கம்மி ரேட்ல இப்படி ஒரு பைக்கா? இனி இந்த பைக் தான் எல்லா ஊர்லயும் ஓடப்போகுது!
யெஸ்டி நிறுவனம் தனது அட்வெஞ்சர் பைக்கை தற்போது அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. புதிதாக அப்டேட் செய்யப்பட்ட பைக் ரூபாய் 2.10 லட்சம் முதல் ரூபாய் 2.20 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த அப்டேட்டில் அடிப்படையில் எந்த விதமான மாற்றங்களும் இல்லை என்றாலும் பல்வேறு விதமான வெளிப்புற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்படியாக இந்த பைக்கில் என்னென்ன அப்டேட்டுகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மைசூர் தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்நிறுவனம் தற்போது யெஸ்டி அட்வெஞ்சர் பைக்கை அப்டேட் செய்து இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ரூ2.09 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த பைக்கின் முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி விட்டன.

இந்த பைக்கை நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் அருகில் உள்ள ஜாவா யெஸ்டி ஷோரூமுக்கு சென்று நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த புதிய அப்டேட்டில் பல்வேறு விதமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முக்கியமாக இது கலர் ஸ்கீம்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அதிகமான கலர் ஆப்ஷனை தேர்வு செய்து அவர்களது வாகனங்களை வாங்க முடியும்.
இந்த அப்டேட்டில் யெஸ்டி அட்வெஞ்சர் பைக்கில் பல்வேறு விதமான காஸ்மெட்டிக் அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது இந்த பைக்கின் லுக்கையே மாற்றி உள்ளது. பிளாஸ்டிக் இன்செர்ட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் இதில் EST.69 என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் இந்நிறுவனம் எவ்வளவு பாரம்பரியமான நிறுவனம் என்பதை காட்டும் வகையில் இது வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் முன்பக்கம் வட்ட வடிவிலான ஹெட்லைட் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இது காண்பவர்கள் கண்களை கவரும் வகையில் இருக்கிறது. இந்த பைக்கில் முன்பக்கம் முழுவதும் பியானோ பிளாக் நிறத்தில் கிரில் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அதிகரிப்பதற்காக இந்த பைக்கின் முன்பக்கம் வைசர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுவும் டிசென்டான அளவில் பொருத்தப்பட்டுள்ளது. இது கிளஸ்டர் பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.
இப்படியாக பல்வேறு அப்டேட்களை வழங்கி யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கை கூடுதல் அம்சங்களுடன் இதே செக்மெண்டில் போட்டியில் இருக்கும் பைக்குகளுக்கு இணையாக மாற்றி உள்ளது. இந்த பைக்கில் மிக முக்கியமாக அப்சர்ட் எக்ஸாஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஹெட்டர் மற்றும் சம்ப்கார்டு பகுதிகள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இதுபோல கூலென்ட் ரிவைஸர் பகுதியும் பின்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால் இந்த பைக்கின் ஒட்டுமொத்த எடை 5 கிலோ வரை குறைந்துள்ளது. இந்த யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கில் அதே 334சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜினை தான் பயன்படுத்துகிறது. இது 30 பிஎச்பி பவரையும் 30 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்கள் மூலம் இந்த பைக் இனி பல்வேறு விதமான இடங்களில் பயணிக்கும் திறன் கொண்டதாகவும் அதே நேரம் அனைத்து சாலைகளிலும் பயணிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது யெஸ்டி விரும்பிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துக்கு போட்டியாக இந்த பைக்குகளை ஜாவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த பைக்கில் விற்பனை நிச்சயம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். அப்டேட் செய்யப்பட்ட பிறகு பலர் இந்த பைக்கின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்புவார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யெஸ்டி அட்வெஞ்சர் பைக் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதன் விலையை பார்க்கும் போது போட்டி நிறுவனத்தின் தயாரிப்பு வழக்கு கடும் போட்டியை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் யெஸ்டி பைக்கில் விற்பனை பெரிய அளவில் போட்டி நிறுவன பைக்கில் விற்பனையை பாதிக்காத இதற்கு முக்கிய காரணம் போதுமான அளவுக்கு ஷோரூம் இல்லை என்பதுதான் எதிர்காலத்தில் இந்த பிரச்சினையை சரி செய்தால் விற்பனை அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









