின் விஷயத்திலும் இந்த காரில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என தெரிகின்றது. அந்தவகையில், டாடா பஞ்ச் கார் மாடலில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டாரே எதிர்பார்க்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக 86 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும்.

5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுதவிர, இந்த கார் மாடலில் சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது. இதனால், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகக் காட்சியளிக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது பெற்றுக் கொண்டிருக்கும் விற்பனை வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே டாடா மோட்டார்ஸ் இந்த கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. எனவே வரும் பண்டிகைக் காலத்தில் கூடுதல் வாடிக்கையாளர்களை இந்த கார் மாடல் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 17, 2024, 18:15 [IST]
English summary
2024 tata punch launched at rs 6 12 lakh offers new features
மேலும்... #tata motors #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X